Thursday, July 18, 2024

Ornaments of Mahavishnu

எம்பெருமான் ஒருமுறை பட்டர்ரை பார்த்து, புதியதாக திருவாபரணம் சாத்தும்படி கேட்டாராம்*.

அர்ச்சகரும் யோசித்து, எம்பெருமானுக்கு மிகவும் பிடித்தமானது அருளிச்செயலே ஆனபடியால், அவைகளைக் கொண்டே புதிதாக திருவாபரணம் சாத்தலாமென்று நிர்ணயித்தார்.

பெருமாளிடம் விண்ணப்பித்து, அருளிச் செயலையும், ஆசார்யர்களின்  
ஸ்ரீ ஸூக்திகளையுமே திருவாபரணங்களாக சாற்றினாராம்.

எம்பெருமானும் மிகவும் உகந்து ஏற்றுக் கொண்டு அதிகமாக சந்தோஷப்பட்டாராம்.

அந்தத் திருவாபரணங்கள் .....

1. வலதுதிருவடி நாச்சியார் திருமொழி

2. இடதுதிருவடி .  அமலனாதிபிரான்

3. வலது திருவடியில் சாற்றியிருக்குமே தண்டைக் கொலுசு. - " ராமானுசநூற்றந்தாதி "

4. இடது திருவடி தண்டைக் கொலுசு -  *யதிராஜவிம்ஸதி

5. வலது அபயஹஸ்தம் -  
ஸ்ரீ குணரத்ந கோசம்

6. இடது ஸ்ரீஹஸ்தம் (கதையுடன்) - ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்

7. திருமார்பில் லக்ஷ்மீ ஹாரம். - திருப்பாவை "

8. யக்ஞோபவீதம் ...  பெரிய திருமொழி "

9. மகரகுண்டலங்கள் ...  
ஸ்ரீ வசநபூஷணம்
ஆசார்ய ஹ்ருதயம்

10. திருக்கரங்களில் கங்கணங்கள் .... திருமாலை,கண்ணி நுன் சிறுதாம்பு

11. திண்டு -  *ஸ்தோத்ர ரத்நம்"

12. நீள்முடி (க்ரீடம்)..... திருவாய்மொழி

13. க்ரீடத்தில் பதித்திருக்கும் வைரம் ... ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் " (தனியன்)

14. திருநெற்றியில் திருமண் காப்பு.... உபதேச ரத்னமாலை"

15. திருச்சக்கரம் .-  திருப்பல்லாண்டு

16. பாஞ்சசன்யம் .... திருப்பள்ளியெழுச்சி

17. ஆதிசேஷனின் சிரஸ்.... பஞ்ச ஸ்தவம்"...

நம்பெருமாள் திருவடிகளே சரணம்

No comments:

Post a Comment