*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்*
"பக்கத்துக்கு வீட்டுக்காரர் ரொம்பவும் தொல்லை கொடுக்கிறார். போலீஸில் புகார் கொடுக்க போகிறேன்.."
ஸ்ரீமடத்தின் நீண்டகால பக்தர் அவர்.
பெரியவாள் அவரை உற்று பார்த்தார்கள்.
"என்கிட்ட கன்சல்டேஷனுக்கு வந்திருக்கியா? இல்லை, பர்மிஷியன் கேட்க வந்திருக்கியா?"
பக்தர் கலங்கி போய்விட்டார். பெரியவாள் இப்படி பளிச்சென்று கேட்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
"வந்து...எப்படி உத்திரவாகிறதோ அப்படி..." என்று இழுத்தார்.
"உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால், எல்லோரிடமும் விரோதம் கொள்ள முடியுமா? விரோதத்தை வளர்த்து கொண்டால் கொஞ்ச நஞ்சம் சாந்தியும் போயிடும்..
பக்கத்துக்கு வீட்டுக்காரனை எதிர்த்து இரைச்சல் போடாதே. கஷ்டத்தை பொறுத்துண்டு பேசாமல் இரு.
தோற்று போயிட்டோமோ என்ற எண்ணம் வரும். தோற்று போனால் தான் என்ன..?
அவன் நாளைடைவில் அடங்கி போயிடுவான். இவன் கையாலாகாதவன் என்று விட்டுவிடுவான்...
தேவைப்பட்டால் அவனுக்கு உதவி செய். தானாகவே திருந்திடுவான்..."
பக்தர் "உத்திரவு" என்று சொல்லி, பெரியவாள் அறிவுரையை ஏற்றுக்கொண்டு போனார்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்பது தமிழரின் தொன்மையான நீதிகளில் ஒன்று (உலகநீதி).
அதனை இவ்வளவு அருமையாக, மனதில் நன்றாக பதியும் விதத்தில் உபதேசம் செய்திருக்கிறார் நம் பெரியவா - இந்த உபதேசம் நம் எல்லோருக்காகவும் தான்!
பெரியவா சரணம்!
_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural
*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org*
No comments:
Post a Comment