Thursday, April 21, 2022

Five divine names

பஞ்ச நாமங்கள்!!!!! 

எப்படியாவது மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா??? என கடவுள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிராறாம்.

திருமாலின் பஞ்ச நாமங்களில் 5ல்
1வது நாமம்
""ராமா""
~~~~~~~
ராமா ராமா ராமா என்று ஒரு நாளைக்கு எத்தனை தரம் முடியுமோ மனதில் அத்தனை தடவை சொல்லுங்கள்.
மனதில் சஞ்சலங்கள், துக்கங்கள், குழப்பங்கள் வரும் போது தனியாக ஓரிடத்தில் அமர்ந்து மனதிற்குள்
"ராம" நாமத்தைச் சொல்லுங்கள். மனம் அமைதி அடைவது நிச்சயம்....ராமா என்ற நாமத்தைக் கேட்டாலே அனுமன் அந்த இடத்தில் வந்து அமர்ந்து விடுகிறானாம்.

"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர ஹ்ருதமஸ்த காஞ்சலிம்"

பத்தாயிரம் ராமநாமாக்கள் சொன்னால் ஏழு கோடிமந்திரங்கள் சொன்னபலனாம்!

2வது நாமம்....
""க்ருஷ்ணா""
~~~~~~~~~~,,~
இந்த நாமமே பாண்டவர்களைக் கூடவே இருந்து காத்தது.....குந்தி க்ருஷ்ணனிடம் கேட்ட வரம் "க்ருஷ்ணா!!!
எனக்கு கஷ்டங்களைக் கொடு!!! அப்போதுதான் உன்னை மறவாமல் இருப்பேன்."... என்றாள்........
கஷ்டங்களைத் தாங்கும் ,மன வலிமையைக்கொடுக்கும் ,நாமம்........

3வது நாமம்
"நாராயணா""
~~~~~~~~,,~
சிறுவன் ப்ரஹ்லாதனை காத்த,நாமம்.
எத்தனை இடர்கள் அவன் அடைந்த போதும்அவனைக் காப்பாற்றிய"நாமம்.. பகவானுக்கு பிடித்த குழந்தை அவன்.....
ஆண்டாள் தன்,பாசுரத்தில்"நாராயணனே நமக்கே பறை,தருவான்...என்று, "ஏ" காரத்தில் பெருமை பொங்க சொன்ன நாமம்.

4வது நாமம்
"கோவிந்தா"
~~~~~~~~~
துச்சாசனன் பாஞ்சாலியை சபையில் துகிலுரித்த போது நிர்கதியாக நின்ற அவளுக்கு கை"கொடுத்த நாமம்....
" தனது இரு கைகளையும் உயரத்"தூக்கி ""கோவிந்தா!! கோவிந்தா!!! எனக் கதறிய போது அவள் மானத்தைக் காப்பாற்றிய நாமம்.......அன்றும், இன்றும், என்றும் திருமலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும் நாமம்.......

5வது நாமம்...
"நரஸிம்மா"
~~~~~~~~~
பக்தர்கள்கேட்டதை உடனே கொடுப்பவனாம். "நாளை என்பதே இல்லை நரசிம்மனுக்கு.....அதனால் தான் ப்ரகலாதன் அழைத்த உடனே
தூணைப் பிளந்து கொண்டு வந்தான்.....
" நீயே கதி" என சரணடைந்த அடியார்களுக்கு உடனே கஷ்டங்களிலிருந்து விமோசனம் கொடுப்பானாம்."ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம்" என்று சொன்னதே
இல்லையாம்.....அப்படிப்பட்ட கருணாமூர்த்தி அவன்....

அதனால்தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில்

"நாரஸிம்ஹ"வபுஶ்ரீமான் கேசவ புருஷோத்தம:

என்று நரசிம்மன் பெருமையை புகழ்ந்து சொன்னார் பீஷ்மர்.....

ராமா! கிருஷ்ணா! நாராயணா! கோவிந்தா! நரஸிம்மா என்ற இந்த எளிமையான ஐந்து திருநாமங்களையும், எப்போதும் நாத்தழும்பேறக்"கூறுவோம். திருமாலின் இந்த திருநாமங்கள்நம்மை உய்விக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

1 comment:

  1. பெயர்களுக்கு பெண் பாலினம் ஏன்?

    "ராம கிருஷ்ண நாராயண கோவிந்த நரசிம்ம"

    ReplyDelete