Friday, September 17, 2021

Padapa padapa 16 times in paduka sahasram

ஸ்ரீ ரங்கநாத பாதுகா ஸஹஸ்ரநாமம் வைபவம்.
இந்த பாதுகா ஸஹஸ்ரநாமம் என்பது என்ன ? ஒரு ஸ்லோகத்தை மட்டும் கீழே பதிவு செய்கிறேன்
" பாதபா பாதபா பாதபா பாதபா 
பாதபா பாதபா பாதபா பாதபா 
பாதபா பாதபா பாதபா பாதபா 
பாதபா பாதபா பாதபா பாதபா 
என்ன இது ? ஒரே வார்த்தையை 16 முறை எழுதியிருக்கிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம் ...
இது பாதுகா சஹஸ்ரம் என்கிற படைப்பில் இடம் பெறும் வரிகள் . இது அ ஆ என்கிற உயிர் எழுத்துக்களை கொண்டது , இரண்டு மெய் எழுத்துக்களையும் கொண்டது .
எதற்காக இது இயற்றப் பட்டது ? இதை வேதாந்த தேசிகன் இயற்றினார் , 1000 வரிகள் , பெருமாளின் பாதுகைகளை பற்றி எழுத முடியுமா என்கிற சவாலை ஏற்று ஒரே இரவில் எழுதிய படைப்பில் தான் இந்த வரிகள் இடம் பெறுகிறது .
பாதபா , பாபா , அத , அபா , பாதபா , பாத , பா , பாத , பாபாத் , அபாபாத் , ஆ , பாபா , த , பாபா , ஆத , பா , பாத , பா
என்று பிரித்து படிக்கப் பட வேண்டும் , அதன் பொருள் என்னவெனில் , மரம் போன்ற தாவரங்களையும் , பிராணிகளையும் , அடைந்திருக்கும் பாபத்தை உணடழிக்கக் கூடிய அபிஷேக நீரை சொந்தமாக்கிக் கொண்டுள்ளதும் , முறையே நியமிக்கப் பட்டு , பதவிகளில் இருக்கும் தேவர்களை காக்கின்ற ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை காத்திடுவதுமான பாதுகை , முறையே பாப புண்ணியத்தை நோக்குவதும் , ஸ்ரீ விஷ்ணுவை அனுபவிக்கின்றவற்கு சரணாகதிக்கு வழி வகுப்பதும் , நிந்திக்கும் விரோதிகளை அழிக்கக் கூடிய பெருமாளின் ஒளிகளை காப்பதும் பாதுகையே ...
என்று பாடுகிறார் ,.,,,,ஒரு பாசுரதிலேயே இத்தனை அர்த்தங்கள் என்றால் , இது போன்று 1000 பாசுரங்களை ஒரே இரவில் ஒருவர் இயற்றியது எவ்வளவு பெரிய சாதனை ...
‌ஆச்சாரியன் திருவடிகளே சரணம்
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்

No comments:

Post a Comment