Sunday, August 15, 2021

Is a son mandatory for moksha? - HH Sri Abhinava Vidyateertha Mahaswamigal

*சிருங்கேரி சங்கராச்சார்யார் ஶ்ரீஶ்ரீ அபிநவவித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் வாக்கு :*

Reference :

ஶ்ரீஆதிசங்கரர் அருளிச் செய்த "ஶ்ரீப்ரபோத ஸுதாகரம்" :
ஸ்லோகம் :
2.35, 2.36, & 2.37.

இதற்கு ஶ்ரீஆசார்யாள் வியாக்யானம்/விளக்கம் :

*"பிள்ளையை பெற்று எடுப்பதானது மோக்ஷத்தை அளிக்கிறது என்று சொல்ல முடியாது.*

*ஏனென்றால், பிள்ளைகள் யாருக்கெல்லாம் இருக்கின்றோர்களோ, அவர்கள் எல்லாம் மோக்ஷத்தை அடைந்து விட்டனர் என்பது கிடையாது.*

*மேலும், பிள்ளையைப் பெற்றெடுப்பது மாத்திரமே மோக்ஷத்தைத் தந்து விடுமேயானால், ஸம்ஸார சக்கரமே பிறகு நின்று போய் விடும்.*

*ஏனென்றால், எண்ணற்ற மக்கள் புத்திரன் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.*

*புத்திரன் ஆனவன் இவ்வுலகிலும், மறுஉலகிலும் ஒருவன் அடையும் மகிழ்ச்சிக்குக் காரணமாக ஆக முடியாது.*

*என்ன காரணம் என்றால், உயர்ந்த பரலோகத்தை அடைவதற்காக, வேதமானது "ஜ்யோதிஷ்டோமம்" போன்ற விசேஷ கர்மாக்களை வகுத்திருக்கிறது.*

*புத்திரப்பேறே அதற்கான வழி என்று வேதம் வெளிப்படையாகக் கூறுவதில்லை.*

*அதேசமயம், செல்வம், புத்திரப்பேறு முதலியவைகளால் மோக்ஷத்தைத் தர இயலவே இயலாது என்பதை வேதம் அறுதியிட்டுக் கூறுகிறது.*

*தத்துவத்தைக் காதால் கேட்டு அறிந்து, அதை மனனம் செய்து, பிறகு அதன் மீதிலேயே மனத்தை ஒருமுகப்படுத்தி ஆத்மாவை அறிவதனால் மட்டும்தான் ஒருவனுக்கு சாவிலிருந்து விடுதலை கிடைக்கிறது என்று வேதம் அறுதியிட்டுக் கூறுகிறது.*

*புத்திரன் அவசியம் தேவை என்ற பொருள்பட வரும் வேத வாக்கியங்கள்,*
 *"புத்ரேஷ்டி" முதலான யாகங்கள் செய்யப்படுவதைப் புகழ்வதற்காகவேதான் வருகின்றன என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும்*.

*புத்திரப்பேறு ஏற்படுவதற்காக "புத்ரேஷ்டி யாகம்" பயன்படுகிறது*.

*குழந்தை இல்லாதவர்கள் அந்த யாகத்தைச் செய்வதை ஊக்குவிப்பதற்காகத்தான் அதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.*

*தாய் போன்று விளங்கும் வேதமானது, யார் ஆசை இல்லாமல் இருக்கிறார்களோ, அவர்களையும் அத்தகைய யாகம் செய்யுமாறு விழையவில்லை.*

Highlight :

*வேதமானது ஆசைகளை அகற்றிக் கொள்வதற்கான வழிமுறைகளைக் குறிப்பிடுகிறதே தவிர, ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கோ, புத்திரப்பேறுக்கோ தூண்டுவதில்லை.*

*மிக அரிதாக ஏதோ ஒருவனுக்குத்தான் அனைத்து நற்குணங்களும் பொருந்திய புத்திரன் கிடைக்கிறான்.*

*அத்தகைய புத்திரன் பிறந்த பிறகும், அப்பையன் சிறுவயதிலேயே இறக்க நேரிட்டாலோ, நோய்வாய்ப்பட்டாலோ, அல்லது எதிர்காலத்தில் அப்பையனுக்குக் குழந்தைகள் பிறக்காவிட்டாலோ, பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.*

*சிறு குழந்தையானது, வியாதிகளால் பீடிக்கப்பட்டாலோ, கிரகக் கோளாறுகளால் அவதிப்பட்டாலோ, அதன் பெற்றோர்களுடைய வருத்தத்திற்கு அளவே இருக்காது.*

*குழந்தை சிறிது வளர்ந்து விட்டது, ஆனால் அது முட்டாளாக இருந்து விட்டது என்றால், அப்போதும் பெற்றோர் மகிழ்ச்சி அடையப் போவதில்லை.*

*உபநயனத்திற்குப் பிறகு பையன் படிக்காவிட்டாலோ, அல்லது படித்த பின்பு திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்காவிட்டாலோ, அப்பொழுதும் பெற்றோர் வருத்தமாகத்தான் இருப்பார்கள்".*

-------------------------------

மஹாநாராயண உபநிஷத் வாக்கு :
(1.10.21)

*"கர்மாவினாலோ, பிள்ளைகளினாலோ, அல்லது செல்வத்தினாலோ அவர்கள் இறவாத நிலையைப் பெறவில்லை*.
*தியாகத்தினால்தான் சிலர் இறவாத நிலையைப் பெற்றுள்ளார்கள்".*

-------------------------------

ஆதாரம் :

யோகமும் ஞானமும் ஜீவன்முக்தியும்.

சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீஶ்ரீஅபிநவவித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் ஆன்மீக சாதனை என்னும் தெய்வீக லீலை குறித்த விவரங்களின் தொகுப்பு.
ஶ்ரீவித்யாதீர்த்த ஃபவுண்டேஷன்,
சென்னை.
பக்கம் : 38, 42 to 45.

No comments:

Post a Comment