Saturday, July 29, 2023

Friendship of Rama and Sugriva

04/05 -- ராம ஸுக்ரீவ‌ ஸக்யம் (2)

(16) **ஸீதா கபீந்த்ர க்ஷணதாசராணாம்*
ராஜீவ ஹேம ஜ்வலநோபமானி*
ஸுக்ரீவ ராம ப்ரணய ப்ரஸங்கே*
வாமானி நேத்ராணி ஸமம் ஸ்புரந்தி**

ராமன் வாக்களித்ததும் ஸீதை,  வாலி,  ராவணன் ஆகிய முன்னோர்களுடைய இடது கண்கள் துடித்தன.  ஆண்களுக்கு இடது கண் துடித்தால் ஆபத்து ஏற்படும். பெண்களுக்கு இடது கண் துடித்தால் நன்மைகள் ஏற்படும்.  இது ஸீதையினுடைய தாமரை மலர் போன்ற இடது கண்ணும், வாலியின் தங்க நிற முள்ள இடது கண்ணும், ராவணனின் தீ போன்ற பத்து இடது கண்களும் துடித்தன என்கிறார்‌. இத்துடிப்பு ஸீதைக்கு க்ஷேமத் தையும், வாலி, ராவணர்கட்கு அழிவையும் உணர்த்திற்றாம். 

(17) **பார்யாவியோகஜம் துக்கம் அசிராத் த்வம் விமோக்ஷ்யஸே*
அஹம் தாம் ஆனயிஷ்யாமி நஷ்டாம் வேதச்ருதீமிவ*
ரஸாதலே வா வர்தந்தீம் வர்தந்தீம் வா நபஸ்தலே*
அஹம் ஆனீய தாஸ்யாமி தவ பார்யம் அரிந்தம *
நீ சக்யா ஸா ஜரயிதும் அபிஸேந்த்ரை: ஸுராஸுரை:*
தவ பார்யா மஹாபாஹோ பக்ஷ்யம் விஷக்ருதம் யதா**

ஸுக்ரீவன் "ராமா! நீ காட்டுக்கு வந்த விபரத்தையும்,  உன் பூர்வ வ்ருத்தாந்தத்தையும் ஹனுமன் மூலமாக நான் அறிந்து கொண்டேன்.  நீ விரைவிலேயே மனைவியைப் பிரிந்த துயரினி ன்று விடுபடுவாய்.  மதுகைடபர் எனும் அரக்கர்களால் பிரமனிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட வேதங்களை திரு மாலால் ஸாகரத்திலிருந்து மீட்கப்பட்டு நான்முகன் பெற்றது போல் நீயும் என்னால் மீட்கப்பட்டு சீதையைக் கண்டிப்பாகப் பெறுவாய்.  ஸீதா பாதாளத்திலிருந்தாலும் ஆகாயத்தில் இருந்தாலும் நான் உன் மனைவியை கொணர்ந்து  தருவேன்.
அவளை தேவர்களாலும் அஸுரர்களாலும் மறைத்து வைக்க முடியாது.  உன் மனைவி விஷம் கலந்த இனிப்புப் போன்றவள்.
அவளை யாரும் தன் வசமாக்கிக் கொள்ள முடியாது.

(18) **ஹ்ரியமாணா மயா த்ருஷ்டா‌ ரக்ஷஸா க்ரூரகர்மணா*
க்ரோசந்தி ராம ராமேதி லக்ஷ்மணேதி ச விஸ்வரம்*
ஆத்மனா பஞ்சமம் மாம் ஹி த்ருஷ்ட்வா சைலதடே ஸ்திதம்*
உத்தரீயம் ததா த்யக்தம் சுபானி ஆபரணாணி ச*
ஆனயஸ்வ ஸகே சீக்ரம் கிமர்தம் ப்ரவிலமாபஸே*
ஏவமுக்தஸ்து ஸுக்ரீவ: சைலஸ்ய கஹனாம் குஹாம்*
ப்ரவிவிசே தத: சீக்ரம் ராகவ ப்ரியகாம்யயா*
உத்தரீயம் க்ருஹீத்வா து சுபன்யாபரணானி ச*
இதம் பச்யேதி ராமாய தர்சயாமாஸ வானரா:**

சில நாட்களுக்கு முன்பு கொடிய அரக்கனாலே வானவீதியிலே எடுத்துச் செல்லப்பட்டதைப் பார்த்தேன்.  அவள் ஸீதையாகத் தான் இருக்க வேண்டும்.  நாக கன்னிகை போன்ற அவளை ராவணன் கைப்பற்றி சென்ற போது "ராமா! லக்ஷ்மணா!" என்று கதறிக் கொண்டே சென்றாள்.  அப்பொழுது நாங்கள் ஐந்து பேர்
அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.  எங்களை அவள் பார்த்து
விட்டு தன் உத்தரீயத்தையும்  அழகான திருவாபரணங்களை யும் கீழே போட்டாள்.  அதைப் பார்த்தால் யார் என்று உங்களுக்குப் புரியும் என்று கூறி எவனும் நுழையமுடியாத மலைக் குஹைக்குள் நுழைந்து ஸீதையின் உத்தரீயத்தையும் அவள் போட்ட திருவாபரணங்களையும் எடுத்து வந்து ராமனிடம் காட்டினான்‌.

(19)**உழையரின் உணர்த்துவது உனது என்று உன்னியோ*
குழைபொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம்*
மழைபொரு கண்ணீனை வாரியோடுதன்*
இழைபொதிந்து இட்டனை யாங்கள் ஏற்றனம்**

இந்த ஆபரணங்கள் தூதுவர்கள் போல தன் கணவனுக்கு தான் தென் திசை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை உணர்த்தும் என்கிற எண்ணத்தினால் ஸீதை இவ்வாபரணங்களை கீழே போட்டிருக்கலாம்.   எனவே இத்திருவாபரணங்களை ஆடையில்
சுற்றிக்கட்டி அது தன் கண்ணீர் பெருக்கினால் நனையும்படி அழுது கொண்டே கீழே போட்டாள். நாங்கள் அம்முடிப்பை தரை யில் விழுவதற்கு முன்னமே கைகளால் ஏந்திக் கொண்டோம்.  

ஸுக்ரீவன் அவற்றைக் கொணர்ந்து தன் கைகளில் வைத்து
விரித்துக் காட்டியதும் அந்த வஸ்த்ரத்தையும் மங்களமான திருவாபரணங்களையும் பார்க்கத் தொடங்கியதும் ராமன் கண்களிலினின்றும் கண்ணீர் பெருகின. அவற்றை எல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டு பாமர மனிதன் போன்று
ராமன் அழலானான். தைரியத்தை இழந்து பூமியில் விழுந்தான்.
பிறரால் தீண்டப்பட்ட புற்றிலுள்ள பாம்பு கோபத்தினால் சீறுவது போல் சீறினான்.  புலம்பலானான்.  திருமார்பிலும், திருக்
கைகளிலும், இடுப்பிலும் பூணும் திருவாபரணங்கள் பிராட்டியின் திருவாபரணமாகவே தோன்றினவாம்.

(20) **விட்டபேர் உணர்வினை விளித்த என்கெனோ*
அட்டன  உயிரை அவ்வணிகள் எங்கெனோ*
கொட்டின சாந்துஎன குளிர்ந்த வென்கெனோ*
கட்டன என்கெனோ யாது சொல்லுகேன்** (கலம்காண்)

பிராட்டியை பிரிந்த காரணத்தினால் துக்கம் மேலிட்டு புலம்பியவனுக்கு இவ்வாபரணங்களைப் பார்த்ததும் விட்ட
பேரறிவு மீண்டும் திரும்பிற்றோ என்னும்படி தோன்றுகிறது.
அவளுடைய அழகிய அணிகலன்களைப் பார்த்ததும் ஸீதையை நினைப்பூட்டி பிரிவுத்துயரை‌ வளர்த்து ராமனுக்கு மரண
வேதனையைத்தான் தந்ததோ என்னும்படி தோன்றுகிறது.

**ப்ரூஹி ஸுக்ரீவ கம் தேசம் ஹ்ரியந்தீ லக்ஷிதா த்வயா*
ரக்ஷஸா ரௌத்ரரூபேண மம ப்ராணை: ப்ரியா ஹ்ருதா*
க்வ வா வஸதி தத்ரக்ஷ: மஹத் வ்யஸனதம் மம*
யந்நிமித்தம் அஹம் ஸர்வான் நாசயிஷ்யாமி ராக்ஷஸான்**

ஸுக்ரீவா! பயத்தை உண்டு பண்ணும் அரக்கர் என் உயிரினும் மேம்பட்டவளான ஸீதையை எந்த திசையில் எந்த ஊரில் தூக்கிக் கொண்டு சென்றான். எனக்கு துன்பத்தை விளை வித்த அவன் யமலோகத்தின் வாயிலைத் திறந்து வைத்திருக் கிறான். அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் விரைவில் கொன்று யமலோகத்திற்கு அனுப்புவேன்.  

**அப்ரவீத் ப்ராஞ்ஜலி: வாக்யம் ஸபாஷ்யம் பாஷ்பகத்கத:*
ந ஜானே நிலயம் தஸ்ய ஸர்வதா பாபரக்ஷஸ:*
ஸாமர்த்யம் விக்ரமம் வாபி தௌஷ்குலேயஸ்ய வா குலம்**

ஸுக்ரீவன் இரு கைகளையும் கூப்பிய வண்ணம் தழுதழுத்த குரலில் பேசலானான். ‌ராமா! கொடிய பாபங்களைச் செய்யும்
அவ்வரக்கன் வசிக்குமிடத்தை நான் அறியேன்.  அவன் செயல் திறனையோ, பராக்ரமத்தையோ அறியும் வாய்ப்பு எனக்கு இல்லை.  இத்தகைய தீயச் செயலை புரிபவன் ஏதாவது மறை விடத்தில் தான் வசிப்பான். அதை அறிவது கடினம்" என்றான். 

⚛️⚛️⚛️⚛️⚛️⚛️

No comments:

Post a Comment