Monday, August 2, 2021

Namaskara tatavam part1 - Periyavaa

______________________________________
*ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர*

*தெய்வத்தின் குரல்*

( *1857*) *08.07.2021*                
_________________________

                   *நமஸ்காரத் தத்வம்*
                             
_________________________

                                  *நமோ நம:*
                                   👉பகுதி - *16*
__________________________
*அருள்மழை சேரும் 'தாழ்நிலை'*
_________________________
*ஸாஷ்டாங்க நமஸ்காரம்*

Part - *2*👆
_________________________

*ஸ்ரீமஹாபெரியவா*

*Volume 7*. *பக்கம்* *937*

 ****************************************
தெய்வத்தின் குரல் - ஏழாம் பகுதி*
*(*மஹா பெரியவா அருளுரை*)*

*தெய்வ விஷயம்*. 

*நமஸ்காரத் தத்வம்* 
(தற்போதய பகுதி)

*நமோ நம*: (16)
(தலைப்பு)

*அருள்மழை சேரும் 'தாழ்நிலை*
(மீண்டும் ஒருமுறை இன்றும்)

உசத்தி ஒன்றும் வேண்டாம்; தாழவே இருக்க வேண்டும். உயர்மட்டத்தில் ஜலம் நிற்காமல் தாழ்மட்டத்திலேயே சேருகிற மாதிரி நாம் மனோபாவத்தில் தாழ இருந்தால்தான் க்ருபாவர்ஷம் – அருள்மழை – நம்மிடம் பாய்ந்து வந்து தேங்கி நிற்கும். அதற்கு அடையாளமாகத்தான் தலையோடு கால் சரீரத்தை நில மட்டத்தோடு தாழ்த்திக் கிடப்பது.
பாகம் முடிவு.

*ஸாஷ்டாங்க நமஸ்காரம்*
(மீண்டும் இன்றும்)

இதற்கே ஸாஷ்டாங்க நமஸ்காரம் என்று பெயர்.

'ஸாஷ்டாங்க' என்றால் 'எட்டு அங்கங்களோடு கூடிய' என்று அர்த்தம். நம்முடைய எட்டு அங்கங்கள் பூமியில் படுகிற விதத்தில் நமஸ்கரிக்கிறதே 'ஸாஷ்டாங்க நமஸ்காரம்'.

பொதுவாக இந்த எட்டு அங்கங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால்: முன்னந்தலை, தோள் இரண்டு, கை இரண்டு, வக்ஷமும் (மார்பும்) வயிறும் சேர்ந்த torso என்கிற கபந்த பாகம், கால் இரண்டு ஆகிய எட்டு அங்கங்கள் நிலத்தில் படுவதால், படிவதால் 'ஸ அஷ்ட அங்கம் – ஸாஷ்டாங்கம்' என்று பெயர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த அஷ்ட அங்கங்கள் என்னென்னவென்று வேறே எப்படியெல்லாம் பல தினுஸாகச் சொல்லியிருக்கிறது என்று ஒருத்தர் எழுதியிருக்கிறார். அதில் ஒரு தினுஸுப்படி தலை, மோவாய் (முகவாய்க்கட்டை) காது இரண்டு, கை இரண்டு, கால் இரண்டு என்று எட்டு கணக்குச் சொல்லியிருக்கிறது. – அதாவது நெற்றியின் உச்சி பாகக் கபாலம் – பூமியில் படும்போது மோவாய்க் கட்டையும் படுவது என்றால் முடியாது. ஒரு ஸமயத்தில் இரண்டில் ஒன்றுதான் படமுடியும். அது மாத்திரமில்லை, தலையோடு கால் குப்புறக் கிடக்கும்போது காது எப்படி பூமியில் பட முடியும்? ஆகையினால் இங்கே ஒரு ஸமயத்தில் இல்லாமல், அடுத்தடுத்துச் செய்கிற பல கார்யங்களை ஒன்று சேர்த்து எட்டு அங்கம் பூமியில் படுவதே ஸாஷ்டாங்க நமஸ்காரம் என்ற க்ரியையாக அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

அந்தப் பல கார்யங்களில் எல்லாருக்கும் தெரிவது – என்னென்னவென்றால்: தலையைப் பூமியில் படவிட்டுக் குப்புறவிழுவது! சரீர ஸமர்ப்பணமே நமஸ்காரமென்றால், சரீரம் என்கிறபோது குறிப்பாக மார்பும், வயிறும் சேர்ந்த கபந்த பாகத்தைத்தான் நினைக்கிறோம். ஹ்ருதயம், ச்வாஸ்கோசம், ஜீர்ண உறுப்புக்கள் எல்லாம். அதோடு முதுகெலும்பும் உள்ள ஜீவமூலமான பாகம் அதுதானே! மூளையை அஹம்பாவ மண்டை கனம் ஏறாமல் இறக்க சிரஸை இறக்குகிறோம் என்றால், ஜீவனுக்கு ஜீவன் தருகிற சரீரத்தை – கபந்தத்தையும் – கீழே போடத்தான் வேண்டும். அது முக்யம். ஆனால் இப்போது நான் சொன்ன கணக்கில் அதைச் சேர்க்கக் காணோம்!

இதேமாதிரி, கபந்த பாகத்தோடு இரண்டு காலையுங்கூட விட்டுவிட்டு இன்னொரு கணக்கும் கொடுத்திருக்கிறது. அதன்படி கை என்று ஒரே பாகமாக நான் சொன்னதை புஜம் (arm) என்றும் ஹஸ்தம் (hand) என்றும் காட்டியிருக்கிறது.

இன்னும் பல தினுஸாகவும் சொல்லியிருக்கிறது. படித்தால் ஒரே குழம்பலாக ஆகும்.  'நமஸ்காரத்தில் இத்தனை தினுஸா? எதைப் பண்ணுவது?" என்று குழம்பிக் கொண்டு (சிரித்து) 'நமஸ்காரத்தின் திசைக்கு ஒரு நமஸ்காரம்!" என்று ஓடிப் போய்விடத் தோன்றலாம்!

ஆனபடியால் பேச்சு இழுத்துக் கொண்டு போனதில் இதுவரை நான் ஸாஷ்டாங்க விஷயமாகச் சொன்ன தினுஸுகளை மறந்து விடுங்கள். இப்போது, ஸம்ப்ரதாயமறிந்த பெரியோர்கள் எப்படிப் பூர்வ சாஸ்த்ர ஆதாரப்படி எட்டு அங்கங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார்களோ அதைச் சொல்கிறேன். அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

பூர்வ சாஸ்த்ரங்களில் இரண்டில் இந்த எட்டு அங்கங்களில் ஏழு அங்கங்களை ஒரே மாதிரி சொல்லியிருக்கிறது.

ஒன்று வ்யாஸ ஸ்ம்ருதி. அதில்

தோர்ப்யாம் – பத்ப்யாம் – ஜாநுப்யாம் – உரஸா – சிரஸா த்ருசா |

மனஸா – வசஸா சேதி ப்ரணாமோ(அ)ஷ்டாங்கமீரித ||

என்று இருக்கிறது.

இன்னொன்று, பரமேச்வர ஆராதனையில் விசேஷமாக உள்ள 'மஹா ந்யாஸ'த்தில் உமா-மஹேச்வரர்களை எப்படி நமஸ்காரம் பண்ணுவது என்பதற்கு ஆபஸ்தம்ப மஹர்ஷியின் வாக்கில் சொல்லியிருப்பது:

உரஸா-சிரஸா-த்ருஷ்ட்யா-வசஸா-மனஸா ததா |

பத்ப்யாம்-கராப்யாம்-கர்ணாப்யாம் ப்ரணாமோ(அ)ஷ்டாங்க உச்யதே||

முதலில் சொன்னதன்படி வரிசை க்ரமமாக 1) கை, 2) பாதம், 3) முழங்கால் முட்டி, 4) மார்பு, 5) தலை, 6) கண், 7) மனஸ், 8) வாக்கு என்பது எட்டு அங்கங்கள்.

இரண்டாவதாகச் சொன்னதில் முழங்கால் இல்லை. அதற்குப் பதில் காது இருக்கிறது. வரிசைப்படி அவற்றை ச்லோகத்தில் 1) மார்பு, 2) தலை, 3) கண், 4) வாக்கு, 5) மனஸ், 6) கால், 7) கை, 8) காது என்று சொல்லியிருக்கிறது.
(*இனி இன்றைய தொடர்ச்சி*......)

இரண்டு ச்லோகங்களிலும் மனஸ், வாக்கு, கண் என்ற மூன்றைச் சொல்லியிருக்கிறது. இங்கே கேள்வி வருகிறது. 'உடம்பையே சேர்ந்த எட்டு அங்கங்களை பூமி படப் போடுவதுதான் ஸாஷ்டாங்க நமஸ்காரம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் மனஸும் வாக்கும் எப்படிச் சேரும்? கண் உடம்பைச் சேர்ந்த அங்கந்தான் என்றாலும் அதை எப்படி பூமியில் படும்படிப் பண்ணுவது?" இப்படிக் கேள்வி.

இதற்குப் பதில், இந்த மூன்றும் க்ரியையாய், கார்யமாக இல்லாமல் பாவமாக நம் எண்ணத்தில் இருக்க வேண்டியவை. மனஸை நாம் நமஸ்கரிக்கும் பெரியவரிடம் தாழக் கிடத்த வேண்டும். வாக்கையும் அப்படியே. கண்ணிலே அவர் ஸ்வரூபத்தை நிறுத்தி அதையும் அவருக்குப் பணியச் செய்ய வேண்டும்.

பாவனையான இந்த மூன்று அங்கங்களைத் தள்ளி விட்டால், பாக்கியுள்ள – வாஸ்தவத்திலேயே அங்கம் என்று ஸ்தூலமாக இருக்கப்பட்ட – ஐந்து மிஞ்சுகின்றன.

ஒரு கணக்கின்படி இந்த ஐந்து 1) கை, 2) பாதம், 3) முழங்கால், 4) மார்பு, 5) தலை. இன்னொன்றின்படி 1) மார்பு, 2) தலை, 3) கால், 4) கை, 5) காது.

இவற்றிலே ஒன்றில் முழங்காலையும், அதை மாற்றி இன்னொன்றிலே காதையும் சொல்லியிருக்கிறது.

இப்படி ஐந்து ஐந்தாக இரண்டு இருப்பதில் நமக்குத் தலையும், மார்பும் ஒவ்வொன்றுதான் இருக்கின்றன. முதல் கணக்கில் வரும் பாதம் என்பதை foot என்று மட்டும் அர்த்தம் பண்ணிக்கணும். அதாவது கணுக்காலுக்குக் கீழே விரல்களோடு உள்ள பாகம் என்று மாத்திரம். அந்தப் பாதம், முழங்கால், கை ஆகிய ஒவ்வொன்றும் இரண்டிரண்டு இருக்கின்றன. ஆக ஒரு தலை, ஒரு மார்பு, இரண்டு பாதங்கள், இரண்டு முழங்கால்கள், இரண்டு கைகள் என்று மொத்தம் கூட்டினால் நமஸ்காரத்தில் பிரயோஜனப்படுகிற எட்டு ஸ்தூலமான அங்கங்களே கிடைத்து விடுகின்றன!

இன்னொரு கணக்குப்படி முழங்காலை தள்ளி விட்டுக் காதை எடுத்துக் கொண்டோமானாலும் நமக்கு இரண்டு காதுகள் இருக்கின்றனவே! ஆகையினால் இங்கேயும் அஷ்டாங்கம் என்ற கணக்கு, நமஸ்கார க்ரியையில் நாம் ஸ்தூலமாகப் பயன்படுத்தக்கூடிய எட்டு சரீர உறுப்புக்களாக இருக்கின்றன.

இரண்டிலும் 'உரஸ்' என்று வருவது வக்‌ஷ (மார்பு) ப்ரதேசத்தை மட்டும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிலேயே வயிறும் சேர்ந்திருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். வக்ஷம் பூமியில் படிய நமஸ்கரித்தால் வயிறும் பூமியிலே பட்டுத்தான் ஆக வேண்டும். அதைத் தனிப்படச் சொல்லவேண்டியதில்லை. அதனாலேயே, கபந்த பாகம், torso என்றேனே, அந்த முழு பாகத்தையுமே உரஸ் என்பதாக இந்த இரண்டு ச்லோகங்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு ச்லோகத்தையும் சிஷ்டர்கள் (மேலோர்) எடுத்துக் கொண்டாலும், இந்த இரண்டிலும் கூடப் பின்னால் சொன்னேனே, காதைச் சேர்ந்த ச்லோகம், அதைத்தான் விசேஷமாகப் போற்றி நடைமுறையிலும் செய்கிறார்கள்.

முதல் ச்லோகம், இரண்டாவது ச்லோகம் இரண்டிலுமே பாதங்களை 'பத்ப்யாம்' என்று சொல்லியிருக்கிறது. ஆனால் முதல் ச்லோகத்தில் அதை foot ஓடு முடித்திருக்கிறது. முழங்கால்களை 'ஜாநுப்யாம்' என்று சொல்லியிருக்கிறது. இரண்டாம் ச்லோகத்தில் அதே 'பத்ப்யாம்' என்ற வார்த்தையால் இடுப்புக்குக் கீழேயிருந்து கால் விரல்கள் வரை உள்ள leg என்ற முழு அவயவத்தையும் குறிப்பிட்டிருக்கிறது. இப்படி அந்த பாகம் முழுதையும் சொன்னதால்தான் இங்கே தனியாக முழங்காலை மறுபடிச் சொல்ல வேண்டியதில்லை என்பதால் அதைத் தள்ளி, குறைகிற அந்த அவயவத்துக்குப் பதிலாகக் காதைச் சேர்த்திருக்கிறது. இதைத்தான் சாஸ்த்ரஜ்ஞர்கள் விசேஷமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றேன்.
மேலும் நாளையும் தொடரும்..

*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*
**********************************

*"Deivathin Kural*-Part-7*
*Maha Periyava's Discourses* 

Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma in advaitham.blogspot*. Our thanks.

*Deiva Sãkshi* – *Divine Witness*

*NAMASKARA THATHUVAM*
(Current Section)
*Namo Nama*'
(Current Topic)

*The Lower State Where the Rain of Grace Reaches*

*அருள்மழை சேரும் தாழ்நிலை*
(Repeated)

66.     Instead of looking for high position we should abide with lower positions with humility.  Like the water seeks the lower ground automatically, if we abide with ourselves, then the shower of Grace will flow to us and surround us.  As an indication of that only, we lay our whole body from head to feet, flat on the ground.
End of chapter.

   *Sãshtãnga* *Namaskãram*.                   
 67. This action is known as Sãshtãnga Namaskãram.  Sãshtãnga means 'with eight limbs'.  Eight parts of our body should be touching the ground when we do this action.  People are of the opinion that because eight body parts, namely, forehead, two shoulders, two hands, chest and stomach known as the torso, two legs will be touching the ground, it is called, 'sa + ashta + angam = sãshtãngam' – 'स + अष्ट + अङ्गं = साष्टाङ्गं'.  One gentleman has written that this definition has been interpreted variously.  In that one version is that head, chin, two ears, two hands and two legs; constitute those eight parts.  The fore head and the chin cannot touch the ground simultaneously.  So also the ears cannot touch the ground without turning the head.  So, we have to understand that we have to move our face by different actions for all these parts to come in contact with the ground. 

67.          There are other versions. What everybody knows and does is to mainly let their head down to lessen their pride and let the torso touch the ground since it has the stomach and chest with many of the important parts as the hearts, lungs, spine, kidneys, and liver.  Then there is another version in which the 'bhujam' – 'भुजं' or arms and 'hastam' – 'हस्तं' that is, the hands have been separately mentioned as different body parts! There are many more versions and if we read all of them, we may get confused and may walk away saying 'good-bye' to the very idea of doing Namaskãra; that is, 'Namaskãra to Namaskãra'!  So, forget about the different versions of Sãshtãnga Namaskãra that I have told you so far.  Now, I shall tell you just two versions with a slight variation between them, one as per Vyãsa Smruti and the other by Ãpasthamba Rishi as given in the Maha Nyãsa preparatory to doing Pooja for Uma-Maheshwara.

68.          The sloka as given in Vyãsa Smruti is this.  'Dhorbhyãm padbhyãm jãnubhyãm urasã sirasa dhrusã | Manasã vachasã cheti praNãmo ashtãngameerita:' ||  The sloka as per Ãpasthamba Rishi is this.  Urasã  sirasã dhrushtyã vachasã manasã tathã | Padhbhyãm karãbhyãm karNãbhyãm praNãmo ashtãnga uchyate ||  As per the first sloka, the body parts listed are, 1) Hands, 2) Feet, 3) Knees, 4) Chest, 5) Head, 6) Eyes, 7) Manas aka Mind and 8) Speech, making up the eight parts.  In the second one, knees are not mentioned and ears are included.  The sloka lists 1) Chest, 2) Head, 3) Eyes, 4) Speech, 5) Manas, 6) Legs, 7) Hands and 8) Ears.
*Continuing further from here*.........

69.          Both the slokas have included the Mind, Speech and Eyes.  The question arises as to how to how to lay down mind and speech?  We thought that in Namaskãra we are required to lay down the whole body on the ground!  Then, how are we to lay the eyes down, though they are parts of the body only?  The answer to that is, instead of physically laying them down, one should mentally control oneself while doing Namaskãra, not thinking of anything else, not speaking or conversing and not letting our eyes roam about here and there, thereby being sincere and serious in our act of Namaskãra. 

70.          If these subtle parts occurring in both the slokas are set aside, we are left with five.  In them hands, legs, chest and head are common.  One sloka mentions the knees and the other talks about the ears instead. Within these we get eight body parts as there are two each of the eyes, legs, one head and one chest, two knees or two ears; making up eight.   In both the slokas what is mentioned as 'urasã' should be understood as the torso, inclusive of chest and the stomach.  When the chest touches the ground normally the stomach will also be in contact with the ground.  As given in the second sloka which mentions the ears, you may observe people turning their faces right and left to ensure that both the ears touch the ground. 

71.          Both the slokas make a mention of the feet as 'padbhyãm'.  But in the first sloka it is evidently meaning the feet as there is a special mention of the knees as 'jãnubhyãm'.  In the second the word 'padbhyãm' evidently means the whole leg including the knees, which are not separately mentioned.  Instead the ears are additionally mentioned in the second sloka.  
To be continued.........

*Maha Periyava thiruvadigal Saranam*.

*************************************

No comments:

Post a Comment