Thursday, July 1, 2021

soundarya Lahiri part3 -periyavaa

*தெய்வத்தின் குரல*் - *ஆறாம் பகுதி*
(மஹா பெரியவா அருளுரை)
*ஸெளந்தர்ய லஹரி*

*செம்மையின் பெருமை*
(நேற்று தொடங்கிய இந்த பாகத்தின் கடைசி பாரா உரைகள் மீண்டும் ஒருமுறை இன்றும்)

சிவப்பு நிறம் சக்தியை, கார்ய வீர்யத்தைக் காட்டுவது. வெளுப்பு, எல்லாம் அடங்கிப் போன சாந்தி. உடம்பிலே கூடப் புஷ்டி ஏறினால் சிவப்பாகிறது. புஷ்டி குறைந்தால் pale-ஆக வெளுக்கிறது. கார ஸாரமாக ஆர்க்யூ பண்ணி நாம் ஒருத்தரை ஜயித்தால், "செம்மையாக குடுத்தேன்", "வெளுவெளுன்னு வெளுத்துக் கட்டினேன்" என்று இரண்டு விதமாகச் சொல்கிறோம். செம்மையாகக் கொடுத்ததாகச் சொல்லும் போது நாம் எப்படி சக்தியோடு தாக்கினோம் என்பதைத் தெரிவிக்கிறோம். வெளுத்துக் கட்டியதைச் சொல்லும்போதோ எதிராளியை எப்படி சக்தியிழந்து அடங்கப் பண்ணினோமென்பதைத் தெரிவிக்கிறோம். அம்பாளோ வெள்ளை சிவனையே சிவப்பாக ஆக்கிக் கார்ய ப்ரபஞ்சத்தை அவனோடு சேர்ந்து நடத்துகிறாள்!

ச்ருங்காரச் சிவப்பு இருக்கட்டும். கருணையின் சிவப்பே நமக்கு வேண்டியது. இந்த ச்ருங்காரம் உண்டானதே இதனால் ஸ்ருஷ்டியாகிற லோகத்திடம் பிற்பாடு கருணை காட்டவேண்டும் என்பதற்காகத்தான். அத்விதீய ப்ரஹ்மத்திற்கு அன்பு காட்டணுமென்ற எண்ணமே முதலில் வந்தது. அன்பு காட்ட ஆள் வேணுமே என்பதற்காகவே லோகத்தை ஸ்ருஷ்டி செய்ய நினைத்தது. தாய் தந்தையராக இருந்து அந்த ஸ்ருஷ்டியைப் பண்ணி விளையாடுவோம் என்றே ச்ருங்கார மூர்த்தியை உண்டாக்கிற்று. ஒரே அன்புதான் – சாந்த வெள்ளையிலிருந்து சிவப்பாக முதலில் பிரிவது அதுதான். சிவ-சக்திகளான ஸதி-பதி என்னும்போது அந்த அன்புக்கு ச்ருங்காரம் என்று பெயர்; ஸ்ருஷ்டியிடத்தில் காட்டும் போது அதுவே கருணை எனப்படுகிறது. நமக்கு வேண்டியது அந்தக் கருணைதான்.

மதுரமான மாம்பழத்திலிருந்து பரம கசப்பான பாகல் வரையில் நன்றாகப் பழுக்கிறபோது, கனிகிற போது அவள் சிவப்பாக்கி விடுகிறாள். நமக்கும் அவளுடைய கருணைச் செம்மை அப்படி மனஸைப் பழுக்க வைத்து, கனிய வைத்து மனச் செம்மை தரவேண்டும்.

ச்ருங்காரச் சிவப்பிலிருந்து காருண்யச் சிவப்புக்கு நானே ஏதோ மேதாவித்தனத்தால் நீட்டி விட்டேன் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம்! அடுத்த ச்லோகத்திலேயே ஆசார்யாளே சொல்லியிருப்பதைத்தான் சொன்னேன். ரொம்ப அழகாகச் சொல்லணியோடு பாடியிருக்கிறார்: "ஜயதி கருணா காசித் அருணா; ஜகத்–த்ராதும் சம்போர்–ஜயதி கருணா காசிதருணா": "ஜகத்" –- லோகத்தை; "த்ராதும்" –- ரக்ஷிப்பதற்காகவே; "சம்போ:" –- அசையாத சிவனின்; "கருணா" -– கருணையானது; "காசித்" –- வர்ணனாதீதமான; "அருணா" -– அருணச் சிவப்பு அம்பாளாகி; "ஜயதி" – வெற்றியோடு விளங்குகிறது; லோகாநுக்ரஹத்திற்காகவே சாந்த வெள்ளை சிவம் கருணைச் சக்தியான அருணா என்ற அம்பாளாகி வெற்றியோடு திக்விஜயம் செய்து கொண்டிருக்கிறது.

இங்கே சிவ-சக்தி அத்வைதம் வந்துவிடுகிறது.
(இந்த பாகம் இத்துடன் நிறைவு பெறுகிறது)
(இனி இன்றைய புதிய பகுதிகள்)

*சந்திரனை வாஸனைப் பாண்டமாக*
(இன்றைய புதிய பாகம்)

ச்ருங்காரமாகச் சொன்னார். அப்படி தம்பதியில் பத்னியாயிருப்பவளுக்குக் குளிர்ச்சியாகப் பன்னீரில் கஸ்தூரி, பச்சைக் கர்ப்பூராதி வாஸனை த்ரவ்யங்கள் கிண்ணத்தில் போட்டு வைத்து உபசாரம் பண்ணுவது வழக்கம். அந்த மாதிரி அம்பாளுக்கு வைத்திருக்கும் பன்னீர்க் கிண்ணந்தான் தளதளவென்று சீத நிலா ரொம்பியுள்ள சந்திரன் என்று நூதனமாகக் கல்பனைகள் பண்ணி அடுத்த ச்லோகம் [94] செய்திருக்கிறார். 'சந்திரன் என்பது அம்பாளுக்கான பன்னீர்க் கிண்ணந்தான். சந்திரனில் களங்கம் என்று கறுப்புத் திட்டைச் சொல்கிறோமே, அதுவும் வாஸ்தவத்தில் அந்தப் பன்னீரில் போட்டிருக்கும் கஸ்தூரிதான். ஒவ்வொரு கலையாக தினமும் சந்திரனில் ப்ரகாசம் வளருகிறது என்று நாம் சொல்வது அதில் செதில் செதிலாகக் கர்ப்பூரம் சேர்த்திருப்பதுதான். அம்பாள் தினந்தோறும் அவற்றை உபயோகிக்க உபயோகிக்கக் கிண்ணம் காலியாவதும், ப்ரம்மா அவற்றை replenish பண்ணுவதுமாக [குறைந்ததை இட்டு நிரப்புவதுமாக] நடக்கிறது' என்று விசித்ரமாகக் கல்பனை பண்ணியிருக்கிறார்.

எதற்காக இப்படியொரு கல்பனை என்றால், பார்வதி பரமேச்வரர்களுக்குக் கலியாணம் பண்ணிப் பார்த்து ஸந்தோஷப்பட்டது முக்கியமாக ப்ரஹ்மாதான். அதனாலேயே திருக்கல்யாணத்தோடு வரும் உத்ஸவத்தை ப்ரஹ்மோத்ஸவம் என்பது. இங்கே தம்பதியாகச் சொல்லி முடிக்கும்போது அவரை எப்படியாவது கொண்டு வரணும் என்று ஆசார்யாளுக்கு! அதோடு நிர்குண ப்ரஹ்மம் இந்தப் பஞ்ச க்ருத்ய தம்பதியான நிலையிலே முதல் க்ருத்யமான ஸ்ருஷ்டியே விசேஷமாகத் தெரிகிறதென்றால், அந்த ஸ்ருஷ்டிக்கென்றே தனி அதிகாரியாக இருக்கிற ப்ரஹ்மாவுக்கும் ஸ்தோத்ரத்தில் சிறப்புச் செய்யணுந்தானே? அதோடு வர்ணனை ஆரம்பத்தில் சந்திரசேகரியாகத் தானே சொன்னார்? அவளே சந்த்ர மண்டல வாஸினியும் ஆச்சே! சந்த்ர ஸம்பந்தந்தானே அவளுக்கு ஜாஸ்தி? அப்படியிருக்க, முந்தின ச்லோகத்தில் அவளை 'அருணா' என்று ஸூர்ய ஸாரதியின் பேரில் சொன்னதோடு விட்டுவிட்டால் ஸரியில்லை. சந்திரனுக்கென்றே ஒரு முழு ச்லோகம் பண்ணிக் கொடுக்கணும் என்றே இப்படி ஒரு கல்பனை செய்திருக்கிறார். ஸுமங்கலியை 'ஸுவாஸிநி' என்பது. அதனால் அவளுடைய வாஸனைப் பாண்டமாகச் சந்த்ரனைச் சொல்லி ஏற்றம் கொடுத்துவிட்டார். சந்த்ரன் அவளுக்கு ஒரு ஜிண்டான் மாத்திரைச் சிமிழ் என்றால் அவள் எவ்வளவு பெரியவளாயிருக்கணும் என்றும் யோஜிக்க வைக்கிறார்.
(இந்த பாகம் இத்துடன் நிறைவு பெறுகிறது)

*ஆசார்யாள் விடுக்கும் எச்சரிக்கை!*
(இன்றைய புதிய பாகம்)

ஆசார்யாளுக்கு ஜனங்களின் மனஸ் தப்பான வழியில் திரும்ப இடமே கொடுக்கக்கூடாது என்பதில் ஒரு தாயாருக்கு மேலே அக்கறை உண்டு. அதனால் ச்ருங்காரத்தைச் சொல்லி விட்டோமே, அதை ஜனங்கள் விகல்பமாக எடுத்துக்கொண்டு தப்பில் போய்விடப் போகிறார்களே என்று விசாரம் உண்டானாற் போலிருக்கிறது. இன்னொரு விசாரம்: "ஸ்ரீசக்ர உபாஸனை ரொம்ப ஜாக்ரதையாப் பண்ணணும்னு சாஸ்த்ரஜ்ஞாள்-ங்கிறவா பயமுறுத்தினாலும் அதிலே ப்ராண ஸ்தானத்திலே பஞ்ச பரஹ்மாஸனையா இருக்கற அம்பாளே பதியோட ச்ருங்காரமா, நம்ம எல்லோர்கிட்டேயும் கருணையா இருக்கறதத்தானே இவர் [ஆசார்யாள்] பாடியிருக்கார்? அதனாலே, பயந்துண்டு, இப்டி யிப்டி நியமம்னு ஜாக்ரதை பண்ணிண்டுதான் யந்த்ராராதனை [ஸ்ரீசக்ர உபாஸனை] செய்யணும்னு இல்லாம, ஈஸியா அம்மா-அப்பாவுக்கு நம்ம மனஸுப்படி முடிஞ்சதை, தெரிஞ்சதைப் பண்ணலாமே?" என்று ஜனங்கள் ஆரம்பித்துவிடப்போகிறார்களே என்றும் ஆசார்யாள் கவலைப்பட்டிருப்பார் போலிருக்கிறது. நியமம் என்று விசேஷமாக இல்லாமல் அம்மா-அப்பா என்று ப்ரேமையின் பேரிலும் உபாஸிக்கலாந்தான். ஆனால் அப்போது யந்த்ரம் கூடாது; மந்த்ரங்களையும் ஆவாஹனாதிகளுக்கு இழுக்கக்கூடாது. ஏதோ ஒரு படத்தை வைத்து நாலு பூ, நாமாவைச் சொல்லிப் போட்டு, பஜனை-கீர்த்தனை பாடுவது என்று வழிபட்டுவிடலாம். 'வழிபட்டு விடலாம்' என்றது, உண்மையான ப்ரேமை பொங்கிக் கொண்டு வராமல், ஆனாலும் விதிப்படி பூஜை பண்ண இஷ்டமில்லாததால், ஏதோ நமக்கு அப்படியே பகவத் ப்ரேமை பொங்கிக் கொண்டிருக்கிற மாதிரி வைத்துக் கொண்டு, ஒரு மேம்போக்கான ப்ரேமையிலேயே உபாஸிக்கிறபோது, ஏதோ கொஞ்சம் வழிபட்டுவிட்டு, ஸாரம் ஒன்றும் உள்ளே போகாமல் விட்டுவிடுவதாகவே தான் இருக்கிறது! ஒரு விதிமுறைக்கு, நியமத்துக்குக் கட்டுப்பட்டு பூஜை பண்ணும் மனப்பான்மை இல்லாதபோது ஸ்ரீயந்த்ர பூஜை கூடாது. ந ச்ரேயோ நியமம் விநா [நியமமில்லாவிடில் ச்ரேயஸ் இல்லை] என்பது மாத்திரமில்லாமல், நியமம் தப்பினால் விபரீதமே ஆகிற யந்த்ராராதனைக்கு யார் வேணாலும் போய்விடக்கூடாதே! அசட்டுத்தனமாக ஜனங்கள் அப்படிப் போய்க் கஷ்டப்படப் போகிறதுகளே, என்று ஆசார்யாள் நினைத்திருக்கிறார். ஸ்தோத்ரத்தை முடிக்கிற கட்டத்திற்கு வந்துவிட்டார். அதனால் முறைப்படி உபாஸனை பண்ணினால் என்ன பலன் என்று சொல்வதற்கு முன்னாடி முறைதவறிப் பண்ணி விபரீதத்தை ஸம்பாதித்துக் கொள்ளாமல் 'வார்ன்' பண்ண நினைத்திருக்கிறார்.

இரண்டு தினுஸில் முறை தவறலாம்: முதல் ஸெக்‌ஷனில் முக்யத்வம் கொடுத்துச் சொன்ன யந்த்ராராதனையில் நியம நிஷ்டைக்கு லாயக்கில்லாதவர் போய்க் கஷ்டத்தில் மாட்டிக்கொள்வது ஒன்று; இரண்டாம் ஸெக்‌ஷனில் சொன்ன திவ்ய தாம்பத்ய உறவை ஏதோ நாவல், ஸினிமாக் கேளிக்கை மாதிரி எடுத்துக் கொண்டு, குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக்கொண்ட கதையாகப் பண்ணிக் கொள்வது ஒன்று. ஆசார்யாள் காலத்து மநுஷ்யாள் எது ஸரியான அப்ரோச்சோ அப்படித்தான் போயிருப்பார்கள் என்றாலுங்கூட, தப்பு அப்ரோச்சுக்கு இடம் கொடுக்காமல் எச்சரித்து வைத்துவிடுவது நல்லது என்று ரொம்பவும் பொறுப்போடு நினைத்திருக்கிறார். அப்போதைவிட வ்யவஸ்தைகள் கெட்டுப்போய் எதையும் மனம் போகிறபடி அர்த்தம் பண்ணிக்கொள்ளும் துர்தசை இப்போது ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்பவுங்கூட இந்த மாதிரி ஒரு ஸ்தோத்ர பாராயணம் என்று போகிறவர்களில் பெரும்பாலோர் இந்த விஷயம் ஒன்றிலாவது சுத்தமான கண்ணோடுதான் பார்த்துக்கொண்டு போகிறார்கள். ஆனாலும் 'பெரும்பாலோர்' என்றுதான் என்னால் சொல்ல முடிகிறதே தவிர 'எல்லாரும்' என்று சொல்ல யோஜனையாய்த்தான் இருக்கிறது. அது தவிர, ஜனஸமூஹத்தில் இப்படி 'பாராயணம்' என்று பக்தியாகப் படிப்பவர்கள் மட்டுமில்லாமல், க்யூரியாஸிடிக்காகப் படிப்பவர்கள், ஆராய்ச்சி என்று படிக்கிறவர்கள், இலக்கியம் என்றே படிக்கிறவர்கள், தப்புக் கண்டுபிடிப்பதற்கென்றே படிப்பவர்கள் ஆகியவர் இப்போது சேர்ந்திருக்கிறார்கள். ஆகையால் உசந்த மனக் கட்டுப்பாட்டுடன் பாராயணம் பண்ணுவதற்குத்தான் இந்த ஸ்தோத்ரம் ஏற்பட்டது; திவ்ய தாம்பத்யத்தை ரஸிப்பதானாலும் ஸரி, யந்த்ராராதனை ஆரம்பிப்பதானாலும் ஸரி, நல்ல இந்த்ரிய நிக்ரஹத்துடன் தான் செய்யணும் என்று தெரிவிக்க வேண்டியது அவச்யமாகிறது. இதை அன்றைக்கே ஸ்தோத்ரம் எழுதி வைத்தபோது ஆசார்யாள் பன்ணிவிட்டார்.

கீழ்த்தர உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறோமோ என்று கவலையே படாமல், அப்படித் தூண்டிவிட வேண்டுமென்றே இண்டென்ஷனோடு எழுதுகிறவர்கள் இக்காலத்தில் ஜாஸ்தியாகி வருவதாகத் தெரிகிறது. இதை ஜஸ்டிஃபையும் செய்கிறார்கள்; இப்படித்தான் எழுதணும் என்கிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன். ஒருத்தர் ஜனங்கள் மனஸ் தப்பிப் போகப் பண்ணுவதற்குக் காரணமாயிருந்துவிட்டால் தப்புப் பண்ணும் ஜனங்களுக்குப் பாபம் ஏற்படுகிறதென்றால், காரணமாகத் தூண்டிக் கொடுத்த அவருக்கு மஹா பாபமே காத்துக் கொண்டிருக்கிறதென்று புரிந்து கொள்ளாததால் இப்படிப் பண்ணி வருகிறார்கள். ஆசார்யாளோ ஒரு க்ரந்தகர்த்தாவுக்கு, நூலாசிரியருக்கு இந்த விஷயத்திலிருக்கும் பொறுப்பை உணர்ந்து, படிக்கிறவர்களுக்கு இருக்க வேண்டிய மனப்பான்மையைப் பற்றிச் சொல்லி முடிக்கிறார்.

'மனக்கட்டுப்பாடு', 'இந்த்ரிய நிக்ரஹம்' என்று சொன்னதைப் பூர்ணமாக ஸாதித்துக் கொள்வது ரொம்பவும் கஷ்டம். அப்படிப் பண்ணினவர்கள்தான் படிக்கலாம், யந்த்ர உபாஸனை பண்ணலாம் என்றால் லக்ஷத்தில் ஒருத்தர்கூடத் தேற மாட்டார்கள்! ஆகையால் முடிந்த அளவுக்காவது இந்தக் கட்டுப்பாட்டுக்கு முயற்சி பண்ணுகிறவர்களும், அல்லது அது ஏற்பட வேண்டும் என்ற தாபமாவது இருக்கிறவர்களும்தான் இவற்றில் பிரவேசிக்கலாமென்று வைத்துக்கொள்ளலாம். படிக்கிற மட்டுமாவது மனக்கட்டுப்பாடு, பூஜை பண்ணுகிற மட்டுமாவது நியம நிஷ்டை அவசியம்.
(இந்த பகுதியின் மேல் உரைகள் மீண்டும் நாளை தொடரும்)

*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*
*********************************************

*"Deivathin Kural*-Part-6*
*Maha Periyava's Discourses on Soundarya Lahari*
Note: We have now got the essence of this subject for our english readers.*A perfect rendition courtesey by Lt. Col KTSV Sarma  in advaitham.blogspot*. Our thanks.

*Part : SOUNDARYA LAHARI*
*செம்மையின் பெருமை*
*The worth of Redness*
(This chapter's yesterday's penultimate texts once again today)

The red colour indicates activity and dynamism.  The whiteness is indicative of peace and Shanti.  In this human body also when there are greater healthy inputs there is reddish hue.  When we defeat the opponent we say that we roundly defeated him red and blue or that we caused him to pick up the white flag!  AmbãL is causing the whiteness of Siva to become red, so as to organize, manage and run the Kãrya Prapancham along with her.  Let the redness of Sringãra be aside, what we need is the redness of kindness and compassion.  The very logic of creation of Sringãra Rasa is due to the first urge in the undivided oneness of Brhmam to show love or demonstrate love.  But to whom is this love to be shown to or directed towards?  So there had to be an object, towards whom that love can be directed. Hence the decision to play the game of Love and play the game of Daddy-Mummy for the whole of creation!  So from the wholeness and oneness of white, the first colour that separates is this Red and then the other colours of Red à Orange à Yellow à Greenà Blue à Indigo à Violet à Ultra-Violet and it goes on!  As Siva and Shakti as husband and wife; it is conjugal love and as towards children and various forms of living beings and animate and inanimate life; it is kindness, compassion, 'Grace', 'करुणा', 'அருள்', 'वात्सल्यं', 'அன்பு'   and 'Redness of maturity and ripeness'! 

 Please do not think that I am just creating some world of mine own here and that I have jumped or made a paradigm shift from the different hues of the red indicating the various related aspects of the whole range of Love and Passion to the red hues of kindness and compassion!.  From the sweetest of the Mango fruit to the bitterest of the bitter gourd; with ripeness and maturity come redness and some sweetness too!  The science teacher and the instructor in survival techniques will tell us that redness is both a danger signal as well as 'not to be ignored' sign so that our own minds may also be ripened and matured!  That is what our ÃchãryãL has said in the next sloka, 'jayati karuNa kachid AruNa jagat-tratum sambhor-jayati KaruNa kachid aruNa' – 'जयति करुणा अरुणा; जगत त्रातुं-संभोर-जयति करुणा काचिदरुणा'.  'संभो:' – the non-moving inert Siva's, 'करुणा' – compassion and love; 'जगत त्रातुं' – for protecting the world काचिदरुणा – becoming an indescribable redness (as AmbãL), is जयति – is victorious!  It is Siva's kindness that is AmbãL, "Whose hair is twisted (while nothing else is twisted!), her smile is so easy and natural; whose mind is soft like the Sireesha flower; whose breast area is hard like a rock; whose mid-riff is slim; filled and wholesome in the chest and back and that is red all over, Siva's indescribable beauty of kindness is successfully victorious so as to save and protect the worlds! That is the message of sloka No 93, which also is a message of the oneness of Siva and Shakti – 'Shiva- shaktaikya roopiNi' – 'शिवशक्त्एैक्य रूपिणी', bringing in the Siva – Shakti Adwaitam!
(This chapter ends here)
(Continuing with new chapters from here)

*சந்திரன் ஒரு வாசனைப் பெட்டி*
*The Moon as a Box of Cosmetics & Scents*
(A new chapter)

   This next sloka is a change in the perspective, in all fun!  Between wedded couples, a wife needs some cosmetic essentials in support.  This is the main idea in sloka No 94.  So this moon is in fact the utensil or box of cosmetics and scents in which some of the essential items such as Rose-Water, a fragrant turmeric powder known as 'Kasturi ManjaL'.  Then there is some refined camphor known as – 'pachchai kalpooram' – 'பச்சைக் கற்பூரம்' or green-camphor in Tamil, which can also be used to add fragrance to sweet dishes like Sweet porridge with milk known as Pãyãsam / Kheer!  That item looks like colourless pieces of flakes.  The poet says that this Moon is basically a box in which this lady keeps her cosmetic materials.  When full, it contains Rose Water, Green-camphor and 'Kasturi ManjaL'.  The smudge like thing seen on the surface of the moon is actually a piece of musk deer's excreta (let us call it M.D.E.) from its naval, which in very small quantities is wonderfully fragrant! It is either this 'Kasturi Manjal' or M.D.E. that, looks like the smudge on the face of the moon.  Moon itself is only a small emerald receptacle from which AmbãL is using up these unguents such as Rose Water, Pachchai Kalpooram, Kasturi ManjaL.  In a fortnight it is totally empty and then Brhma replenishes it during the next fortnight, till it is restored fully.  This cyclic process of usage and replenishment goes on once every alternate fortnight. 

Brhma was most concerned about seeing Parvathy and Parameswara married.  That is why, the celebration that comes immediately with their marriage is known as Brhma Utsavam.  So coming to the end of Soundarya Lahari, with AmbãL and Easwara coming together as the first act of creation/evolution, our ÃchãryãL was keen that Brhma should also be brought in, as the Special Officer on Duty for Creation!   Then Moon was also essential as the description from the very beginning had started describing AmbãL as Chandra Shekari and she is also supposed to be living in the Chandra Mandala.  Thus there was a requirement to give a whole sloka to Moon.  Then a married woman whose husband is living is known as 'Suvãsini' meaning a sweet and fragrant smelling person, who is also not a widow! So now putting all these ideas together, giving importance to the Moon, giving fortnight long continuous duty to Brhma; this sloka was made.  After all that, one can visualise how great AmbãL is if Moon is only cosmetic-box for her!
(This chapter ends here)

*ஆசார்யாள் விடும் எச்சரிக்கை*
*Warning Notice by ÃchãryãL*
(A new chapter)

ÃchãryãL is particular that people's mind should not go astray, by the description of Sringãra Rasa, more than even the concern of a Mother possibly.  It is evident that this was a major constraint in the mind of our ÃchãryãL especially about the rules, regulations and procedural Do's and Don'ts, with regard to Sri Chakra Pooja.  Though people involved in such practices are likely to be rather strict, at the main critical juncture in it, AmbãL seated in Pancha Brhma Asana is said to be enjoying with her husband and is also kindly towards us all as her children!  So instead of maintaining strict discipline in the procedures, if people start taking some liberties, then the main point is that Mantra / Yantra pooja procedures should be given the go by and one can do a very informal, saying some slokas, some Bhajans, offer some flowers and do a very simple and informal expression of Love and Regards.  But when you do not have strict discipline the effect of such efforts are also equally peripheral!

  So there are two possible errors that can take place.  One is some people taking up 'Yantra Ãrãdhanã', and failing in the required level of strictness in observation of rules.  The second possible error is to take the divine relationship between Easwara and AmbãL like what is depicted in the cinema and drama on stage or Tele-vision, thereby watering down the value systems that you went to have a bath and ended up by smearing yourself with muck!

  ÃchãryãL's concern was twofold.  He wished that serious devotees capable of applying themselves for sustained and disciplined efforts should take up the Yantra Ãrãdhanã!  But simultaneously we have to take note of the fact that adopting Yantra Ãrãdhanã was like walking on 'razor's edge' really!  So, one can easily visualize that, there are two types of errors possible.  One is for someone incapable of sustained disciplined efforts taking up Yantra Ãrãdhanã due to some fanciful idea and then suffering unpredictable negative effects personally that would also have some deleterious effect on the society!  Then there is   the likelihood of looking at the divine relationship between AmbãL and Siva in a crude and gross manner as it happens on stages such as dramas, cinemas and television serials, which as I said earlier will prove to be something like going for a ceremonial bath and ending with smearing oneself with muck!  Though in olden times of our ÃchãryãL, people must have approached these issues with greater care and caution, He must have felt it necessary and his duty to obviate the wrong approaches even in the future!

   Compared to those days of the past, systems are failing and nowadays the general attitude is one of 'Anything Goes'.  But mostly even now, those who go in for simply chanting the slokas and doing PãrãyaNam for the sake of understanding the slokas, comprehending the meaning, getting them by-heart or like children practicing for participating in competitions; are quite serious and sincere enough!  Mark the word 'mostly' when I started the above sentence, because there are also those who read these slokas without devotion, out of curiosity, for research, as studying a piece of classic literature and those who are interested mainly in finding faults with the Hindu or Indian approaches and systems!  So, it is necessary to point out that right from the time of composition of these slokas, ÃchãryãL has warned against a flippant and disrespectful approach to chanting of these slokas!

    If there was a time when people were careful not to cater to the base instincts in human beings since 'Man is also an animal only' in some ways, now-a-days there are more people who write for that purpose only and blatantly do so, justifying their actions!  If it is a sin to go astray from the morally right path; it is a greater sin to cause people to go astray from the morally rightful path tending towards injustice!  This point is not understood by many. But the poet of Soundarya Lahari, our ÃchãryãL correctly recognizing his responsibilities as the author, is talking about the correct attitude one should have while reading 'Soundarya Lahari'!  Total control of the mind and 'Indriya Nigraha' that is, 'restraining of the senses' may not be possible for many.  If we say that 100% of 'mano and Indriya Nigraha', as a precondition, there may not be one in millions!  So we should have it that those who are trying to control their minds and senses, at least during PãrãyaNam and Pooja or at least intend to exercise such self- control, should be enabled to do read, study, do PãrãyaNam and also go on to take up Sri Vidya procedures of Sri Chakra 
(Further texts of this continue tomorrow)
*Maha Periyava Thiruvadigal Charanam*

No comments:

Post a Comment