Friday, November 26, 2021

Teh sound of ankelets of Piraati

தாயாரின் மெட்டி வைபவம்
4. சஞ்சாரம்—நாதம்
1. பரமபதத்தில், நவரத்ன மாளிகையில், பிராட்டியார் வரும்போது, அவரது திருவடியில் அணிந்துள்ள சிலம்பும்,கொலுசும் பல ராகங்களில் சப்திக்கின்றனஅப்போது ,ஹே மெட்டித் தேவியே நீ சலவைக் கற்களில் பதிந்து எழுப்பும் சப்தம், தாளம் இடுவதைப்போல் அமைகிறது.
2. பெரிய பிராட்டியார் ஒய்யாரமாக நடக்கும்போது, நீ, மாளிகைப் பளிங்குக கல்லில் எழுப்பும் நாதம் கர்ணாம்ருதமாக ஆகி, முக்தர்களுக்கு, அங்கு வேதகோஷம் போல இருக்கிறது.
3. பெரியபிராட்டியார், நந்தவனத்தில் "பத்தி உலாத்தும் " போது ,ஹே–மெட்டித் தேவியே நீ புல்லின்மீதும் அங்கு சிந்தியிருக்கும் மலர்கள் மீதும் , அழுந்தி, எழுப்பும் நாதமானது, பிராட்டியின் பெருமையைச் சொல்லும் ஸ்ரீஸுக்தத்தை சேவிப்பது போல இருக்கிறது.
4. இந்த நாதம் , முமுக்ஷுக்களுக்கு , பிராட்டியை சேவிப்பதற்கு முன்பாக, பிராட்டியின் கருணையையும் விஞ்சி , அடியோங்களை, தாயாரைச் சரணம் அடையுங்கள் என்று அழைப்பதைப் போல இருக்கிறது.
5. பிராட்டிக்கு "உருசாரிணி " என்கிற திருநாமம். "அக்ரதஸ்தேகமிஷ்யாமி "என்று
ஸ்ரீமத் ராமாயணம் சொல்கிறது. எம்பெருமானுக்கும் முன்னதாக ஓடிவந்து, தர்ஸனம் கொடுப்பதற்கு, பெரிய நடையை உடையவள் — உருசாரிணி . அனுக்ரஹிக்க , பிராட்டி நடந்து வரும்போது, தரையில்பட்டு,உன்னுடைய நாதம், "பிராட்டி அனுக்ரஹிக்க " வருகிறாள் என்று கட்டியம்கூறுவதைப் போல அமைகிறது. இந்த உன்னுடைய நாதத்துக்கு நமஸ்காரம்.
6. ஹே—மெட்டித் தேவியே ஸ்ரீ ராமாவதாரத்தில், எம்பெருமானும் பிராட்டியும் ஆரண்யத்தில் நடந்தபோது, பிராட்டியின் பாதுகைக்கு ஹிதமாக , உன் அடிப்பாகம் , பாதுகையின்மேல் பட்டு,ஏதோ ரஹஸ்யம் பேசுவதைப் போல் இருந்தது. ஒருவேளை, இது, பிராட்டியின் பாதுகை என்று முத்திரை பதித்தாயா !
7. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி, எம்பெருமானுடன் ஏகாந்தமாக பஞ்சணையில் துயிலும் போது , நீ, பஞ்சணையில் பதிந்து , அப்போது எழும் உன் நாதம் திவ்ய தம்பதியர்க்குத் தாலாட்டுப் பாடுவதுபோல இருக்கிறது.
8. ஸாமவேதம் , வீணையில் தாளம் போடுகிற மாதிரி—-ஹாய் —ஹாய் என்கிறது. . உபநிஷத்திலும் இந்த த்வனி உள்ளது.பிராட்டி, எம்பெருமானுடன் சஞ்சரிக்கும்போது, பிராட்டியின் திருவடி பூமியிலபடுவதும், எழுவதுமாக இருக்கிறது. அப்போது, ஹே—மெட்டித் தேவியே—நீ எழுப்பும்நாதம், பகவானுக்கு, ஸாமவேதமாக ஒலிக்கிறது.
 உருப்பட்டூர் ஸௌந்தரராஜன்
எந்த ஒரு பிராட்டியின் புருவங்கள் நெறிப்பதின் மூலமே இந்த உலகமானது, உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்ற வேறுபாடு உடையதாக மாறுகிறதோ, அந்த பிராட்டியின் திருவிரலில் அமர்ந்திருக்கும் மெட்டி தேவியே.. அவளுடன் சேர்ந்து நியும் எங்களுக்கு ரிக்ஷிக்க பிரார்திக்கிறேன். பக்தர்களுக்கும் எம்பெருமானுக்கும் இடையில் பாலமாக இருக்கிறாள் பெரிய பிராட்டி. நீயே அப்பாலத்தின் கால் விரல்களில் வீற்றிருப்பது உனக்கு எப்பேர்பட்ட ஏற்றம் !!!!
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்

No comments:

Post a Comment