பொன்மழையில் நனைந்த ஏழை பிரம்மச்சாரி!
ஸ்ரீஸ்துதியால் விளைந்த மகிமை!!
வரலாற்றில் அன்னை மஹாலக்ஷ்மி பொன்மழை பொழிந்த சம்பவங்கள் நமக்கு தெரிந்து மொத்தம் மூன்று அவற்றுள் ஒன்றை தற்போது பார்ப்போம்.
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பது வள்ளுவர் வாக்கு.
செல்வத்தின் பிறப்பிடமாக விளங்கித் தன்னைத் துதிக்கும் அனைவருக்கும் வாரி வழங்குபவள் அன்னை மகாலட்சுமி.
தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்குச் செல்வச் செழிப்பை அருள்வதற்காகவே ஶ்ரீநிவாசப் பெருமாள் தன் மார்பில் அன்னை மகாலட்சுமியைத் தாங்கி தரிசனம் கொடுக்கிறார்.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருமகளின் அருள் வேண்டாதவர்கள் இல்லை.
அன்னையின் அருளை எளியவர்களுக்கும் சொந்தமாக்கவே ஆசார்யர்கள் தோன்றி பல தோத்திரங்களை அருளிச் செய்திருக்கின்றனர்.
ஸ்ரீமான வேதாந்த தேசிகர் வாழ்க்கையில் அன்னை மஹாலக்ஷ்மி பொன்மழை பொழிந்த சம்பவத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தன் வீட்டு வாசலில் துவாதசி நாளில் பிட்சை கேட்டு வந்து நின்ற ஆதிசங்கரருக்கு, தன் வசம் இருந்த ஒரே நெல்லிக்கனியையும் தானமாகக் கொடுத்தாள் ஓர் ஏழைப் பெண்.
தனக்கில்லாத நிலையிலும் பிறருக்கு உதவும் அவளின் நிலை கண்டு வருந்திய ஆசார்யர், அந்த கணத்திலேயே அன்னை மகாலட்சுமியைத் துதித்து போற்ற ஆரம்பித்தார்.
அன்னை மனம் இரங்கி பொன்மழை பொழிந்தாள். பொன்னே மழையாகப் பொழிந்ததால், `கனக தாரா ஸ்தோத்திரம் ' என்று அந்த துதி பெயர் பெற்றது.
அதேபோல அன்னை மனமிரங்கிய மற்றுமொரு நிகழ்வு, காஞ்சிமாநகரிலும் நிகழ்ந்தது.
நமது நாட்டிலுள்ள முக்கிய புண்ணியத்தலங்களான அயோத்தி, மதுரா, மாயா, காசி, அவந்தி, காஞ்சி, துவாரகா ஆகிய 7 நகர்களில் காஞ்சியே முக்கியமான சிறப்பினை உடையது.
இதையே `முக்திதரும் நகர் ஏழில் முக்கியமாம் காஞ்சிதனில்' என்று காஞ்சிமாநகரின் பெருமையைப் புகழ்வார் தேசிகர்.
திரும்பும் திசையெங்கும் திருக்கோயில்களே காட்சியளிக்கும் காஞ்சிமாநகரில் முக்கியமான ஒரு தலம் வரதராஜனாக எழுந்தருளி தரிசனம் கொடுக்கும் `பேரருளாளன்' திருக்கோயிலும் ஒன்று.
இந்தத் தலத்தில் அன்னை புரிந்த அற்புதங்கள் அநேகம்.
அவற்றுள் வேதாந்த தேசிகரின் வேண்டுதலை ஏற்றுப் பொன்மழை பொழிந்த நிகழ்வும் ஒன்று.
தமிழகத்தில் வைணவத்தை தழைக்கச் செய்தவர்களுள் வேதாந்த தேசிகர் மிக மிக முக்கியமான ஒருவர்.
1268ஆம் ஆண்டு புரட்டாசி மாதம், சிரவண நட்சத்திரத்தில் ஒரு புதன்கிழமை அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு மகனாக காஞ்சிபுரத்தில் உள்ள 'தூப்புல்' எனும் இடத்தில் பிறந்தார்.
இவர் திருமலை ஸ்ரீனிவாசனின் கோயில் மணியின் அம்சமாக பிறந்தவர்.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன்.
பின்னாளில் இவர் 'சுவாமி தேசிகன்', 'தூப்புல் நிகமாந்த தேசிகன்', 'தூப்புல் பிள்ளை', 'உபயவேதாந்தாசாரியார்',
'சர்வ தந்திர சுதந்திரர்' மற்றும் 'வேதாந்த தேசிகர்' என்னும் பல்வேறு பெயர்களால் அழைக்கப் பெற்றார்.
வேதாந்த தேசிகர் வைராக்கியத்துக்கு பெயர் பெற்றவர்.
உஞ்சவ்ருத்தி செய்தே வாழ்ந்து வந்தார். அன்றைன்றைக்கு தேவையான அரிசியை மட்டும் யாசித்து வந்து சமைத்து உண்பார்.
இவர் மீது பெருமதிப்பு கொண்ட சிலர், இவருக்கு தெரியாமல் அரிசியில் பொற்காசுகளை கலந்து இவருக்கு பிச்சையிட்டனர்.
அரிசியை களையும் போது, அதில் பொற்காசுகள் இருப்பதை கண்டவர்,
அதை கையால் கூட தொட அஞ்சி, ஒரு குச்சியை எடுத்து தள்ளிவிடுவாராம்.
வேதாந்த தேசிகருக்கு அருள் செய்ய வேண்டும் என்று தாயுள்ளத்துடன் காத்திருந்தார் தூப்புல் மரகதவல்லித் தாயார்.
அதற்கான தருணமும் கனிந்தது.
அப்படியென்றால் இவரது வைராக்கியம் எப்பேற்பட்டது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
வேதாந்த தேசிகரின் காலத்தில் நடந்த ஒரு சம்பவம். அவர் வாழ்ந்த நாளில் பிள்ளை வீட்டுக்காரர்கள்தான் பெண் வீட்டுகாரர்களுக்கு
வரதக்ஷிணை தருவார்களாம்.
ஏனென்றால் பெண் என்பவள் மஹாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்பட்ட காலம்.
அவளது அழகுக்கும் அறிவுக்கும் ஏற்ப வரதக்ஷிணையும்
அமையுமாம்.
ஒரு சமயம் அவரது ஊருக்கு திருமணம் செய்துகொள்ள பொருள் வேண்டி ஒரு பிரம்மச்சாரி வந்தான்.
ஊரில் பலரிடம் சென்று
உதவி கேட்டான்.
வேதாந்த தேசிகர் மீது பொறாமையும் துவேஷமும் கொண்ட சிலர்
(ஊருக்கு ஒரு நாலு பேரு இப்படி இல்லேன்னா.. பெரிய பெரிய விஷயங்கள் நமக்கு கிடைச்சிருக்காது போல!) அவரை கேலி செய்யவேண்டி அந்த இளைஞனை அழைத்து, "தம்பி உன் திருமணத்திற்கு பொருளை தரும் அளவு வசதி கொண்டவர்கள் இங்கே யாரும் இல்லை.
நாங்க எல்லாரும் ஆளுக்கு கொஞ்சம் கொடுத்தால் கூட தம்படி தேறாது.
நீ பேசாமல் நிகமாந்த தேசிகரை சென்று கேள். இந்த ஊரிலேயே பெரிய செல்வந்தர் அவர் தான். மறுக்காமல் உதவி செய்வார்" என்று அந்த பிரம்மச்சாரியை தேசிகரிடம் அனுப்பினர்.
தேசிகரிடம் வந்த இளைஞன் அவரை நமஸ்கரித்துவிட்டு, "சுவாமி… தங்கள் கொடைத்தன்மையை பற்றி கேள்விப்பட்டேன்.
எனக்கு தாங்கள் தான் உதவவேண்டும்" என்று விண்ணபித்துக்கொண்டான்.
வேதாந்த தேசிகரோ தனக்கென அடுத்த
நாளைக்கு எதுவும் சேர்க்காமல் உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்து வருபவர்.
தம்மை கேலி செய்ய தம் எதிரிகள் இந்த அப்பாவி இளைஞனிடம் பொய் கூறி அனுப்பி வைத்துள்ளதை அறிந்துகொண்டார்.
'பொருளற்ற தம்மிடம் வந்து இந்த பிரம்மச்சாரி யாசகம் கேட்டு சங்கடப்படுத்துகிறானே என்று நினைக்காமல் இந்த ஏழை பிரம்மச்சாரிக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறோமே…' என்று தான் தேசிகர் வருந்தினார்.
'இவனுக்கு உதவ முடிந்தால் அதுவே எனக்கு போதும்' என்று கருதியவர், உடனே அன்னை மஹாலக்ஷ்மியை வேண்டி ஸ்ரீஸ்துதி என்கிற ஸ்லோகத்தை இயற்றி
அதை அந்த பிரம்மச்சாரிக்கு போதித்தார்.
பின்னர் அவனை தூப்புல் கோவிலுக்கு அழைத்துச் சென்று, மரகதவல்லி சன்னதியை இந்த
ஸ்ரீஸ்துதியை தானும் பாடிக்கொண்டுட அந்த இளைஞனையும் ஸ்ரீஸ்துதி ஸ்லோகத்தை கூறியபடியே வலம் வரச் செய்தார்.
ஏன், எதற்கு, என்று
கேள்வி கேட்காமல், சலித்துக்கொள்ளாமல்,
ஆசார்யரின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்த அந்த இளைஞன், ஆச்சாரியார் சொன்னதை சிரமேற்கொண்டு ஆச்சாயர் உபதேசம் செய்த `மானாதீத ப்ரதித...' என்று தொடங்கும்
25 பாடல்களைக் கொண்ட
அந்த ஸ்ரீ ஸ்துதியினைப் பாடிக்கொண்டே அந்த இளைஞன் வலம் வந்தான்.
அன்னை மரகதவல்லி பார்த்தாள். கேட்காதவர் கேட்கிறார். தனக்கென கேட்காமல் பிறருக்கு கேட்கிறார்.
அதுவும் தகுதியான ஒருவருக்கு கேட்கிறார். இது போதாதா?
"நீ கேட்கவேண்டும்…. நான் அள்ளிக்கொடுக்கவேண்டும். அதற்கு தானே காத்திருந்தேன்" என்று அன்னை மஹாலக்ஷ்மி பொன் மழையை வருஷித்தாள்.
ஶ்ரீஸ்துதியின் 16 வது பாடலான
யோகாரம்பம் ...' என்று தொடங்கும் பாடலைப் பாடத் தொடங்கியதும் வேதாந்த தேசிகருக்கு அருள் செய்ய வேண்டும் என்று தாயுள்ளத்துடன் காத்திருந்த மரகதவல்லி அன்னை பொன் மழை பொழிய தொடங்கினாள்
இதைக் கண்டு சிலிர்த்த தேசிகர் அந்த இளைஞனிடம், ` அன்னையின் அருள்
கருணையே மழையாகப் பொழிகிறது.
வேண்டுமட்டும் சிந்தாமல் சிதறாமல் பிடித்துக்கொள்' என்று சொன்னார்.
அந்த இளைஞனும் தன் மேல் துண்டினை விரித்து வீழ்ந்த பொற்காசுகளைப் பிடித்துக்கொண்டான்.
அதன் பின் தேசிகரையும் அன்னையையும் வழிபட்டு தன் வீடு திரும்பினான்.
இன்றும் தூப்புல் அன்னை மரகதவல்லியின் சந்நிதியில், `ஶ்ரீஸ்துதி' பாடி வேண்டிக்கொள்ள வறுமை விலகுகிறது என்று பக்தர்கள் சொல்கிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலும் விளக்கேற்றி ஶ்ரீஸ்துதி பாடிவர செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை. திருமணம் தொடர்பான அத்தனை சிக்கல்களும் இங்கு வேண்டிக்கொள்ள தீர்ந்து விரைவில் திருமணப் பேறு கிடைக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் எல்லாம் இங்கு மரகதவல்லித் தாயாரை வேண்டிக்கொள்ளத் தீரும் என்று நம்பப்படுகிறது

No comments:
Post a Comment