ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ... 🙏🙏🙏
தஸாவதாரம்
ஸ்ரீகிருஷ்ணாவதாரம்
பகுதி 36
பொல்லா வடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப் புணர்முலை வாய்மடுக்க
வல்லானை மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறிதுவரை
எல்லாரும்சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்.
பெரியாழ்வார் திருமொழி 04.01.06
விளக்கம்
பொல்லா வடிவுடை பேய்ச்சி
-
மஹாகோரமான வடிவையுடைய பூதனையானவள்
அஞ்ச
-
இறக்கும்படியாக
புணர்முலை
-
தன்னில் தான் சேர்ந்திருள்ள (அவளது) முலையிலே
வாய்மடுக்க வல்லான்
-
(தனது) வாயை வைத்து உண்ணவல்லவனும்
மா மணிவண்ணன்
-
நீலமணிபோன்ற நிறத்தையுடையவனுமான எம்பெருமான்
மருவும் இடம்
-
பொருந்தி இருக்குமிடத்தை
நாடுதிர் எல்
-
தேடுகிறீர்களாகில்
(இதைக் கேளுங்கள்:)
பௌவம் ஏறி துவரை
-
கடலலைகள் வீசப்பெற்றுள்ள ஸ்ரீதுவாரகையிலே
எல்லாரும் சூழ
-
தேவிமார் எல்லாரும் சுற்றிலும் சூழ்ந்துகொண்டிருக்க,
பல் ஆயிரம் பெரு தேவிமாரொடு
-
(அந்தப்) பதினாறாயிரம் தேவிமாரோடு கூட
சிங்காசனத்து
-
சிங்கம் போன்ற ஆசநத்தில்
இருந்தானை
-
அமர்ந்திருக்கும்போது கண்டார் உளர்.
பேட் துவாரகா, அந்தர்திவீபம், சங்கோதார்:
சங்குகள் இங்கு அதிகமாகக் கிடைப்பதால் "சங்கோதார்" (சங்கதுவாரம் = சங்குகள் கிடைக்கும் இடத்திற்கு செல்லும் வழி, சங்குகள் கிடைக்கும் இடம்) என்றே இவ்விடம் அழைக்கப்படுகிறது. பேட் துவாரகை, கட்சு வளைகுடாவில் உள்ள சிறு தீவு ஆகும். துவாரகை நகரிலிருந்து 32 கி. மீ., தொலைவில் உள்ள ஒகா போர்ட் கடற்கரை வரை தரைவழி பயணம் செய்து (பேருந்து, கார் மூலம்) சென்று, பின் அங்கிருந்து விசைப்படகு மூலம் பேட் துவாரகைக்கு செல்லவேண்டும். ஆழமான கடல் பயணத்தில் கடல் காக்கை என்கிற பறவைகளுக்கு நாம் பொரி, கடலை போன்றவைகளை உண்ண கொடுக்கலாம். இங்கு சங்கு சக்கரங்களுடன் காட்சியளுக்கும் கிருஷ்ணரை துவாரகாநாத்ஜி என்று அழைக்கிறார்கள். முன்பு இங்கு கிருஷ்ணரின் மாளிகை இருந்ததாகவும், அதில் சத்தியபாமா மற்றும் ஜாம்பவதி வசித்தனர் என்றும் கூறப்படுகிறது இங்கு தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு அரசனைப் போலவும் அலங்காரங்கள் செய்து பூஜை செய்யப்படுகிறது. இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு கிருஷ்ணன், ஜாம்பவதி, லட்சுமி, நாராயணன் என மொத்தம் ஐந்து கோவில்களும் சங்க தீர்த்தம் என்னும் மிகப் புகழ்பெற்ற தீர்த்தமும் உண்டு. இங்குதான் பகவானின் பால்ய நண்பர் சுதாமா என்கிற குசேலன் சந்தித்த இடம். நிறைய பக்தர்கள் அவல் வாங்கிக் கொண்டுவந்து சமர்ப்பிக்கிறார்கள்.
சங்குகள் மற்றும் சங்கினால் செய்யப்பட்ட பொடருட்கள் கிடைக்கும் இடங்கள்: லோதல் , ரங்கப்பூர் , நாகேஸ்வர் , குந்தசி, சுர்கோடாடா , மொஹஞ்சதாரோ முதலிய இடங்களில் சங்குகள், சங்கினால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. அதேபோல, பேட்-துவாரகாவில் நடத்திய கடலடி அகழ்வாய்வுகளிலும் கிடைத்துள்ளன. சங்கதுவார், ஷங்கத்வார் என்ற பெயர் ஏற்கெனவே, இலக்கியங்களில் வழங்கி வருவதால், இத்தகைய ஆதாரங்கள் கிடைத்தது பொறுந்தி வருகிறது. மேலும், இப்பகுதிகளில் வாழும் மக்கள் இப்பொருட்களை தங்களது சடங்குகளில் உபயோகப்படுத்தி வருகிறார்கள்.
பேட்–துவாரகையில் உள்ள வழிபாட்டு ஸ்தலங்கள்: மேற்குக்கடற்கரைப் பகுதிகளில் கிடைத்துள்ள ரோம வியாபாரப் பொருட்களின் எச்சங்கள் கிடைத்துள்ளதும், அவற்றை மத்தியதரைக்கடல் ஆதாரங்களை ஒப்பிட்டு, முதல் நூற்றாண்டு மற்றும் இரண்டாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று கண்டு பிடித்ததிலும், ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
இந்த கோவிலில் வழிபட்ட பக்தர்கள் மற்றும் குடும்பத்தவர்களின் பெயர்கள், கையெழுத்துகள் கொண்ட பதிவு-புத்தகங்கள் இங்கு வைத்திருக்கிறார்கள்.
ஹனுமான் தன்டி – இத்தீவில் கிழக்கில் ஐந்து கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. ஒரு தடியுடன் ஹனுமான் காணப்படுவதால், தன்டி ஹனுமார் என்றழைக்கப் படுகிறார். அஹி-ராவணன், மஹி-ராவணன் கதை இதனுடன் தொடர்பு படுத்தப் படுகிறது.
ஏனெனில், கிருஷ்ணரின் தாக்கம் இப்பகுதிகளில் இருந்ததை, நாணயங்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆதாரங்கள் எடுத்துக் காட்டுவதை பார்த்தோம்.
சரித்திர சான்றுகள்:
சங்கோதார் அல்லது பேட் துவாரகா எனப்படுகின்ற இடம், கட்ச் வளைகுடாவில் ஓகா கடற்கரையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு தீவாகும். பாறை மற்றும் மணல் இவற்றால் ஆன, திட்டு துவாராகாவிலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ளது என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இதற்கு ஹரப்பன் காலத்திலிருந்து அகழ்வாய்வு ஆதாரங்கள் சரித்திர ரீதியில் உள்ளன. ஓகா மண்டலம் அல்லது குஸத்வீபம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 574CE ஆண்டு சிம்மாதித்யனின் கல்வெட்டில், அவரது அமைச்சர் வராஹ்தர்களின் மைந்தன், துவாரகாவின் அரசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இங்குள்ள கோவில் கேசவ ராய்ஜி கோவில் எனப்படுகிறது. தேசிய கடலாராய்ச்சி நிறுவனம், கோவா மேற்கொண்ட கடலடி அகழ்வாய்வில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 3100ம் ஆண்டில், துவாரகை பிரளயத்தினால், கடலுக்கு அடியில் மூழ்கியது என்பதற்கான புராண ஆதாரங்கள் உள்ளன.
கோபி தாலாவ் / கோபி தாலாப்:
இது கோபிகைகளின் குளம் எனப்படும், இது துவாரகாவிலிருந்து 21 கி.மீ மற்றும் நாகேஸ்வரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. வட்டவடிவில் உள்ள ஒரு அழகான குளம் ஆகும். புராணத்தின் படி, கிருஷ்ணர் பௌமாசுரனைக் கொன்று அவனிடத்தில் சிறையிருந்த 16,000 கோபிகைகளை விடுவித்தார் என்றுள்ளது. இன்னொரு குறிப்பின் படி, சிறு வயதில் கிருஷ்ணர் இங்கு கோபிகைகளுடன் பௌர்ணமி இரவில் "ராஸ லீலை" புரிய வருவார் என்றுள்ளது. அரக்கனின் அரண்மனையில் அடைப்பட்டிருந்த இளவரசிகளை விடுவித்தார் என்று இன்னொரு குறிப்பு கூறுகின்றது. ஆனால், அவர்களை கிருஷ்ணர் ஏற்றுக் கொள்ளாததால், அங்கேயே பாறைகளாக மாறிவிட்டனராம். அதாவது 16,000 கோபிகைகளின் உடல்கள் பாறைகளாக மாறிவிட்டன. அதனால், அப்பாறைகள் மஞ்சள் நிறத்துடன் வாசனையுடனும், நீரில் கரையும் தன்மையுடனும் இருக்கின்றன. அதனால் தான், அவை "கோபி சந்தனம்" என்றேயழைக்கப் படுகிறது. இங்கு கட்டிகளாக பொடியாக நிறைய விற்கப் படுகிறது. இதனை, வைஷ்ணவர்கள் நெற்றியிலும் உடலின் குறிப்பிட்ட பாகங்களிலும் சின்னமாக தரிக்கின்றனர்.
அழகான கோபிநாத் மந்திரில் கோபிநாதனாக தரிசனம் தருகிறார்.
துவாரகையிலிருந்து குஜராத் சுற்றுலா கழகத்தின் மூலமாக பேட் துவாரகை, கோபி தலாப், நாகேஸ்வர் ஜோதிர் லிங்கம், ருக்மிணி மந்திர் என்ற அனைத்து இடங்களுக்கும் பேருந்து மூலம் 100 ரூபாய் கட்டணத்தில் அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வருகிறார்கள்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் தொடரும் ....
🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம் 🙏*

No comments:
Post a Comment