குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 106
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
சாதாரணமாக நாம் உலகத்திலே யாரை உதார ஹ்ருதயம் உடையவர் என்று சொல்கிறோம்..? வள்ளல் தன்மை மிக்கவரை அவ்வாறு சொல்கிறோம். பகவான் கீதையில் இதை அப்படியே மாற்றி விட்டார் . தன்னிடத்திலேயே வந்து கைநீட்டுகிறவர்களைப் பார்த்து, ' அடடா என்ன உதார ஹ்ருதயம்' என்று கொண்டாடுகிறான் . சர்வமும் அவன் என்று உணர்ந்து அவனிடத்தில் கை நீட்டுபவர்களை கொண்டாடுகிறான். இந்த பக்தர்கள் இல்லையெனில் அவனுக்கு பெருமை ஏது ?
அயோத்தி மாநகரை வர்ணிக்கும்போது கம்பரோ, ' அங்கே உண்மைக்கு மதிப்பில்லை' என்கிறார். . ஏனென்றால் எல்லோருமே சத்யசந்தர்கள். பலத்தை காட்டவே இடமில்லை என்கிறார், ஏனெனில் எல்லோருமே பலசாலிகள். அதே மாதிரி வித்வத்தை காட்ட இடமேயில்லை.. ஏனென்றால் எல்லோருமே கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாய் இருக்கிறார்கள்.
எனவேக் பகவானுக்கு பெருமை பக்தர்களினாலேதான். அவனை ஒக்காரும் மிக்காரும் இந்த உலகிலே இல்லை. அவனை அடிபணியு ம் பக்தர்களை அவன் ரக்ஷிக்கிறான்.
ஒருவர் பெருமாள் படத்துக்கு அர்ச்சனை பண்ணிக் கொண்டிருந்தார் ' ஓம் கேசவ நம: என வரிசையாக நாமாக்களை சொல்வதைப் கேட்டு பகவான் ஆனந்தித்துக் கொண்டிருந்தான். சடாரென்று நடுவில்' ஓம் ' 'தரித்ராய நம: ' என்ற நாமாவளி வந்தது.
அதைக் கேட்டவுடனே அர்ச்சனை பண்ணியவரின் கையை பகவான் பிடித்துக் கொண்டான். " எனக்கென்ன தரித்ரியம் உண்டா? ஏழ்மை உண்டா என்னைப் பார்த்து தரித்ராய நம: என்று எப்படி சொல்லலாம்.."? பகவான் பக்தனிடம் கேட்டான் " இப்போது நீர் அர்ச்சனை பண்ணுவதை பார்த்து எல்லோரும் பண்ண ஆரம்பித்து விடுவார்கள். இந்த தரித்ரராய் சப்தத்தை எத்தனை காலம் கேட்பது.." என்று கவலைப்பட்டுக் கொண்டான் பகவான் . அவ்வளவு கடுமையானது தாரித்ரியம்.
ஊர் மத்தியில் பிச்சையெடுத்தபடி போனான் ஒருவன். அவனைக் கண்டதும் எல்லோரும் கதவை சாத்திக் கொண்டார்களாம். இவன் மிகவும் சோர்ந்து போய் ஊருக்கு வெளியே ஒரு ஸ்மசானத்தில் போய் அமர்ந்தான் அச்சமயம் அங்கு ஒரு சிதை எரிக்க ஏற்பாடாகிறது. இவனுக்கு அது ஸ்மசானம என்பது தெரியவில்லை. அந்த சவத்திடம் போய்' ஒரு விசனமில்லாமல் படுத்திருக்கிறாயே.. தோழா...! எழுந்து இந்த தாரித்ரியத்தை வாங்கிக் கொள். நீ படுத்திருக்கிறாயே இடத்தில் நான் படுத்துக் கொள்கிறேன்" என்றானாம். அந்த சவம் பேசவேயில்லை..!
ஏன் பேசவில்லை என்று கேட்டால், ' ஏழ்மையைக் காட்டிலும் புறப்பட்டுப் போதே மேல்.. இவனிடம் பேசினோமானால் நமக்கு நடக் வேண்டிய கடைசி காரியம் கூட சரியாக நடக்காது' என்று வாயை முடி இருந்து விட்டதாம் சவம்.. இப்படி சவமே பரிகசிக்கும்படியான நிலை தாரித்ரியம்.
அதைச் சொல்லி அர்ச்சனை பண்ணவும் பகவானுக்கு கோபம் வந்து விட்டது.
' யாரைப் பார்த்து தரித்ராய நம: என்றீர்..?' என்று கேட்டான் பகவான். பக்தர் விடவில்லை இடுப்பில் துணியை இறுகக் கட்டிக் கொண்டு வாக்குவாதத்தில் இறங்கினார் . ' அர்ச்சனை தட்டை பிடுங்கி வைத்துக் கொண்டால் உனக்கு தாரித்ரியம் இல்லாமல் போய்விடுமா..! இருக்கிறதே' இருக்கிறதே என்று பதில் சொன்னார்.
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்
No comments:
Post a Comment