தொடர் :-3
பராசரரது புத்திரரான வேத வ்யாஸர் வேதங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். மூன்று வேதத்திலும், சிற்சில மாறுதல்களுடன், ஸந்த்யாவந்தன கர்மா காணப்படுகிறது.
*ரிக்வேதம் :-*
*வேத வ்யாஸர் ரிக்வேதத்தை பைலர் என்ற சிஷ்யன் மூலமாக ப்ரகாசப்படுத்தினார்.* அந்த வேதம் 8 பிரிவாக பிரிக்கப்பட்ட்து (அஷ்டகங்கள்). ஐத்ரேயமும். கௌஷீதகி ப்ராம்மணமும் இதைச் சார்ந்ததாகும். ரிக்வேதிகளுக்கு ஆச்வலாயனர், ஸாங்க்யாயாயனர் என்ற மகரிஷிகள் முறையே ஶ்ரௌத ஸூத்ரம், க்ருஹ்யஸூத்ரம் என்ற கல்பஸூத்ரங்கள் செய்துள்ளனர். ஶ்ரௌத ஸூத்ரம் மூன்று அக்னிகளால் செய்யப்படும் யாகத்தைப் பற்றியும், க்ருஹ்யஸூத்ரம் நாற்பது ஸம்ஸ்காரங்களையும், ஸந்த்யாவந்தனம், ஶ்ராத்தம் முதலியவைகளைப் பற்றியும் கூறுவதாகும்.
*யஜுர்வேதம்:-*
*வேத வ்யாஸர் யஜுர்வேதத்தை வைசம்பாயநர் முலமாக ப்ரசுரமாக்கினார்.* யஜுர்வேதம் சுக்லயஜுஸ், கிருஷ்ணயஜுஸ் என இரண்டாகப் பிரிந்தது. சதபதப்ராம்மணம், மைத்ராயணீயம் முதலியவை இதைச் சார்ந்தவை. ஸுக்லயஜுஸ்ஸுக்கு காத்யாநர், பாஸ்கரர் க்ருஹ்யஸூத்ரங்களை எழுதியுள்ளனர். கிருஷ்ணயஜுஸ்ஸுக்கு ஆபஸ்தம்பர், போதாயனர், வைகாநசர், பாரத்வாஜர், வராஹர், ஸத்யாஷ்டர் முதலிய பலர் க்ருஹ்யசூத்ரங்கள் எழுதியுள்ளனர். இவைகளில் ஒன்றுக்கொன்று மற்றக் கர்மாக்களில் மாறுதல் உண்டு என்றாலும் *ஸந்தியாவந்தனத்தில் மாறுதலில்லை*.
*ஸாமவேதம்:-*
*வேத வ்யாஸர் ஸாம வேதத்தை ஜைமிநி மூலமாக பிரசுரம் செய்தார்.* சாந்தோக்யம், தண்டியம், தலவகாரம் என்பவை ஸாமவேதத்தைச் சார்ந்தவை. இதற்குக் கல்பஸூத்ரம் எழுதியவர் த்ராஹ்யாயணர் கோபிலர்.
ஒரே வேதமாயிருந்தாலும், *ஸந்த்யாவந்தனத்தில் ஆந்த்ரர், மத்வர், வைஷ்ணவர், ஸ்மார்த்தர் ஆகியோருக்குள் அவா அவா ஸுத்ர ப்ரகாரம் சிற்சிறு பேதங்கள் உண்டு*.
தொடரும்.....
No comments:
Post a Comment