Thursday, March 7, 2024

Kandaralanharam arunagirinathar songs both Vinayaka and muruga in single stanza

கந்தரலங்காரம் பகுதி 3
சம்பிரதாயப்படி, ஒரு நூலைத் தொடங்க வேண்டுமானால் அந்த நூலின் ஆரம்பத்தில் விநாயகரைத் துதிப்பது வழக்கம். சிவாலயத்துக்குப் போகும்போது முதலில் விநாயகரை வணங்குவது மரபு.

மரபு என்றால் என்ன 
ஒருவர் ஒரு காரியத்தைச் செய்வதற்குப் பல வழிகளிலே முயன்று கடைசியில் எந்த வழியாக வெற்றி பெற்றாரோ அந்த வழியைப் பின்னால் வருகின்றவர்களுக்கும் சொல்வதைச் சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். 

அதனை மரபு, சம்பிரதாயம் என்று சொல்வார்கள். அந்தச் 
திருவண்ணாமலை ஆலயத்தின் கோபுரம் கிழக்கு நோக்கி இருக்கிறது. அந்தக் கோபுரத்தின் வழியே உள் வாசலுக்குச் சென்றால் அந்த வாசலின் ஒரு பக்கம் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். மற்றொரு பக்கம் குமாரக் கடவுள் எழுந்தருளியிருக்கிறார்.

அருணகிரி நாதப் பெருமான் திருவண்ணாமலைக்குச் செல்கிறார். 
 கோபுர வாசலுக்கு வலப்பக்கம் விநாயகர் இருக்கிறார். இடப்பக்கம் முருகப் பெருமான் இருக்கிறார்.

 விநாயகருக்கு அவர் தனியாகத் துதி சொல்லவில்லை. விநாயகரை நினைக்கிறார். 'ஒரு பாட்டிலே விநாயகரையும் சொல்ல வேண்டும்; முருகனையும் சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறார். 

அதை எப்படிச் சொல்வது நம்  மாப்பிள்ளையைச் சொல்லும்போது தம் பெண்ணைச் சொல்லி அவரைக் குறிப்பிடுவார்கள்; "நம் மகாலட்சுமி புருஷன்" என்று குறிப்பிப்பார்கள். இதைப் போலவே அருணகிரிநாதர் பாடுகிறார்.

 "நான் திருவண்ணாமலைக்குப் போனேன். கோபுர வாசலுக்குப் போனேன். உள் வாசலில் உள்ள களிற்றுக்கு இளைய களிற்றைத் தரிசித்தேன்" என்று பாடுகிறார்.

   அடலரு ணைத்திருக் கோபுரத் தேஅந்த வாயிலுக்கு
   வடவரு கிற்சென்று கண்டு கொண்டேன்...

முருகனைக் கண்டுகொண்டேன் என்று சொல்ல வந்தவர். களிறாகிய விநாயகருக்குத் தம்பியாகிய களிற்றைக் கண்டேன் என்கிறார். அண்ணாவாகிய களிறு எத்தகையது?

வருவார் தலையில்

   தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
   கடதட கும்பக் களிறு.
"அதோ விநாயகர் வீற்றிருக்கிறார். அவரைப் பார். அந்தக் களிற்றுக்கு இளைய களிறாகிய முருகனை நான் கண்டு கொண்டேன்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

இந்த பாடலில் ஐந்து பகுதிகள் இருக்கின்றன. திருவண்ணாமலை, திருவண்ணாமலையிலுள்ள கோபுரம், அதிலேயுள்ள உள்வாயில், அந்த வாயிலுக்குத் தெற்கே இருக்கிற விநாயகர், வடக்குப் பக்கத்தில் இருக்கிற குமாரசுவாமி ஆகிய ஐந்து பொருள்களையும் இந்தப் பாடலில் காணலாம்.
தொடர்ந்து பார்க்கலாமா
பஞ்சபூத நாயகா ஆறுமுகா அருள் புரிவாய்.

No comments:

Post a Comment