Courtesy: Smt. Saroja Ramanujam
வேதார்த்தஸங்கரஹம்-2
अशेषचिदचिद्वस्तु शेशिणे शेषशायिने निर्मलान्तकल्याणनिधये विष्णवे नमः
எல்லாப்பொருள்களுக்கும் யார் அதிபனோ அப்படிப்பட்ட தூயமுடிவற்றவனும் எல்லாகல்யாணகுணங்களுக்கும் இருப்பிடமுமானசேஷசயனத்தில் உள்ள விஷ்ணுவை வணங்குகிறேன்.
சேஷ சேஷி பாவம் என்பது விசிஷ்டாத்வைதத்தின் ஆணிவேர் என்று சொல்லப்படும் கொள்கை ஆகும். எல்லாப்பொருள்களும் அவன் ஆணைப்படியே செயல் படுகின்றன என்பது அசையும் பொருள் அசையாப்பொருள் எல்லாவற்றிற்கும் பொதுவான ஒன்று. இதன் மூலம் உயிரற்ற இயற்கை மூலமே உலகம் உருவானது என்னும் சாங்கிய வாதம் மறுக்கப்படுகிறது.
சேஷ சாயீ என்பதில் குறிப்பிடப்படுவது ஆதிசேஷன் முதலிய நித்ய சூரிகள் என்றும் பகவானிடம் நித்ய சேவை புரிந்துகொண்டிருப்பவர்கள்.
நிர்மல அனந்த என்னும் சொற்கள் உருவத்தைக்கடந்தவன்என்று குறிப்பிடுகின்றன.
கல்யாண நிதி எனும் சொல்
அத்வைதகோட்பாட்டின்படி ப்ரஹ்மம் நிர்குணம் என்பதை மறுக்கிறது. இதை எல்லாம் விரிவாக பின்பு காண்போம்.
ராமானுஜர் அடுத்ததாக ஆசார்யராகிய யாமுனாசார்யருக்கு வந்தனம் செய்கின்றார். யாமுனாசார்யர் என்னும் ஆளவந்தார் முதல் முதலில் விசிஷ்டாத்வைதத்தை எடுத்துரைத்தவர். அவரைப் பின்வருமாறு ஸ்தோத்திரம் செய்து பிறகு விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை விரிவாக எடுத்துரைக்கிறார். அந்த ஸ்லோகத்தின் பொருள் பின்வருமாறு.
'யாமுன முனி அறியாமை என்னும் இருளைப்போக்கி, பிரம்மமே ஜீவன் . ஆயினும் அவித்யை என்னும் மாய வலையில் கட்டுண்டதால் சம்சாரபந்தம் ஏற்படுகிறது என்னும் கொள்கையை வேதத்திற்கு மாறானது என்று காட்டியுள்ளார். அவர் வாழ்க.'
இந்த இரண்டு ஸ்லோகங்கள் விசிஷ்டாத்வதத்தின் சாரத்தைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது மட்டும் அல்லாமல் இதர சித்தாந்தத்தின் குறைகளைக் காட்டுவதாகவும் உள்ளன.
அத்வைத சித்தாந்தத்தில் 'ஜீவோ ப்ரம்மைவ நாபர:' , ஜீவன் பிரம்மமே என்பதினால் பிரம்மமே, ' . மாயையினால் சம்சார பந்தத்தில் கட்டுப்படுகிறது என்றாகிறது.
ராமானுஜர் சங்கரரை எதிர்க்கவில்லை. சங்கரர் சொன்னது அந்த கால சூழ்நிலைக்கு தேவையானதே . அத்வைதம் புத்த மதம் போல மாயாவாதம் அல்ல. ஆனால் சங்கரருக்குப்பின் மாயாவாதம் சாதாரண மக்களால் புரிந்துகொண்டு அனுசரிக்க முடியாதபடி ஆகிவிட்டதால் விசிஷ்டாத்வைதம் காலத்தின் தேவை ஆகத் தோன்றியது. இதை மனதில் கொண்டு நாம் ஆசாரியர்கள் வாக்குகளை புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்து விரிவாக விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை விவரிக்கிறார். அதை அடுத்ததாகக் காண்போம்.
.
No comments:
Post a Comment