Friday, February 25, 2022

I can't leave Bhagavan - Spiritual story

ஜெய் ஸ்ரீ மன் நாராயணா.
ஒரு பால சன்யாசி நதி ஓரத்தில் மண்ணை பிசைந்து கோவில் கட்டி மனம் போன திசையில் ஆடி பாடி குதூகலமாக விளையாடி கொண்டு இருந்தது.அது சமயம் அவ்வழியே ஒரு அரசன் சென்று கொண்டிருந்தார்.பால சன்யாசியின் ஆட்டம் பாட்டத்தை கண்டு அந்த பாலகனிடம் நீ என்னுடன் அரண்மனை க்கு வா உன் இஷ்டப்படி அனுபவிக்கலாம் வருகிறாயா என்றார்.பால சன்யாசி நான் உன்னுடன் வருகிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்ன என்றார்.பாலகன் நான் நன்றாக தூங்குவேன் நீ தூங்க கூடாது சரியா
அடுத்து நான் நன்றாக சாப்பிடுவேன் விருப்பமானதை நீ சாப்பிட கூடாது.நான் நல்ல நல்ல துணிகள் ஆபரணங்கள் அணிந்து கொள்வேன் நீ அணிந்து கொள்ள கூடாது.மற்றும் நீ எப்போதும் என்னுடனேயே பக்கத்தில் இருக்கனும் இதற்கு சம்மதம் இருந்தால் சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்றான் பால சன்யாசி.அரசனுக்கு கோபம் வந்தது என்ன பைத்தியக்காரத்தனம் நான் உன்னுடனே இருந்தால் ராஜ்ய காரியங்கள் யார் பார்ப்பார்கள்.ஆடை ஆபரணங்கள் அணியாமல் இருந்தால் என்னை ராஜாவென்று யார் நினைப்பார்கள் என்று அதட்டினார்.உங்களால் முடியாது அரசே.இதோ என்னுடனேயே இருக்கிறார் என் பகவான்.நான் தூங்குகிறேன் அவர் தூங்குவது இல்லை.நான் நன்றாக சாப்பிடுகிறேன் அவர் உண்பது இல்லை ஆடை ஆபரணங்கள் நான் அணிந்து கொண்டாலும் அவருக்கு என்று எதுவுமே வேண்டாம்.இப்படி என் ஆராத்ய தேவன் என்னுடன் இருக்கும் போது இவரை விட்டு விட்டு உன்னுடன் எப்படி
வருவேன்.இவரை போல் உன்னாலும் முடியாது.என்று கூறிய படி அந்த பால சன்யாசி குதூகலமாக விளையாடி கொண்டு இருந்தான்.குழந்தையின் பேச்சிலும் பகவானிடம் உள்ள பக்தியையும் பார்த்து வெட்கித் தலை குனிந்தார். தாஸன் ஜோத்பூர் பாலாஜி 🙏🙏🙇‍♂️🙇‍♂️

No comments:

Post a Comment