Monday, April 27, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part30

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-30.

 

ராகம்;பந்துவராளி                    தாளம்:சாபு

 

பல்லவி: ஓஹோயனரய்ய ஒக சாரி

         இட்டிஸாஹஸான திருகரோயிஜntnண்ட பாரி—ஓஹோ

 

ஒரு முறை ஓஹோ என்று சொல்லுங்கள் இப்படி விளையாட்டாஹ அலைஹிரீர்ஹளே இது சேகண்டி பாரி{பாரி=எச்சரிக்கை} {சேகண்டி; என்பது வட்டவடிவமாஹ வெங்கலத்தில் ஒரு இடத்தில் துளை இட்டு கயிறால் கட்டப்பட்டு ஒரு கையில் பிடித்துக்கொண்டு மர்ரோருகையில் ஒரு கட்டையால் அடிப்பார்ஹள் இதை பூஜை சமயத்தில் கோவில்ஹாளில் மடங்களில் அடிப்பார்ஹள் இதற்க்கு கர்நாடகாவில் ஜாகண்டே என்று பெயர்.

 

ச.1.கோநேடிராயுடு நேடு கோரி நித்ரிஞ்சியுன்னாடு

   கோனலனு திருகரோயி கோடபாரி

   வேனகடி வாகின்ட்லு பீக முத்ருலையுன்னதி

   கணமுக வாயிஞ்சேரோ கண்டபாரி—ஓஹோ


திருமலையில் இருக்கும் தெப்பக்குளத்தின் தலைவன் இன்று விருப்பப்பட்டு யோகநித்திரையில் இருக்கிறார் என்ற காரணத்தினால் நீங்கள் இஷ்டப்படி அலைஹிரீர்ஹளா? இதோ பாரி {பாரி=எச்சரிக்கை}இது இந்த கோட்டையின் எச்சரிக்கை lபின்னால் உள்ள வாசல் கதவுகள் பூட்டபட்டு முத்திரையும் வைக்கப்பட்டுள்ளது கெட்டியாக அடியுங்கள் இந்த மணியை எச்சரிக்கையாஹ். {தெலுங்கில் கோனேரு என்றால் தெப்பக்குளம்}

 

ச.2.திருமணி மாடிகலோ திருகு தேவதுலேல்ல

   மருவக திருகரோயி மட்டு பாரி

   பரகதேவதுலேல்ல படலிகையுன்னாரு

   இருவங்க சந்த்ர ஸுர்யலேதுருபாரி—ஓஹோ

 

 

அழஹான மாடத்தில் அலையும் தேவகணங்களே மறைந்து ஒளிந்து அலைஹிரீர்ஹளா இதோ உங்களுக்கு எச்சரிக்கை. காவலுக்கு இருந்த தேவதைஹள் அலுப்பு தீர lபடுத்திருக்கிரார்ஹள் இரண்டுபக்கமும் சந்த்ர ஸுர்யனின் எச்சரிக்கை.

 

ச.3.ஸ்ரீவேங்கடேஸுடு சித்தகிஞ்சி யுன்னாடு

   கோவிந்துலை திருகரோயி கோடபாரி

   ஆவல பங்காரு குதியலு கல்லனக

   தவுல ஹனுமந்த்தய்ய தலாரி பாரி—ஓஹோ

 

 

யோகநித்திரையில் இருக்கும் ஸ்ரீவேங்கடேஸன் பக்தர்ஹளை காப்பாற்றுவான் என்னும் திடமான lநம்பிக்கையில் கோவிந்தா என்று அலைஹிரீர்ஹளா? இதோ எச்சரிக்கை. காலுக்கு தங்கத்தினாலான கொலுசை அணிந்து கல் கல் என்னும் சப்த்துடன் குதித்துக்கொண்டு தமுக்கு பாரியுடன் வருகிறார் ஆஞ்சநேயர்.

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

அரசர்கள் ஆண்டு கொண்டிருந்த சமயத்தில் இரவு குறிப்பிட்ட மணிக்குமேல் ஒவ்வோருமணிக்கும் சேவகர்ஹள் நான்குமுறை எச்சரிக்கை செய்வார்ஹள் நான்காவது எச்சரிக்கைக்கு பிறகு மக்கள் எல்லோரும் வீட்டில் இருக்கவேண்டும் யாரும் வெளியில் வரக்கூடாது காலையில் சங்கு ஒலித்தபின்தான் வீட்டிலிருந்து வெளியில் வரலாம். அரசாங்க ஒற்றர்கள் காவலாளிஹளை தவிர சந்தேஹப்படும்படியாஹா யாரும் அலையக்கூடாது. முதல் எச்சரிக்கை தாரை தப்பட்டை இரண்டாவது சேகண்டி மூன்றாவது தமுக்கு நான்காவது மணி.

 

நாயகனான் இறைவன் பக்தனின் மனதில் யோகநித்திரையில் இருப்பதால் பக்தன் தன இஷ்டப்படி இருக்ககூடாது என்பதர்க்காஹ் பக்தனுக்கு விடப்படும் எச்சரிக்கையாக இந்த பாட்டு அமைந்திருக்கிறது

No comments:

Post a Comment