Sunday, February 22, 2015

Kumarasthavam

courtesy: Murugan Bhakti

குமாரஸ்தவம்
[13, 14, 15 நாமங்களின் விளக்கவுரை]


சிவபுரந்தனில் வாழ் குரு நாயகன்
சிவபுரந்தனில் வாழ் குரு நாயகன்
சிவபுரந்தனில் வாழ் குரு நாயகன்
Facebook
Facebook
Email
Email
Murugan.org
Murugan.org
Palani.org
Palani.org
Tirichendur.org
Tirichendur.org
Kataragama.org
Kataragama.org
YouTube
YouTube
Pinterest
Pinterest
குமாரஸ்தவம்
[13, 14, 15 நாமங்களின் விளக்கவுரை]
தொகுத்து அளித்தவர் 'திருப்புகழ் அடிமை' அமரர் திரு சு.நடராஜன்
 
[13] கவிராஜ பதயே நமோ நம:
கவிராஜ- புலவர்கள் அரசரது
பதயே  - தலைவனுக்கு
நமோ நம- போற்றி போற்றி
 
கவியும் கவிஞரும்:
கவி என்பது பாட்டு. கவிஞர் அதனைப் பாடும் புலவர்கள். கவிகளைப் புனையும் புலவர்களையும் கவிகள் என்பர். இவ்விதப் புலவர்கள் இருவகையினர். தம் வறுமை நீங்கவும் வாழ்க்கை நடத்தவும் உலோபிகளான உலுத்தர்களைப் புகழ்ந்து பாடல் செய்பவர்கள்.

(1) வண் புகழ் பாரி காரி என்றிசை வாது கூறும் வந்தியர்.(2) மறந்தும் மானுடர்களைப் பாடாமல் இறைவன் ஒருவனையே புகழ்ந்து (சேயவன் ஒருவனையே புகழ்ந்த அருணகிரிநாதர் போல) தமக்கும் ஏனைய உயிர்கட்கும் ஆண்டவன் அருள் தந்து உதவுமாறு வேண்டி கவி செய்ய வல்லவர்கள்.
 
இரண்டாம் பிரிவினர்களது பாடல் ஆக்கல், அழித்தல் முதலியனவும் செய்ய வல்லது. இவ்வித கலைஞர்களில் தலை சிறந்து ஒளிர்பவரை கவிராஜர் என்று கூறுவது உண்டு. நம் குமாரப் பிரான் புலவர்களனைவருக்கும் அரசராக உள்ளார்.
 
கந்தன் கவிராயன்:
ஒரு சமயம் புலவர்களனைவரும் ஒன்று கூடி தம்முள் தலை சிறந்த ஒருவரை அறிந்து கௌரவிக்க எண்ணினர். அவர்களுள் யார் தலைவர் எனத் தக்கவர் என்று நெடு நேரம் வாதம் நடந்தது. அருந்தமிழ் அன்னை ஔவையே புலவர் தலைவி என முடிவுக்கு வந்து அவளுக்கு அக்ரஹ [முதல்] தாம்பூலம் தந்து சிறப்பிக்க புலவர்கள் கூட்டமாகப் போயினர்.

அதனை அறிந்த ஔவையார் "அன்பர்களே! என்னை விட ஐந்திர வியாகரணம் முதலிய நூல்களின் ஆசிரியனான இந்திரனே அவ்வித சிறப்புக்குரியவன்; அவனிடம் செல்லுங்கள்." எனக் கூறிவிட்டாள். புலவர்களும் பொன்னுலக வேந்தனான இந்திரனிடம் சென்றனர். ஆனால் இந்திரன், தன்னிலும் அதிகம் கற்றலும் கேட்டலும் உடைய குறுமுனி எனும் அகத்தியரிடம் அனுப்பினான்.
 
மகத்துவம் மிக்க அகத்தியர் அவர்களிடம் சகலகலாவல்லிக்கே அச்சிறப்பு உரியது என்று கூறிவிட்டார். புலவர் திரள் இப்போது சரஸ்வதியைச் சார்ந்தது. அத்தேவி அவர்களை நோக்கி, "புலவர்களே! திரிபுரசுந்தரியான பார்வதிக்கு வலது கண் கல்வித் தேவியான கலைமகளும், இடது கண் செல்வத் தேவியான திருமகளும் ஆம் என்பர். ஆதலின் என்னைத் திருக்கண்களில் ஒன்றாகக் கொண்டுள்ள காமாக்ஷி [கா- சரஸ்வதி, மா-இலக்குமி, அக்ஷி- கண்களாக உடையவள்] புலவர் தலைவியாகத் தக்கவள். அவளுக்கே இத்தாம்பூலத்தை அனுப்புங்கள் என்றாள். புலவர்கள் கௌரி தேவியிடம் சென்று தம் கருத்தை வெளியிட்டனர்.

உடனே பார்வதி அம்மை, "கவிஞர்களே! அருமறை தமிழ் நூலடைவே தெரிந்திருக்கும் புலவனும், சிவஞான தேசிகனும், சங்கப் புலவர்களின் தலைமைப்புலவனும், கும்பமுனி கும்பிடும் தம்பிரானான சரவண வேளே சகலகலாமூர்த்தியாவான். அவனுக்கே அக்ரஹ தாம்பூலம் அளிக்கத் தக்கதென அருளிச் செய்தனள். அவ்வாறே புலவர் அனைவரும் கந்தபுரம் சேர்ந்து நமது குமார மூர்த்தியை அடைந்து தமது விருப்பத்தை விளக்கிக் கூறித் தாம்பூலத்தை நீட்டினர். அதிக வித சாமர்த்ய கவிராஜ ராஜனான கந்தபிரானும் தமக்கு மேல் ஒரு தலைமைப் புலவன் இல்லை ஆகையால் புன்முறுவலுடன் அவர்கள் தந்த அக்ரஹ தாம்பூலத்தை ஏற்றருளினான். உடனே எல்லாக் கவிகளும், "கவிராஜர் தலைவனே! போற்றி போற்றி! எனப் போற்றினர்.
 
புலவீர் என்று எனை அழைத்தீர் புரந்தரனே
      என அவனும் பொதிகை வெற்பின்
இலகிய கோமுனி புலவனென்றலுமே
      அவனுங் கேட்டிரங்கி நின்று
கலைமகளாம் புலத்தி எனக் கலைமகளும்
      கருத்தழிந்து கௌரி என்ன
மலையரசன் மகள் புதல்வன் சரவணவேள்
      புலவனென உகுத்தாளன்றே
இவ்வாறு சபையினர் தாங் கேட்டு நனி
      விம்மிதமுற்று இயம்பவொணாத
துவ்வாரும் ஒளிவடிவிற் கந்தபுரஞ்
      சென்றிறையைத் துதித்து நிற்ப
அவ்வாறங் குணர்ந்தருளிப் புன்னகை பூத்
      திவ்வரிசை அழகிற் கொண்டேம்
தவ்வாத குணத்தீர்! எனும் சகலகலா வல்லவன் நம் சாமிதானே!

 
மற்றொரு சிறப்பு:
அருட்கவிகள் என்பார் அருளும் பாடல்களும் ஆக்கல் முதலிய அத்தொழில்களை ஆற்றவல்லது என்பது முன்னர் கூறப்பட்டது. அவ்வாறு கவி செய்த கவிராஜர் காழிக் கௌணியர் கோனான திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளே அவரது அமிர்த கவித் தொடையான தேவாரப் பாக்கள் ஐந்தொழில்களையும் செய்துள்ளன.
(1) சிவனேசர் குடத்தில் இட்டு வைத்திருந்த எலும்பை அங்கம் பூம்பாவையாக உயிர் பெறச் செய்தது-ச்ருஷ்டி-ஆக்கல்.
[பதிகம்-மட்டிட்ட புன்னை]
 
(2) பஞ்சத்தால் வாடிய மக்கட்கு இறைவன்பால் படிக்கசு பெற்று உணவளித்தது.
ஸ்திதி-அளித்தல். [பதிகம்-வாசி தீரவே காசு நல்குவீர்]
 
(3) சமணரை அனல்- புனல் வாதங்களில் வென்று கழுவேறச் செய்தது.
சம்காரம்-அழித்தல். [பதிகம்-போகமார்த்த பூண்முலையாள், வாழ்க அந்தணர்]
 
(4) திருமறைக்காட்டில் வேதம் பூசித்த திருக்கதவு அடைக்கப் பாடியது.
திரோபாவம்-மறைத்தல் [பதிகம்-சதுரம் மறை]
 
(5) ஆச்சாபுரத்தில் தமது திருமணத்திற்கு வந்த அனைவரும் சிவலோக வாழ்வு பெறுமாறு சிவச் சோதியில் கலக்கச் செய்தது.
அனுக்ரஹம்-அருளல் [நல்லூர்ப் பெருமணம்]
 
இவரது அருட்கவிகள் எல்லா உயிர்க்கும் பயனளித்த சிறப்பை ஆண்பனையைப் பெண்பனை ஆக்கியதாலும் (பதிகம்- பூத்தேர்ந்தாயன! திருப்புகழ்- தவர் வாள்)
மருகலில் விடம் தீர்த்ததும் (சடையாய்) கொடிமடச் செங்குன்றூரில் குளிர் சுரம் நீக்கியதும் [பதிகம்-அவ்வினைக்கு இவ்வினை], கொல்லி மழவன் மகள் குமர கண்ட வலி நீக்கியதும் [பதிகம்-துணிவளர் திங்கள்] கூன் பாண்டியனுக்கு வெப்பு நோயும் கூனும் தொலைத்ததும் [பதிகம்-மந்திரமாவது நீறு, செய்யனே] பிறவும் விளக்குவனவாம்.

"பயனாகும் நல் ஆண்பனைக்கு, விடத்திற்கு மயிலாகும்
நோய்க்கு மருந்தாம்- உயிராகும்
சிந்தும் எலும்பிற்கு- சிரபுரத்து நாவலன்
சம்பந்தன் இயம்பு திருப்பாட்டு. [நால்வர் நான்மணி மாலை]
மேலே கூறிய திரு ஞானக்கன்று அபர சுப்ரமண்யத்தின் அவதாரம் என்பர். இவர்தம் அருள் வாழ்க்கை, அற்புதச் செயல்களால் தந்தை மரபு தாய் மரபுகளை விளக்கும் திரு விளக்காய் இருந்தார்.
"உபயகுல தீபதுங்க விருது கவிராஜ சிங்க
உறைபுகலியூரிலன்று வருவோனே"

                                -கருவின் உருவாகி.
என்ற பழநித் திருப்புகழையும் உன்னுக.
 
இறையனார் அகவியல் உரை பற்றி எழுந்த சங்கப் புலவர் கலக்கத்தை உருத்திர சென்மர் என்னும் ஊமைப் பிள்ளையாயிருந்து நீக்கியதும், (ஈடாய ஊமர் வணிகரில்...) .(சீரான) மேலும் நாயகன் கவிக்கும் குற்றம் நாட்டிய புலவர் நக்கீரர், கோழியைப் பாடி குஞ்சைப் பாட மாட்டேன் என்ற பொய்யா மொழிப் புலவர், பழநித் தல புராணம் பாடிய பால சுப்ரமண்யக் கவிராயர், வென்றிக் கவிராயர், சந்தப் புலவர் பெருமான் அருணகிரிநாதர் போன்ற பிற புலவர் தலைவர்கள் போற்றும் மாபெரும் தலைவன் முருகவேள் ஆதலின் பாம்பன் அடிகளார் "கவிராஜ பதயே நமோ நம" என்றனர்.

'நூலறி புலவ' (திருமுருகாற்றுப்படை)
'சுத்த வீரச் சூரர் பட்டு விழ வேலை தொட்ட கவிராஜப் பெருமாள் காண்'-'கைத்தருண' (திருப்புகழ்)
 
[14] தபராஜ பதயே நமோ நம:
தபராஜ- தவத்திற்கு அரசனான
பதயே- தலைவனுக்கு
நமோ நம- போற்றி போற்றி
தவம்:- தபம் என்பது வடசொல். தவம் என்று தமிழில் வழங்கும் 'தபு' என்ற தாதுவுக்கு 'கொளுத்துதல்' 'to burn' என்று பொருள். மன ஒருமை பெறவும் ஆசை முதலிய அழுக்குகளைப் போக்கவும் அவற்றின் இருப்பிடமான உடலை, 'ஒறுத்தல்' என்பதாம். இக்கருத்தையே தவம் என்பதற்கு "மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களால் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயிலில் நிற்றலும் முதலிய செயல்கள் மேற்கொண்டு அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்து பிற உயிர்களை ஓம்புதல் என்று பரிமேலழகர் உரை கூறியது காண்க.

"நண்பகற் பலவுடன் கழிந்த உண்டியர்
இகலொடு செற்ற நீக்கிய மனத்தினர்"
                      -திருமுருகாற்றுப்படை
 
"உற்ற நோய் தோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு"
                                          -குறள்


தவம் என்பது உணவில்லாமை அன்றி வேறில்லை என்ற பொருளில்
"த ப இதி தபோ நாநசநாத்பரம்"
தைத்ரியருண சாகை நாராயணத்தில் வருகிறது அவற்றால் உணவு முதலியவற்றை ஒழித்து இயற்றப்படும் விரதங்கள் தவம் எனப்பட்டன. இவை அனைத்தும் உள்ளம் தூய்மையுற்று, இறைவனை ஒருமுக உணர்வுடன் தியானிக்க அமைந்த உபாயமே என்க.
"நாதபஸ் கஸ்யாத் மஜ்ஞாநேதிகம்: கர்மசித்திர்
வேத்யேவம் ஹ்யாஹ தபஸாப் ராப்யதே ஸத்வம்."

[தவசில்லார்க்கு ஆன்ம ஞானம் உண்டாதல் இல்லை. கன்ம ப்ரயோஜனமும் உண்டாதல் இல்லை. ஏனெனில் தவசினால் சத்துவம்- சித்தசுத்தி ஏற்படுகிறது." என்று மைத்ராயண்ய உபநிஷத்தில் காணப்படுகிறது. எனவே சித்த சுத்தியின் பொருட்டு செய்யப் படுவது தவம் எனப் பெற்றோம்.

"உணவிலே உயிர் இருக்க உற்ற இக்க்காலத்து மாந்தர் இத்தவத்தை இயன்ற அளவே இழைக்கத் தக்கவர் ஆவர். இன்னோர் போன்றார் அல்லாதாரே பண்டைக் காலங்கள் பன்னெடு நாள், பல்லாயிர ஆண்டு தவம் இழைத்திருந்தனர். இவ்விவரம்
"உயிரானது முதல் [க்ருத] யுகத்தில் எலும்பிலும்
இரண்டாம் [த்ரேதா] யுகத்தில் தசையிலும்
மூன்றாம் [த்வாபர] யுகத்தில் உதிரத்திலும்
நான்காம் [கலி] உகத்தில் சோறு

முதலியவற்றிலிருக்கும் என்று பராசர ஸ்ம்ருதி ஆசார கண்டம் பகர்வதை பாம்பனடிகள் எடுத்துக் காட்டி இவ்வித தவமும் முன்னே செய்த புண்ணிய பயன் உடையார்க்கே கூடும். "தவமும் தவமுடையார்க்கே ஆகும்" என்பார்.அதனால் நம் அருணகிரியார் "காய்கனி துய்த்தும் காயம் ஒறுத்தும் காசினி முற்றும் திரியாதே" (காவி உடுத்தும்) என்றும், இளம்பூரணனது வசனம் இணையடிக் கமலாலயத்தில் அரை நிமிட நேர மட்டில் செய்யத்தக்க முறைப்பட்ட த்யானமே தாம் என்றனர்.

"வேடர் செழுந்தினை காத்து இதண் மீதிலிருந்த பிராட்டி விலோசன அம்புகளால் செயல் தடுமாறி மேனி தளர்ந்துருகா பரிதாபமுடன் புன மேல் திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி நாடறியும்படி கூப்பிடு நாவலர் தம் களை ஆர் பதினாலுலகங்களும் ஏத்திய இரு தாளில் நாறு கடம்பணியாப் பரிவோடு" பணிந்து ஷடாக்ஷரம் நாட அருந்தவம் வாய்ப்பது ஒருநாளே என்கிறார். மலையாறு கூறெழ வேல் வாங்கினானை வணங்கும் அன்பு நிலையே மாதவம் என்றறிகிறோம்.

தவராசன்:- அரசன் என்பான் குடிமக்களைக் காக்கும் கடமை பூண்டவன். அவனது ஆட்சியில் நாட்டில் வாழும் நன்மக்களே அன்றி காட்டில் வாழும் கடும் தவசியர்களையும் அவர் தாம் மேற்கொள்ளும் தவம் முதலியவற்றிற்கு இடையூறு வாராமலும் காக்கின்றவன் ஆதலால் [அந்தண் மறை வேள்வி காவற்கார] காவலன் என்றும் ஒரு பெயர் அவனுக்கு வழங்கும். நமது முருகவேளும் "தவ மாதவங்கள் பயில் அடியார்கண"ங்களைக் காக்கின்றான். [சிவஞான புண்டரிக]

"முலையிள மதியை எடுத்துச் சாத்திய
சடைமுடி இறைவர் தமக்குச் சாத்திர
முறையருள் முருகா!
தவத்தைக் காப்பவர் தம்பிரானே!
[இருள் விரி]


வேறு பொருள்:- தபராஜனாகிய பதி என்னாது தபராஜர்களது பதி எனவுமாம். தபராஜர் ஆவார் அகத்தியர், நாரதர், அருணகிரியார் முதலிய தவ முனிவர்கள், பராசர் முநிவர் மக்களான ஆறு முநிவர்களுக்கும் தலைவனான குமாரபிரானுக்கும் போற்றி போற்றி என்றும் கூறலாம்.
 
தணிகைத் தவசியர்
காமன், மக்கள் மனத்தில் காமக்கனலை மூட்டுதற்கு என்றே, மா, தாமரை, முல்லை, அசோகு, முழுநீலம், என்ற ஐந்து மலர்களை அம்புகளாக வைத்துள்ளான். அதனால் அவனுடைய முயற்சி முற்றிலும் வெற்றி பெறும். அவ்வித மலர்களை எடுத்துத் தொடுத்து மாலைகளாக்கி அணிந்து கொண்டனர் அழகிய மங்கையர்.
"படரல்லிமாமல்ர் பாணமதுடை வில்லி மாமதனார்" [அணி செவ்வி]. ஐம்புலன் அடக்கி தணிகை மலையில் அருந்தவம் செயும் தவசியர் முன்பு பாடலும் நிகழ்த்தினர்.

தவராஜபதியான தணிகை நாயகன் தவத்தைக் காப்பதால் அவர்களது தவம், எவ்வாற்றாலும் கலையவே இல்லை. அது மட்டுமா? மேலும் மேலும் நீண்டு, ஓங்கி வளர்வதாயிற்று. இதனைக் கண்ட மெல்லியலார் வியந்து நின்றனர். அவ்வித மெய்யான தவத்து மேலோர் வாழும் தணிகை மாமலை தம்பிரானாக குமரபிரான் விளங்குகின்றானாம்.

"மாரன் வெற்றி கொள் பூ முடிக் குழலார் வியப்புற நீடு மெய்த்தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே!" [ஏது புத்தி] என்று நம் அருணகிரியார் அருளுவது காண்க.
 
எனவே தவம் என்பது புலனடக்கி புள்ளி மயிலோனைப் போற்றுவதே எனவும், அவ்விதத் தவசியரைக் காக்கும் தலைவன் ஷண்முகநாதன் என்பதும், அதனால்தான் மெய்த்தவர்கள் தணிகையில் நீடு வாழ்கின்றனர் எனவும் இரத்னச் சுருக்கமாக இயம்பும் அழகை எண்ணிப் பாருங்கள். ஆதலால் நமது பாம்பனடிகளும் தவபதியாகவும், தவசியர் வணங்கும் மாபெரும் தலைவனாகவும் விளங்கும் வேல் அண்ணலுக்கு வணக்க்ம் என்று கூறினார்.
 
[15] இக பர பதயே நமோ நம:
இகம்- இவ்வுலகத்திற்கும்
பரம்- மறு பிறப்பில் அடையும் சுவர்க்கம் முதலிய உலகத்திற்கும்
பதயே- தலைவனாம் குமரனுக்கு
நமோநம- போற்றி போற்றி
இகபரம்- மக்கள் பெறத்தக்க வாழ்வு இகத்திலும், பரத்திலும் என இருவகைப்படும்.
இகத்திலடைவது- அறம், பொருள், இன்பம் என்பவற்றால் வரும்.

பரத்திலடைவது- பிறந்து இறவாப் பெருமையை உடைய வீடு பேற்றினால் வரும். மேலும் இம்மை நலன் என்னும் இவ்வுலக இன்ப வாழ்விற்கு இன்றியமையாதது பொருள். மறுமை நலனாகும் அவ்வுலக வாழ்விற்கு அவசியமானது அருள்.
"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு." என்று வள்ளுவரின் தெள்ளு தமிழ் செப்புகிறது.
 
பொருளின் சிறப்பு
இம்மையிலடையத் தக்கன எல்லாவ்ற்றிற்கும் பொருளே ஏதுவாகும். இதனால்தான் அறம், பொருள், இன்பம் என்று வரிசைப் படுத்தும்போது பொருள் நடுவிலே வைத்துக் கூறினர் பெரியோர். பொருள்தான் அறத்தை வளர்ப்பதும் இன்பத்தை எய்துவிப்பதும் ஆகும்.
"வடுவிலா வையத்துள் மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்."

[இவ்வுலகில் பொருந்திய அறம், பொருள், இன்பம் என்ற மூன்றில், நடுவிலுள்ள பொருள் கிடைத்தால் மற்ற இருபுறங்களிலும் உள்ள அறமும் இன்பமும் கிடைக்கும் என்ற நாலடியார் வாக்கும் நோக்கத் தக்கது. எனவே இம்மையில் வாழ்வு வளம் பெறப் பொருளே வேண்டப்படுவது.

"முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்" என்ற மணிவாசகமும் காண்க. முருகபிரானாரை வழிபடுவார்க்கு அவன் பொன்னாய், மணியாய், பொருளாயிருந்து பொன்னும், மெய்ப்பொருளும், போகமும் தருவான். அதனால்தான் அவனை நம் அருணகிரிநாதரும்

"பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே" என்கிறார். இதனால் இகத்திற்குரிய பொருள் முதலிய குன்றா வளங்களும், பிற குறைவிலாச் செலமும் ஈவான் குமரன் என்க.
 
அருளின் அருமை
"அருட்செல்வம் செல்வத்துட் செல்வம், பொருட்செல்வம்
பூரியார் கண்ணுமுள."
பலவகைப்பட்ட செல்வங்களால் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வம் அருளால் வருவதே. அதைத் தவிர்த்த பிற பொருளால் வரும் செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன. எனவே பெரியோர்கள் "அருள் தருவாயே" என்றே வேண்டுவர்.
"யாம் இரப்பவை-
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாராயே"

[உருளுகின்ற சொத்துக்களாகவுள்ள கடப்ப மாலை அணிந்த பிரானே! உன்னிடம் நாங்கள் வேண்டுபவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல. அருள், அன்பு, அறன் என்ற மூன்றுமே] என வரும் பரிபாடல் அடிகள் சிந்திக்கத் தக்கன. இவ்வாறு அருள் வேட்கையுற்ற அறவோர் வேண்டுவர். குகபிரான் அருளும் பொருளும் அனைத்தும் அவரவர் குறிப்பறிந்து உதவுவான். "மாந்தர்க்கு அமரர்கள் வேந்தற்கு அவரவர் வாஞ்சைப்படியருள் பெருமாளே".

வேறு வகை
இம்மையில், நோய்ற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். உடற்பிணி கலையவும், உமைபாலன் உதவுவான்.
"இருமலுரோக முயலகன் வாதம்
      எரிகுண நாசி- விடமே, நீர்
இழிவு விடாத தலைவலி சோகை
      எழுகள மாலை இவையோடே
பெருவயிறீளை எரிகுலை சூலை
      பெருவலி வேறும் உள நோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
      படி, உனதாள்கள் அருள்வாயே"

என வேண்ட, உடல் பிணிகளை ஒழிப்பான்.
 
வறுமையற்ற வாழ்வும், வளமெலாம் நிறைந்து, அழகு, இளமை, பொன்மேனி முதலியவற்றையும் பெறுமாறு இளம் பூரணன் இனிது அருளுவான்.
"சிறிது மிடியு மணுகாதே
அமரர் வடிவும் அதிக குலமும்
அறிவு நிறையும் வரவே, நின்
அருள தருளி எனையும் மனதொடு
அடிமை கொளவும் வருவாயே"
                  [திமிர உததி]

மேலும் நல்ல வண்டி வாகனங்கள், எல்லோரும் மதிக்கத்தக்க கவித்துவம், பிரபுத்துவம், குருத்துவமும் முருகனருளால் வருவன.

"தண்டிகை கனப்பவுசு, எண்திசை மதிக்கவளர்
      சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே"

                         [ஐங்கரனை]
மண்ணாளும் மன்னரும் வணங்கத்தக்க சிறப்பும் வரும்.
"மண்டலிகரப் பகலும் வந்து சுபரட்சைபுரி
வந்தணைய புத்தியினை அருள்வாயே"

நாம் பெறத்தக்க இம்மை நலனை இலை வேல் இறைவன் இனி தரும் சிறப்பை, இரத்தினச் சுருக்கமாக,
 
"நீருண்டு, பொழிகின்ற காருண்டு விளைகின்ற
      நிழலுண்டு பலனுமுண்டு
நிதியுண்டு துதியுண்டு மதியுண்டு கதிகொண்ட
      நெறியுண்டு நிலையுமுண்டு.
ஊருண்டு பேருண்டு மணியுண்டு பணியுண்டு
      உடையுண்டு கொடையுமுண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தமுறும்
      உளமுண்டு வளமுண்டு
தேருண்டு, கரியுண்டு, பரியுண்டு, மற்றுள்ள
      செல்வங்கள் யாவுமுண்டு
தேனுண்ட வண்டுறு கடம்பணியு நின்பதத்
      தியானமுண்டாகில் அரசே!
தாருண்ட சென்னையில் கந்தகோட்டத்தில் வளர்
      தலமோங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
      சண்முகத் தெய்வமணியே!"

என்று இராமலிங்க அடிகள் அருளியது காண்க.

தொகுப்புரை:
இகத்திற்குரிய உடல் உரன், வறுமை நீங்கிய வளம், பொருள், புகழ், போகம் என்ற எல்லாம் அருளுவதோடு மறுமைக்குரிய முத்தியும் ஈவன்.

"சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு
      தகைமை சிவஞான முத்தி பரகதியும் நீ கொடுத்து
உதவி  புரிய வேணும் நெய்த்த வடிவேலா"
                             [சரண கமலாலயத்தில்]


"இகபர சௌபாக்கியம் அருள்வாயே" [வசன]
என்று ஓசை முநிவர் உரைப்பதும் உன்னுக.
இகத்திலின்ப வளங்களும், பரத்தில் பரகதியும் பன்னிருகரத்தோன் அருள வல்லான் என்பது விளங்க
"இகபர பதயே நமோ நம"
என்று பாம்பனடிகளும் பரவுகின்றார்.
"நின்மலச் செஞ்சோதி வடிவுடைய உனை அனவரதம்
      நினைப்போர்க்கு என்றும்
பொன் மயச் செம்மேனி உடம்புண்டாகும் நரைதிரைகள்
      பொருந்தா புன் கண்
தன்னுரத்தினால் உயிர் கொள் கூற்றும் அணுகாது எதினும்
       சத்தாய் நிற்கும்
சின்மயத்தின் தெருப்பிழம்பே யான் தொழுமோர்
      வேல் சமர்த்தா! சிவச்சீர்க் குன்றே
                              [பாம்பனடிகள்- திருத்தொடையல்]
"இகபரமிரண்டிலும் உயிருனுக்குயிராகி
      எங்கு நிறைகின்ற பொருளே"
                       [திருவலங்கல் திரட்டு]

No comments:

Post a Comment