Monday, April 27, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part31

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-31.

 

ராகம்; யதுகுல காம்போஜி           தாளம்;அட\சாபு

 

பல்லவி: தீனிபாவமு நீகே தெலுஸுரா ஒ வேங்கடேஸ

 

இந்த பாட்டின் உள் அர்த்தம் {தத்வார்தம்} உனக்கே தெரியும் வேங்கடே

 

ச.1.அப்படுண்டே கொண்டலோன

   இப்பபூலு ஏரபோதே

   இப்பபூலு கப்பலாயரா ஒ வேங்கடேஸ        தீனிபாவமு

 

ன் தந்தையாஹா இருக்கும் நாயகன் மலையில் இலுப்பைபூவை எடுக்கப்போனால் இலுப்பைபூதவளையாயிற்று   

 

ச.2.முத்யால பந்திடிலோன

   முக்குரு வேஞ்சேயிராக

   முக்கண்டி தேவுனி சூசேரு  ஒ வேங்கடேஸ        தீனிபாவமு 

 

முத்துக்களாலான பந்த்தலில் மூன்று பேர்கள் எதிர்பார்த்து வர

மூன்று கண்களையுடைய தேவனை பார்த்தார்ஹள்

 

ச.3. ஒபளாய்ய குண்டலோன

    ஒல்யலெண்ட வேயபோதே

    ஒல்யலெல்ல மல்யலாயரா ஒ வேங்கடேஸ        தீனிபாவமு

 

ஓட்டையாக உள்ள பானையில் வடாம் மாதிரி உள்ளதை காயவைக்கப்போனால் அவைகள் மல்லிஹைபூ ஆனது

 

 ச.4.ஏடிலான வலவேஸே

   தாடிமானு நீடலாய

   தூரபோதே சோடுலேதுரா ஒ வேங்கடேஸ        தீனிபாவமு

 

ஆற்றில் வலையை போட்டார்கள் பனை மரத்தின் இலையின் நிழல் ஆற்றில் உள்ள தண்ணீரில் தெரிந்த்தது நுழைவதற்கு இடமில்லை

 

ச.5.கொண்டமீத செட்டு புட்டி

     கஞ்சிலோன காய காசே

  ஸ்ரீராங்கான பண்டு பண்டேரா ஒ வேங்கடேஸ        தீனிபாவமு

 

 மலையின் மேல் மரம் முளைத்தது காஞ்சியில் காய் காய்த்தது ஸ்ரீரங்கத்தில் பழமானது

 

ச.6.முந்து கூதுராலு ஆய

   முந்து ஆலு கூதுராய

 பொந்துகா பெண்ட்லாமு தானாய ஒ வேங்கடேஸ     தீனிபாவமு

 

மகள் மனைவி ஆனாள் மனைவி மகள் ஆனாள் நல்ல

மனைவியும் ஆனாள்

 

ச.7.ஸன்னுலெனி ஆவுபாலு

   செயிலேனிவாடு பிண்டி

   நோருலேனிவடு தாகேரா ஒ வேங்கடேஸ     தீனிபாவமு

 

பால் கறக்கும் காம்பு இல்லாத பஸுமாட்டிலிருந்து கை இல்லாதவன் கறந்து வாய் இல்லாதவன் குடித்தான்

 

ச.8.ஆகுலேனி அடவிலோன

   மூடுதோகல பெத்த புலினி

   மேகவொகடி யேத்தி மிங்கேரா ஒ வேங்கடேஸ     தீனிபாவமு

 

இலைகளே இல்லாத காட்டில் மூன்று வால் உடைய பெரிய புலியை ஆடு ஒன்று எடுத்து மிழுங்கியது

 

ச.9.ஆஹாஸானு போயே காகீ

   மூகஜூசி கேகவேசே

   மூக மூடு விதமுலாயரா ஒ வேங்கடேஸ     தீனிபாவமு

 

 ஆஹாயத்தில் சென்ற காக்காய் ஊமையானவனை பார்த்து

கூப்பிட்டது அந்த ஊமை மூன்று விதமாஹ ஆனான்

 

ச.10,புன்னம்மா வென்னலோன

    வன்நெலாடி தோனுகூடி

    கின்னரி மீடுசு பொய்யேவு   ஒ வேங்கடேஸ     தீனிபாவமு

 

பௌர்ணமி நிலவில் அழஹான பெண்களுடன் சேர்ந்துகொண்டு

கின்னரி வாத்யம் வாசித்துக்கொண்டு போனாய்

 

ச.11,அர்த ராத்ரி வேளலோனி

    ருத்ர வீணலெத்துகொனி

    நித்ரிஞ்சின நின்னு பாடக ஒ வேங்கடேஸ     தீனிபாவமு

 

நாடு நிசியில் {இரவு பன்னிரெண்டு மணிக்குமேல்} ருத்ரவீணையைஎடுத்துக்கொண்டு தூங்கும் உன்னை பாட்டுக்களால் புகழ்ந்து பாடுவது

 

 

இந்த பாட்டு முழுவதுமே விடுகதையாக இருப்பதால் படிப்பவர்களுக்கு தோன்றும் விடை அவர்களுக்கு சரியாக இருக்கும். புராணம் வேதம் சாஸ்திரம் படித்தவர்கள்   இந்த பாட்டின் உட் பொருள் சரியான விளக்கம் தரமுடியும் 

No comments:

Post a Comment