Courtesy:Sri.Balasubramanian Vaidyanathan
இல்லாளின் பெருமை
இன்றைக்கு பாகவதம் எழுதுகையில் ஐந்து முத்தான ஶ்லோகங்கள் வந்தன.
திதி (दिति) மாதா தன் பதியான கஶ்யபரிடம் பிள்ளை வரம் கேட்கிறாள். அதற்கு கஶ்யப ப்ரஜாபதி அளிக்கும் பதில் இந்த ஶ்லோகங்கள். மூன்றாவது ஸ்கந்தம் - பதினான்காவது அத்யாயம் - ஶ்லோகங்கள் 16 முதல் 20 வரை.
एष तेऽहं विधास्यामि प्रियं भीरु यदिच्छसि ।
तस्याः कामं न कः कुर्यात्सिद्धिस्त्रैवर्गिकी यतः ॥ १६॥
सर्वाश्रमानुपादाय स्वाश्रमेण कलत्रवान् ।
व्यसनार्णवमत्येति जलयानैर्यथार्णवम् ॥ १७॥
यामाहुरात्मनो ह्यर्धं श्रेयस्कामस्य मानिनि ।
यस्यां स्वधुरमध्यस्य पुमांश्चरति विज्वरः ॥ १८॥
यामाश्रित्येन्द्रियारातीन् दुर्जयानितराश्रमैः ।
वयं जयेम हेलाभिर्दस्यून् दुर्गपतिर्यथा ॥ १९॥
न वयं प्रभवस्तां त्वामनुकर्तुं गृहेश्वरि ।
अप्यायुषा वा कार्त्स्न्येन ये चान्ये गुणगृध्नवः ॥२०॥
பயந்த ஸ்வபாவத்தினளே! ப்ரியமாக எதை விழைகிறாயோ, இதை உன்னுடையதாக நான் விதிக்கிறேன்(அளிக்கிறேன்). யாரிடமிருந்து மூன்று வர்கமானது (அறம், பொருள், இன்பம்) ஸித்திக்கிறதோ, அவளுடைய விருப்பத்தை எவன் செய்யாமலிருப்பான்?
களத்ரவான் (மனைவியுடையவன் - க்ருஹஸ்தன்) தன் ஆஶ்ரமத்தினால் அனைத்து ஆஶ்ரமத்தினரையும் தாங்கிக்கொண்டு கடலைக் கப்பலால் கடப்பது போல வ்யஸனம் என்ற கடலைக் கடக்கிறான். *
மானினீ! (மதிப்புடையவளே), ஶ்ரேயஸ் விருப்புடையவனின் (ஶ்ரேயஸ் - நல்வழியை நல்கும் இன்பம் - மேலான இன்பம்) தன்னில் பாதியாக எவளைக் கூறுகின்றனரோ, ஆண் எவளுடையதாக தனது பாரங்களை அளித்துவிட்டு ஜ்வரம் நீங்கியவனாகத் (கவலையின்றி) திரிகிறானோ,
இதர ஆஶ்ரமர்களால் வெல்லமுடியாத இந்திரியங்களாகிய எதிரியை எவளை ஆஶ்ரயித்து , கோட்டைத்தலைவன் விளையாட்டாக திருடர்களை (தஸ்யூ:) ஜெயிப்பது போல, நாங்கள் ஜெயிப்போமோ,
க்ருஹேஶ்வரியே! (இல்லத்தலைவியே), நாங்களோ, குணத்தைப் பெரிதும் விரும்பும் மற்றவர்கள் எவர்களோ, ஆயுளாலும், ஏன் முழுமையானவற்றாலும் (அனைத்துப் பிறவிகளாலும்) கூட உங்களிடம் திருப்பிச்செய்ய (ஈடு செய்ய) ப்ரபவர்கள் (ஶக்தியுடையவர்கள்) அல்லர்.
பிற்குறிப்பு : * இந்த பொருளையுடைய குறளும், மனுஸ்ம்ருதி ஶ்லோகமும்
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை - குறள் 41
यथा वायुं समाश्रित्य वर्तन्ते सर्वजन्तवः।
तथा गृहस्तमाश्रित्य वर्तन्ते सर्व आश्रमा:॥ மனுஸ்ம்ருதி 3-77
பொருள்: எவ்வாறு அனைத்துயிர்களும் வாயுவைச் சார்ந்து வாழ்கின்றனவோ, அவ்வாறே இல்வாழ்வானைச் சார்ந்து அனைத்து ஆஶ்ரமர்களும் வாழ்கின்றனர்
#ஶ்ரீமத்பாகவதீவார்த்தா
No comments:
Post a Comment