களத்திர தோஷம் நீக்கும் திருக்கொறுக்கை
ஜாதகத்தில் இலக்னத்தில் இருந்து ஏழாமிடம் களஸ்திர ஸ்தானம் என்னும் திருமண வாழ்வைக் குறிப்பதாகும்.
திருமண முகூர்த்த நேரங்கள் குறிக்கும்போது ஏழாமிடம் சுத்தமாக அதாவது ஏழாமிடத்தில் ஒரு கிரகமும் இல்லாமல் இருத்தலே உத்தமமாகும்.
ஆனால் திருமண முகூர்த்த நேரத்தில் ஏழாமிடத்தில் கிரகங்கள் இருந்தால் அது களத்திர தோஷத்தைக் குறிக்கும்.
இவ்வாறு களத்திர தோஷத்துடன் திருமணம் புரிந்து கொண்டவர்களின் வாழ்வில் களத்திர தோஷத்தை சந்திக்க வேண்டி வரும்.
இவ்வாறு களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீசுக்கிரவார அம்மன் எழுந்தருளிய திருக்குறுக்கை தலத்தில் வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீசுக்கிரவார அம்மனை தரிசனம் செய்து மாங்கல்ய தானம் நிறைவேற்றுதலால் களத்திர ஸ்தானத்தில் அமைந்த கிரக சஞ்சாரங்களுக்கு ஓரளவு நிவர்த்தி கிட்டுகிறது.
ஆனால், ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாமிடத்தில் களத்திரகாரகனான சுக்கிர பகவானே எழுந்தருளி இருந்தால் அவர்களும் ஸ்ரீசுக்கிரவார அம்மனை வழிபட்டு மாங்கல்ய தானம் போன்ற தான தர்மங்களை நிறைவேற்றுவதால் திருமணத்திற்கு முன் பெண் உறவு, கனவில் பெண்களுடன் உறவு போன்ற செயல்களால் திருமண வாழ்க்கை பாதிக்கப்படாமல் உரிய நேரத்தில் காப்பாற்றப்படுவார்கள்.
மிகவும் அபூர்வமாக திருக்கொறுக்கை திருத்தலத்தில் ஸ்ரீசுக்கிரவார அம்மன் எழுந்தருளி இருந்தாலும் பாதுகாப்பு காரணத்தால் அம்மனின் விக்ரஹம் பக்தர்களின் தரிசனத்திற்கு கிட்டாவிடில் ஸ்ரீசுக்கிரவார அம்மனின் தியானத்துடன் தலவிருட்சம் கடுக்காய் மரத்தை அடிப் பிரதட்சணமாக வலம் வந்து வணங்குதலால் ஸ்ரீசுக்கிர வார அம்மனை வழிபட்ட பலனை பூரணமாகப் பெறுவார்கள்.
No comments:
Post a Comment