Wednesday, July 17, 2024

Whatever you get be contended - HH Bharati Teertha Mahaswamigal

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

மஹான்கள் தங்களுக்கு எது கிடைக்க வேண்டும் என்று பகவனால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ அது கிடைத்தால் போதும் என்று கருதித் திருப்தியுடனிருப்பார்கள்.  "ஈச்வரன் எது கொடுக்க நினைத்தாலும் அதில் எங்களுக்குத் திருப்தி" என்பார்கள்  அவர்கள்.  இது விஷயம் குறித்து பகவான் கீதையில் முக்கியமானதொரு  உபதேசம் கொடுத்துள்ளார்.

யத்ருச்சாலாபஸந்துஷ்டோ  த்வந்த்வாதீதோ  விமத்ஸர:  I
ஸம:  ஸித்தாவஸித்தெள ச  க்ருத்வாsபி  ந  நிபத்யதே  II

"என்னுடைய கடமையை நான் செய்கிறேன்.  எந்தப் பலன் கிடைத்தாலும் எனக்குச் சந்தோஷம்தான்" – இத்தகைய பாவனை மனிதர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும்.  இவ்வாறில்லாமல்  பலன் இவ்வளவு வர வேண்டும்.  அவ்வளவு வர வேண்டும் என்று எதிர்பார்த்தால் எந்தவிதப் பிரயோஜனமுமில்லை.  ஏனென்றால், நாம் எதிர்பார்ப்பதெல்லாம் நடந்துவிடப் போவதில்லை.  ஆகவே,  இறைவன் என்ன கொடுக்கிறானோ அதிலேயே ஆனந்தமாக இருப்பது பற்றித்தான் பகவான் கூறினார்.

No comments:

Post a Comment