Friday, December 1, 2023

bhattanatha jeeyar, bhattanatha muni

லஷ்மண (ஆதிசேஷ) அவதாரம் மாமுனிகளுக்கு,ஓர் லக்ஷ்மணனாய் சேவை செய்த, ஸ்ரீ பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் !!
💐🌸💮🏵🌹🥀🌺🌻🌷
இன்று (01/12/2023) கார்த்திகை புனர்பூசம். மணவாள மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களுள் ஒருவரான 
ஸ்ரீ பத்தங்கி பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் திருநட்சத்திரம்.கோவிந்தர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் மதுரகவியார் என்பவருடைய திருக்குமாரராக பத்தங்கி பரவஸ்து திருவம்சத்தில், காஞ்சியில் அவதரித்
தார். இவரை,கோவிந்த தாஸரப்பன், பட்டநாதன் என்றும் பூர்வாச்ரமத்தில் அழைப்பர். ஸந்யாஸாச்ரமம் ஏற்ற பின் பட்டர்பிரான் ஜீயர்/ பட்டநாத முனி என்று அழைக்கப் பட்டார்.

இந்த ஸ்வாமியின் தனியன்:
     🔊🔊🔊🔊🔊🔊🔊
"ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத
ஸேவைக தாரகம் !
பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம்!!"

"மாமுனிகள் திருவடித் தாமரைகளையே எப்போதும் புருஷார்த்தமாகஉடையவர். சகல குணங்களும்நிறைந்தவர்.
வாத்ஸல்யம் மிக்கவரான ஸ்ரீபட்டநாத முனிவரை வணங்குகிறேன்".

1.மதுரகவிகள் நிலையில் நின்ற ஜீயர்:
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தொண்டை மண்டலம்/காஞ்சியிலிருந்து, ஸ்ரீரங்கம் வந்து மணவாள மாமுனிகளை ஆஸ்ரயித்த பல ஆசார்யர்களுள் பட்டர் பிரான் ஜீயரும் ஒருவர்.மாமுனிகளே இவரைத் தன் கோஷ்டியில் போற்றிக் கொண்டாடியிருக்கிறார்.ஒரு முறை மாமுனிகள் தன் கோஷ்டியார் குழுமி
யிருந்த போது பட்டர்பிரான் ஜீயர் ஒருவரே "தேவுமற்றறியேன்" என்ற மதுரகவியாழ்வார் நிலைக்குத் தகுதி
யானவர் என்று சாதித்தார். 

மணவாள மாமுனிகளுக்கும், பட்டர்பிரான் ஜீயருக்குமான ஆசார்ய- சிஷ்ய சம்பந்தம்--

"நம்மாழ்வாருக்கும்,மதுரகவி ஆழ்வாருக்கும்,
 ஆளவந்தாருக்கும் தெய்வ வாரியாண்டானுக்கும், எம்பெருமானாருக்கும் வடுகநம்பிக்கும்"

போன்று ஒப்பிட்டுக் கூறுவர். மாமுனிகளிடத்தே 30 ஆண்டுகள் தொடர்ந்து கைங்கர்யம் செய்து, அனைத்து சாஸ்திரங்களையும் நேரடியாய்க் கற்றுத் சேர்ந்தார். 

இவர் ஒரு திருவாடிப்பூர நந்நாளில், ஆண்டாள் நாச்சியார் பிரசாதங்களை, மிகுந்த ஆதுரத்துடன் கொணர்ந்து மாமுனிகளுக்கு அளித்தார்.மிக உகந்த மாமுனிகள் இவரை
"(பரவஸ்து)பட்டர் பிரான் தாசர்" என்று கொண்டாடினார்.பின்னர் சந்யாசம் மேற்கொண்ட பின் 'பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்' ஆனார்.

மாமுனிகள் "இதற்கு முன் பரவஸ்துவான பட்டர் பிரான் ஜீயர்,இப்போது நம்முடைய வஸ்து ஆனார்.நமக்கு ஈடு இவர்" 

என்று அருளிச் செய்தார்.
பெரியபெருமாள் நியமனப்படி, தம் திருவாராதனைப் பெருமாளான ஸ்ரீரங்கராஜரையும் இவருக்குப் பிரசாதித்து, பிராப்ய நிஷ்டையில் ஊன்றச் செய்தார்.

2 மோர்முன்னர் ஐயர்/ஜீயர்:
👏👏👏👏👏👏👂👏👏
பட்டர்பிரான் ஜீயர், தன் பூர்வாச்ரமத்தில் முப்பது ஆண்டுகளாக மாமுனிகள் போனகம் செய்த சேடத்தை
(பெரியோர்கள் சுவீகரித்த பிரசாதத்தின் மீதம்) உண்டார். "மோர் முன்னர் ஐயர்" என்று பிரசித்தமாய் அழைக்கப் பட்டார் (பக்தி சிரத்தையாலே மோர் பிரசாதத்தை முதலில் ஸ்வீகரிப்பவர்). வழக்கமாக நாம் முதலில் அன்னத்துடன், பருப்பு நெளி/குழம்பு முதலியன உண்டு இறுதியாய் மோர் பிரசாதத்தை உண்போம். ஆனால் பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளின் இலையில் அமர்ந்து மாமுனிகள் ஸ்வீகரித்த மோர் பிரசாதத்தை சுவை மாறாமலிருக்க முதலில் உண்பார் (மோர் பிரசாதம் ஆரம்பித்து சாத்தமுது,
நெளி,பருப்பு முதலியன). இதனாலேயே இவர் "மோர் முன்னர் ஐயர்" என்று என்னும் திருநாமம் கொண்டு வழங்கப் பெற்றார்.

3.ஆசார்ய சிஷ்ய அபிமானம்:
👌👌👌👌👌👌👌👌
மாமுனிகள் சிஷ்யர்கள், மாமுனிகளை "பட்டநாத முனிவர அபீஷ்ட தைவதம்" எனக் குறிப்பிடுவர்கள். பட்டர்பிரான் ஜீயரின் அன்பைப் பெற்ற ஆசார்யன் என்று பொருள். அதேபோல் பட்டர்பிரான் ஜீயரை மாமுனிகளிடம் மதுரகவி நிஷ்டை உடையவராய்க் கொண்டாடுவர்.

4.மாமுனிகளுக்கே(ஆதிசேஷ/லக்ஷ்மண அவதாரம்), ஒரு லக்ஷ்மணராக விளங்கிய ஜீயர்:
💐🏵🌹🥀🌺🌻🌼
மாமுனிகள் அந்திமக் காலத்தில் அண்ணராயச் சக்ரவர்த்தி (திருமலை நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தில் அவதரித்தவர்) திருமலையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளினார். பெரியபெருமாளை மங்களாசாசனம் செய்து விட்டு, தன் தாயார் சொன்னதை சிரமேற்கொண்டு, பெரிய ஜீயரை தண்டன் சமர்ப்பிக்க பெரிய ஜீயர் மடத்தை அடைந்தார். தன் குடும்பத்துடன் பட்டர்பிரான் ஜீயர் மூலமாக, மாமுனிகளை அணுகினார். பெரிய ஜீயர் தன் திவ்ய திருவடிகளை அண்ணராயச் சக்ரவர்த்தி சென்னியில் (தலையில்) பதித்து பரிபூரணமாய் அனுகிரஹித்தார். அண்ணராயச் சக்ரவர்த்தியின் திருமலை கைங்கர்யங்களை புகழ்ந்து, பிறகு பட்டர்பிரான் ஜீயரிடம் அண்ணராயச் சக்ரவர்த்தியை தன் சிஷ்யராக ஏற்கும்படி அழைத்தார். மாமுனிகள் "ராமஸ்ய தக்ஷிணோ பாஹு" என்று சாதித்து , இராமனுக்கு 
லக்ஷ்மணன் வலது கரம்போலே – அடியேனுக்குப் பட்டர்பிரான் ஜீயர் வலது கரம் போலே; எனவே பட்டர்பிரான் ஜீயர் உமக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்து, சிஷ்யராய் ஏற்று நம் சம்பிரதாயத்தின் ஒரு தலைவராய் உம்மை நியமனம் பண்ணட்டும் – என சாதித்தருளினார். இதை அண்ணராயச் சக்ரவர்த்தி மகிழ்வுடன் ஏற்று பட்டர்பிரான் ஜீயரை தன் ஆசார்யராக ஏற்றுக்கொண்டார்.

மேல்நாட்டுத் தோழப்பர்,
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகிய ஸ்வாமிகளும் பட்டர் பிரான் ஜீயரைப் புருஷகாரமாகக் கொண்டு மாமுனிகளை ஆஸ்ரயித்தனர்.

5.ஜீயர் திருமலையில் இருந்து, செய்த கைங்கர்யங்கள்:
🤘🖐👌👍✍✍✍👌
மாமுனிகள் திருநாடு அலங்கரித்த பிறகு பட்டர்பிரான் ஜீயர் திருமலையில் இருந்து பல ஜீவாத்மாக்களை உய்வித்தார். திருமலையில் பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் மடத்தை ஸ்தாபித்தார்.ஆந்திர பிரதேசத்தில், ராமாநுஜ சம்பிரதாயத்தை வளர்த்ததில் இந்த ஜீயர் ஸ்வாமி பெரும்பங்கு ஆற்றினார்.

6."அந்திமோபாய நிஷ்டை" 
🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣
அந்திமோபாய நிஷ்டை என்னும் அற்புதமான கிரந்தத்தை அருளிச் செய்தார்.அதில் நம் ஆசார்ய பரம்பரையைக் கொண்டாடி, எப்படி நம் பூர்வாசார்யர்கள் தமது ஆசார்யர்களை ஆச்ரயித்து இருந்தனர் என விவரித்த
ருளினார்.18 அத்யாயங்கள் கொண்ட,
இந்த கிரந்தத்தின் ஆரம்பத்திலேயே அனைத்து சம்பவங்கள் மற்றும் தாத்பர்யங்கள் அனைத்தும் மாமுனிகள் தன் திருவாய் மலர்ந்து அருளியது என்றும் , தான் எழுதும் கரணமாகவே இருப்பதாயும் அறிவித்திருக்கிறார்.

"அந்திமோபாயநிஷ்டாயாவக்தா ஸௌம்யவரோமுநி: |
லேககஸ்யாந்வயோ மேத்ர லேகநீதாலபத்ரவத் |

எந்தை மணவாளயோகி எனக்குரைத்த
அந்திமோபாய நிட்டையாம் அதனை – சிந்தைசெய்து இங்கு எல்லாரும் 
வாழ எழுதிவைத்தேன் இப்புவியில்
நல்லறிவொன்றில்லாத நான்"

7.இந்தக் கிரந்தத்தின் 18 ஆம் அத்தியாயத்தின் கடைசியிலிருந்து,
ஒரு பகுதி:
👌👍👌👍👌👍👌👍🤚👍👌👋
" ஸகலாத்மாக்களும் உஜ்ஜீவிக்க வேணுமென்ற திருவுள்ளத்தையும்
உடையராய்,பரமதயாவான்களாய்
இருந்துள்ள நம் ஆசார்யர்களுடைய அபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஒதுங்கித் தாங்கள், ஸர்வஜ்ஞராகை
யாலே ஸாராஸாரவிவேகரில் தலைவராய், செய்த வேள்வியர் என்கிறபடியே க்ருதக்ருத்யராய், எப்போதும் மங்களாஶாஸநபரராய், "நானும் பிறந்தமை பொய்யன்றே" , "தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அதுகாண்டும்" என்று சொல்லுகிறபடியே பழுதாகாத வழியை அறிந்து வேறாக ஏத்தியிருக்குமவனைப்
பற்றித் தெளிவுற்று வீவின்றி, எல்லாம் வகுத்தவிடமென்று விஶ்வஸித்து மார்பிலே கைவைத்துக் கோடையிலே குளிர்காற்றடிக்க மிகவும் ஸுகோத்தரராய், "சிற்றவேண்டா" என்கிறபடியே ஒரு பரபரப்பற்று (குருபரம்பரையைப் பற்றுகை) "தேவுமற்றறியேன்" என்றிருக்கும் ஶ்ரீமாந்களான அதிகாரிகள்: >>

ஆழ்வார் திருமகளாராண்டாள், நம்மாழ்வார் திருவடிகளிலே ஶ்ரீமதுரகவியாழ்வார், 
நாதமுனி திருவடிகளிலே குருகைக்காவலப்பன், 
ஆளவந்தார் திருவடிகளிலே தெய்வவாரியாண்டான், 
எம்பெருமானார் திருவடிகளிலே வடுகநம்பி, 
நம்பிள்ளை திருவடிகளிலே பின்பழகிய பெருமாள் ஜீயர், வடக்குத் திருவீதிப் பிள்ளை, 
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளிலே கூரகுலோத்தமதாஸ நாயன், மணல்பாக்கத்து நம்பியார். திருவாய்மொழிப் பிள்ளை திருவடி களிலே நம்முடைய ஜீயர்.

நம்முடைய ஜீயர் திருவடிகளிலே இந்நிஷ்டைக்கு அதிகாரிகளாயிருக்கும் முதலிகள் பலருமுண்டு. மற்றும்
இப்படியிருக்கும் உத்தமாதிகாரிகள் இவ்வாசார்யர்களிடத்திலே இன்னமும் உண்டாயிருக்கும் கண்டுகொள்வது."

 "ஆகையாலே நம்முடைய பெரியோர்கள் எல்லாரும் திருமந்த்ரத்தில் மூன்று பதத்திலும் சொல்லப்படுகிற ஶேஷத்வ – பாரதந்த்ர்ய – கைங்கர்யங்கள் ப்ரதம பர்வமான ஈஶ்வர விஷயத்திலே அரைவயிறாய், சரம பர்வமான ஆசார்ய விஷயத்திலே பரிபூர்ணமாக ஸித்திக்கும் என்னும் இவ்வர்த்தம் இம்மந்த்ரத்தில் தாத்பர்யார்த்தமாகையாலே, அத்தை உட்கொண்டு ஸம்ஸ்க்ருதமாகவும், த்ராவிடமாகவும், மணிப்ரவாளவாகமவும், ஏககண்டமாக அருளிச்செய்த ப்ரமாண பலத்தாலே ஆசார்யாபிமாநமாகிற அந்திமோபாயத்திலே ஸுப்ரதிஷ்டிதராய்"
இருந்தனர்.

தாதொன்றும் தார்புயத்தான்
மணவாளமுனி தனது,
பாதம் பரவும், பட்டர்பிரான்முனி பல்கலையும்,
வேதங்களும் சில புராணங்களும் தமிழ் வேதியரும்
ஓதும் பொருள் அந்திமோபாயநிட்டை
உரைத்தவனே!

(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

No comments:

Post a Comment