3) *அப்யஸித்தவாறும்* ( Getting Educated)
அப்புள்ளாரும், தம்முடைய ஆசா ர்யனின் ( நடாதூர் அம்மாள்) நியமனத்தை ( order) தலையால் தாங்கி, குழந்தைக்கு தக்க வயது வந்தவாரே உபநயனம் செய்து, வேத வேதாந்தங்கள் போன்ற சகல ஸாஸ்திரங்களையும் உபதேசம் செய்து வைத்தார்.
*மாதுலாத் அகிலாம்நாயாந் மதிமாந க்ரஹுச்ச ய:*
*புனர் உச்சாரணாபேக்ஷ ரஹிதம் தம் குரும் பஜே |* |
(சிறந்த புத்திமான் ஆனவர் தன்னுடைய மாமாவான அப்புள்ளாரிடம் இருந்து எல்லா வேதங்களையும் மீண்டும் உச்சரிக்க தேவை இல்லாமல் ஒரே சந்தையில் கற்றுக் கொண்டாரோ அந்த குருவை )
*மீமாம்ஸை தர்க ஸப்தாதி ஸாஸ்திரான்யபி மாதுலாத்*
*அவாப விம்ஸத்யம் தே ய: தம் வித்யாநிதிம் ஆஸ்ரயே* ||
(மீமாம்ஸா தர்க்கம் வ்யாக்கரணம் முதலான சாஸ்திரங்களையும் எவர் தனது மாமாவிடமிருந்து *20 வயதிலேயே* எல்லாவற்றையும் பெற்றாரோ, கல்வியை செல்வமாக பெற்ற அவரை அஸ்ரயிக்கிறேன்)
இதனை ஸ்ரீ தேசிகன் தாமே ஸங்கல்ப சூரியயோகத்திலே
*விம்ஸத் அப்தே விஸ்ருத நாநாவித வித்ய: ( 20 வயதிற்குள் விசேஷமாக கற்கப்பட்ட அநேக விதங்களான வித்யையை உடையவர்)* என்று அருளிச் செய்தார்.
பிறகு ஸ்ரீதேசிகன் தமக்கு எல்லா விதத்திலும் சமமாக இருக்கக்கூடிய *திருமங்கையார்* என்னும் ஒரு கன்னிகையை பாணி க்ரஹணம் ( *கல்யாணம்* ) செய்து கொண்டு க்ருஹஸ்த தர்மத்தை சாஸ்திர முறைப்படி நடத்திக் கொண்டு வந்தார். ..
ஆசார்ய சம்பூவில்
(.காந்த்யா காஞ்சித் கனக லதிகாம் கந்யகாம் பர்யநஷீத் )
அதாவது தங்க கொடி போல காந்தியை உடைய ஒரு கன்னிகையை மணந்து கொண்டார். என்று நிரூபிக்கப்பட்டு , ஸ்ரீ தேசிகருடைய தேவிகளின் திருநாமம் *கனகவல்லியார்* என்று இருக்கக்கூடும் என்று சிலருடைய அபிப்ராயம்.
இப்படி எழுந்து அருளியிருக்கும் காலத்தில் அப்புள்ளார் தேசிகனிடம் தம்முடைய சுதர்சன பாஞ்ச ஜன்னியங்களை கொடுத்து தமக்கு அசாதாரணமாய் கிடைத்த ராமானுஜர் மடைப்பள்ளி ( சமயலறை) வந்த மனத்தை (ரகசியங்களை ) உபதேசித்து , அம்மாளுடைய நியமனத்தையும் ( order) தலை கட்டினார் ( fulfilled).
அப்புள்ளாம் ஸ்ரீ தேசிகனின் திருமன்பே தம்முடைய ஆசாரியன் திருவடிகளை அடைந்தார் ( Attained Moksham).
ஸ்ரீ தேசிகனும் அவரது திருக்குமாரர் ஆன பத்மநாபரை கொண்டு சரமகங்கரியத்தை ( Final rituals) யதா க்ரமம் நடத்தி வைத்தார்.
*அடுத்து கடாக்ஷம் பெற்றதை பார்ப்போம்*
தாஸன்
No comments:
Post a Comment