Tuesday, March 18, 2025

75th sarga narayaneeyam

''பகவானே, உன்னை யார் முழுமையாக அறிந்துகொள்ளமுடியும்? நீ அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக ஒளிர்பவன். ஸாஸ்வதன் . ஆனந்த ஸ்வரூபன். எல்லையற்ற பிரம்ம ஸ்வரூபி. மதுராவுக்கு வரும் முன்பு கோபர்களில் ஒருவனாக மட்டுமே உன்னை காட்டிக்கொண்டவன். உன் அருளாசி பெற்ற வ்ரஜ பூமி மக்கள் பாபம் நீங்கியவர்கள். ஆனந்தமாக உன்னோடு வாழ்ந்ததையும் உன் பால்ய சேஷ்டிதங்களையும் ஆனந்தமாக என்றும் எப்போதும் நினைவு கூறுபவர்கள்.

चाणूरो मल्लवीरस्तदनु नृपगिरा मुष्टिको मुष्टिशाली
त्वां रामं चाभिपेदे झटझटिति मिथो मुष्टिपातातिरूक्षम् ।
उत्पातापातनाकर्षणविविधरणान्यासतां तत्र चित्रं
मृत्यो: प्रागेव मल्लप्रभुरगमदयं भूरिशो बन्धमोक्षान् ॥६॥

chaaNuurO mallaviirastadanu nR^ipagiraa muShTikO muShTishaalii
tvaaM raamaM chaabhipede jhaTa jhaTiti mithO muShTipaataatiruuksham |
utpaataapaatanaakarShaNa vividharaNaanyaasataaM tatra chitraM
mR^ityOH praageva mallaprabhuragamadayaM bhuurishO bandhamOkshaan || 6

சாணூரோ மல்லவீரஸ்தத³னு ந்ருபகி³ரா முஷ்டிகோ முஷ்டிஶாலீ
த்வாம் ராமம் சாபி⁴பேதே³ ஜ²டஜ²டிதி மிதோ² முஷ்டிபாதாதிரூக்ஷம் |
உத்பாதாபாதனாகர்ஷணவிவித⁴ரணான்யாஸதாம் தத்ர சித்ரம்
ம்ருத்யோ꞉ ப்ராகே³வ மல்லப்ரபு⁴ரக³மத³யம் பூ⁴ரிஶோ ப³ந்த⁴மோக்ஷான் || 75-6 ||

குவலயாபீட மரணம் விளைவித்த சலசலப்பு சற்று அடங்கியது. கம்ஸன் அறிவித்திருந்த மல்யுத்த நிகழ்ச்சி அடுத்து துவங்கியது. அவன் ஆணைப்படி, மல்யுத்தத்தில் தலை சிறந்த கொடிய பலசாலி சாணூரன் மேடையில் ஏறிவிட்டான். ''கிருஷ்ணா, வா என்னோடு மல்யுத்தம் செய் என்று அறை கூவினான், கிருஷ்ணா, நீ, அவனோடு மல்யுத்தம் செயதாய். முடிவு எல்லோருக்கும் தெரிந்தது தான். புதிதில்லை. சாணூரன் தோற்றான். மாண்டான். அவனைத் தொடர்ந்து முஷ்டீகன் எனும் மல்யுத்த பலசாலியும் பலராமனுடனும் கிருஷ்ணனுடனும் மோதி மாண்டான். அவனுடைய இழு பறி வித்தைகள் அங்கே செல்லவில்லை.

हा धिक् कष्टं कुमारौ सुललितवपुषौ मल्लवीरौ कठोरौ
न द्रक्ष्यामो व्रजामस्त्वरितमिति जने भाषमाणे तदानीम् ।
चाणूरं तं करोद्भ्रामणविगलदसुं पोथयामासिथोर्व्यां
पिष्टोऽभून्मुष्टिकोऽपि द्रुतमथ हलिना नष्टशिष्टैर्दधावे ॥७॥

haa dhikkaShTaM kumaarau sulalitavapuShau mallaviirau kaThOrau
na drakshyaamO vrajaamastvaritamiti jane bhaaShamaaNe tadaaniim |
chaaNuuraM taM karOdbhraamaNa vigaladasuM pOthayaamaasithOrvyaaM
piShTO(a)bhuunmuShTikO(a)pi drutamatha halinaa naShTashiShTairdadhaave || 7

ஹா தி⁴க்கஷ்டம் குமாரௌ ஸுலலிதவபுஷௌ மல்லவீரௌ கடோ²ரௌ
ந த்³ரக்ஷ்யாமோ வ்ரஜாமஸ்த்வரிதமிதி ஜனே பா⁴ஷமாணே ததா³னீம் |
சாணூரம் தம் கரோத்³ப்⁴ராமணவிக³லத³ஸும் போத²யாமாஸிதோ²ர்வ்யாம்
பிஷ்டோ(அ)பூ⁴ன்முஷ்டிகோ(அ)பி த்³ருதமத² ஹலினா நஷ்டஶிஷ்டைர்த³தா⁴வே || 75-7 ||

அவையில் அரங்கத்தில் எல்லோருக்கும் அதிர்ச்சி. எவ்வளவு சிறிய பிள்ளைகள். இவர்களோடு இந்த பலசாலி பயில்வான்கள் மோதுகிறார்கள், கொன்று விடப்போகிறார்கள் என்று அஞ்சினார்கள். ஆனால் சாணூரனைப் பிடித்து அடித்து தலைக்கு மேல் தூக்கி சக்கரம் போல் சுழற்றி அவன் மயங்கி நுரை தள்ளி உன்னால் வேகமாக தரையில் வீசப்பட்டு நொறுங்கி ரத்தம் கக்கி மாண்டதைப் பார்த்து அதிசயித்தனர். முஷ்டீகனை பலராமன் அவ்வாறே கொன்றான். உன்னோடு மோத தயாராக இருந்த மற்ற மல்யுத்த வீரர்கள் கெட்டிக்காரர்கள். அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடியதால் உயிர் பிழைத்தார்கள்.

कंस संवार्य तूर्यं खलमतिरविदन् कार्यमार्यान् पितृंस्ता-
नाहन्तुं व्याप्तमूर्तेस्तव च समशिषद्दूरमुत्सारणाय ।
रुष्टो दुष्टोक्तिभिस्त्वं गरुड इव गिरिं मञ्चमञ्चन्नुदञ्चत्-
खड्गव्यावल्गदुस्संग्रहमपि च हठात् प्राग्रहीरौग्रसेनिम् ॥८॥

kamsa sanvaarya tuuryaM khalamatiravidan kaaryamaaryaan pitaR^Istaan
aahantuM vyaaptamuurtestava cha samashiShad duuramutsaaraNaaya |
ruShTO duShTOktibhistvaM garuDa iva giriM ma~nchama~nchannuda~nchat
khaDgavyaavalga duHsangrahamapi cha haThaat praagrahiiraugrasenim || 8

கம்ஸஸ்ஸம்வார்ய தூர்யம் க²லமதிரவித³ன்கார்யமார்யான் பித்ரும்ஸ்தா-
நாஹந்தும் வ்யாப்தமூர்தேஸ்தவ ச ஸமஶிஷத்³தூ³ரமுத்ஸாரணாய |
ருஷ்டோ து³ஷ்டோக்திபி⁴ஸ்த்வம் க³ருட³ இவ கி³ரிம் மஞ்சமஞ்சன்னுத³ஞ்சத்
க²ட்³க³வ்யாவல்க³து³ஸ்ஸங்க்³ரஹமபி ச ஹடா²த்ப்ராக்³ரஹீரௌக்³ரஸேனிம் || 75-8 ||

No comments:

Post a Comment