Friday, December 1, 2023

Anadhyayana kalam Vaishnavism

*அநத்யயன காலம்!*

கார்த்திகையில், கார்த்திகை அன்று திருமங்கையாழ்வார், *நம்பெருமாளிடம் மார்கழி திருஅத்யயன உற்சவத்தில் திருமொழியுடன், நம்மாழ்வாரின் திருவாய்மொழியையும் திருச்செவிசாய்த்து அருளவேண்டும் என பிரார்த்திக்க*..

உடனே நம்பெருமாள், தாம் ஒரு ஸ்ரீமுகப்பட்டயத்தை, சகல மரியாதையுடன் ஆழ்வாருக்கு அனுப்பி அவரை, அத்யயன உற்சவத்தில் திருவாய்மொழி சேவிக்க இங்கு எழுந்தருள ஆக்ஞையிட்டார்!

அப்படி நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் இருந்து புறப்படும் நாள் முதல், அத்யயன உற்சவம் முடித்து திரும்பும் வரை உள்ள நாட்களை *அநத்யயன காலம்* என்பர் நம் பூர்வர்கள்!

இந்த அநத்யயன காலத்தில், ஆழ்வாருக்கு ஏற்றம் அளிக்கும் வகையில் கோயில்களிலும், கிரஹங்களிலும் திவ்யபிரபந்தங்களை சேவிக்கமாட்டா - *நம்பெருமாள், ஆழ்வாருக்காகவே காத்திருந்து திருவாய்மொழியை திருச்செவிசாய்த்தருளுவதால் இந்த ஏற்றம்!*

*ஆகையால் தான் மார்கழியில் திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை மட்டும் சேவிப்பது வழக்கம்!*

இந்த அநத்யயன காலம் என்பது கார்த்திகை, திருமங்கையாழ்வார் திருநக்ஷத்திரம் தொடங்கி, தை மாதம் கூரத்தாழ்வான் திருநக்ஷத்திரம், ஹஸ்தம் முதல்நாள் வரை உள்ள நாட்களாக அனுஷ்டிக்கிறோம்!!

No comments:

Post a Comment