பெரியவா சரணம்
பெரியவா தரிசனத்திற்கு வந்த ஒரு குழந்தையின் தகப்பனார் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டுக் கூறினார், "குழந்தை முரடாக இருக்கான். யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான்... அவன் திருந்தும் படி பெரியவா அநுக்கிரஹம் பண்ணணும்."
பெரியவா குழந்தைக்கு அறிவுரை ஏதும் கூறவில்லை. தகப்பனாரைப் பார்த்துச் சொன்னார்கள்....
"நீங்கள் தர்மப் பிரகாரம் நடக்கணும். உங்களுக்கு ஆசார - அனுஷ்டானம், தெய்வ பக்தி, குருபக்தி , சத்சங்கம் போன்றவை இருக்கணும். நீங்க துஷ்ட சஹவாசம் வைத்துக் கொண்டால் பையன் முரடாகத் தான் இருப்பான்.
"அடிக்கடி வீட்டுக்கு நல்ல மனுஷ்யாள் வரணும். கோயில் - குளம், பஜனை - பாட்டு என்று பையனையும் கூடவே அழைச்சுண்டு போகணும். வேரில் தண்ணீர் ஊற்றினால், அந்தத் தண்ணீர் இலைக்கும் கிடைக்கும்... பையனை அதட்டாதீங்கோ. நல்ல சகவாஸத்துலே சேர்த்து வையுங்க..... தானாகவே பையன் திருந்திடுவான்.... "
தகப்பனார் நன்றியுடன் நமஸ்காரம் செய்து விட்டுப் போனார்..
இந்த உபதேசம் அவருக்கு மட்டுமா பெரியவா கூறினார்? நம் பொருட்டும் தான்...
பெரியவா....
No comments:
Post a Comment