கலியுகத்தில் ப்ரத்யக்ஷம் அம்பாள் லீலை களும் அனுக்ரஹமும் !
இந்த நிகழ்ச்சி சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் திருச்சி பெல் குடியிருப்பில் நடந்தது ! ஒரு வைஷ்ணவ தம்பதினருக்கு அன்னை சமயபுரத்தாள் எப்படி லீலைகள் புரிந்தாள் என்பது மிக ஆச்சரியமான நிகழ்ச்சி! கடவுளைத் தூற்றும் கும்பல்களுக்கு ஓர் பாடம் புகட்டும் நிதர்சனம் இது ! தெய்வம் எப்போதும் நம்மை வழி நடத்தி வருவதன் அத்தாக்ஷி என்றால் மிகையில்லை!
இந்த வைஷ்ணவ ஸ்த்ரீ பகலில் வேலை எல்லாம் முடித்து தரையில் படுத்து உறங்கும் பழக்கம் உடையவர். அந்த நேரத்தில் யாரோ பேசுவது போல் நித்தம் உணர்ந்தார். நான் இங்கு இருக்கிறேன் என்னைக் கவனித்து உணவு கொடுக்க மாட்டாயா என்பது கேட்கும்! து நிதம் வாடிக்கையான நிகழ்ச்சி! ஒன்றும் புரியவில்லை அவர்களுக்கு.
அந்த சமயம் அவர்கள் மூத்த சகோதரி சென்னையிலிருந்து பேருந்தில் திருச்சி நோக்கிப்பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அருகாமையில் யாரோ உட்காரும் உணர்வு ஏற்பட்டது. காதில் நாளை என்னை தர்சனம் செய்ய சமயபுரம் வா, உன் தங்கையையும் உடன் அழைத்துக் கொண்டு. அங்கு நண்பகல் 12 மணிக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் வந்து அபிஷேக மஞ்சள் ப்ரசாதம் கொடுப்பார். த்வஜஸ்தம்பம் அருகே காத்திருங்கள் என்று சொல்வது துல்யமாகக் காதில் விழுந்தது!
இவருடைய தங்கை புருஷருக்கு தோல் சம்பந்தமான ஒரு நோய் உடல் முழுவதும் பரவி அரிப்பும் எரிச்சலும் கொடுத்து வந்தது. அதற்கு வைத்ய சம்பந்தமாக எந்தத் தீர்வும் இல்லாமல் அவதிக்கு உட்பட்டு வந்தார்.
பஸ்ஸில் ப்ரயாணம் செய்த சகோதரிக்கு மனம் பூரா சமயபுரம் சென்று அம்மனை தரிசித்து ப்ரசாதம் பெறுவதிலேயே இருந்தது! ஏனெனில் இவர் மஹா பெரியவா & காமாக்ஷி பக்தை. தினம் சென்னை வீட்டில் அம்பாள் விக்ரஹத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் ! நானே தர்சனம் செய்திருக்கிறேன் .
திருச்சி பெல் குடியிருப்பு அடைந்தவுடன் சகோதரியுடன் சொன்ன முதல் வார்த்தை இதுதான்,நாளை நா மி ரு வரும் சமய புரம் செல்கிறோம்! அம்பாள் உத்தரவு ! இதைக் கேட்ட தங்கைக்கு பயம் வந்து விட்டது தன் கணவர் கோபிப்பார் என்று ஏனெனில் அவருக்கு விஷ்ணு தவிர வேறு தெய்வங்களிடம் நம்பிக்கை கிடையாது. தீவிர வைஷ்ணவர். எப்படி அவர் அனுமதியின்றி செல்ல முடியும் என்று யோசிக்கையில் அக்கா சொன்னாள் அவர் வெளியில் போகும் சமயம் போய் அவர் திரும்புவதற்குள் திரும்பி விடலாம் என்ற யோஜனையின் படி சம்மதித்தாள். அவரும் மறு நாள் காலையில் வெளியில் போன வுடன் இருவரும் பஸ் ஏறி சமயபுரம் சென்றார்கள். உச்சிப்போதும் வந்து விட்டது! ஆனால் யாரும் வந்து ஏதும் கொடுக்கவில்லை! ஏமாற்றத்துடன் திரும்ப இருந்த சமயம் உள்ளேயிருந்த குருக்கள் ஓடி வந்தார்! வந்தவுடன் மன்னிக்கணும் கொஞ்சம் தாமச மாயிடுத்து, கூட்டம் ரொம்ப அதனாலே என்று சொல்லி அபிஷேக மஞ்சள் அம்பாள் பாதத்தில் மேரு போன்று கு வி ந் திரு க்கும் அதிலிருந்து ஒரு மேருபோன்ற உருவில் மஞ்சள் ப்ரசாதத்தை அருளினார். இது அம்பாள் உத்தரவு ! நேற்று கனவில் வந்து உங்கள் வருகையைச் சொல்லி இந்த ப்ரஸாதம்வழங்கச் சொன்னாள்! எனச் சொல்லி உள்ளே சென்று விட்டார்! வீட்டுக்கு வந்த பின் அம்பாள் சுவற்றிலிருந்து ஆஞ்ஞை அவருக்கு உடலெல்லாம் பூசும்படி! அப்படியே பூசி வந்ததில் நோய் காணாமல் போய் விட்டது! இது சத்யம்.
சுவற்றிலிருந்து பேசியது யார் தெரிய வேண்டாமா? புற்றிலிருந்த ஸ்வர்ணாம்பிகை என்ற அம்பாள்,! பின் புறம் புற்று இருந்தது! அதற்கு தினம் பால் ஊற்றச் சொல்லி ஆஞ்ஞை. அதன் பிறகு குழந்தை யில்லாதவர் கள், திருமணம் ஆகாதவர்கள் எல்லாரும் ஸ்வர்ணாம்பிகைக்கு ப்ரார்த்தனை செய்து வீடு முழுதும் தொட்டில், மஞ்சள் கயிறு தோரணமாகத் தொங்குவதைப் பார்த்திருக்கிறேன்! கலிகாலத்தில் நம் பாதவர்களுக்கு இது ஒரு படிப்பினை !
நம்பினோர் கெடுவதில்லை நான் மறைத் தீர்ப்பு! ஸர்வம்சக்தி மயம்!
பெரியவா அனுக்ரஹம் அன்றி ஒன்றும் சொல்லத் தெரியவில்லை!
நம்பினோர்க்கு நடராஜா அல்லாதவர்க்கு யமராஜா!
No comments:
Post a Comment