காரொளி வண்ணன்'' ( இது ஜே கே. சிவன் எழுதியதில்லை)
(இன்று நான் J K SIVAN FACEBOOK , வாட்ஸாப்ப், EMAIL , BLOG லில் எல்லாம் எழுதியதை படித்துவிட்டு என் மகன் கிருஷ்ணஸ்வாமி, ஜெர்மனியிலிருந்து எழுதி அனுப்பியது... அவனிடமிருந்து எழுத கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்கிறேன். அவன் வயது 54)
கிருஷ்ண ஜெயந்தி ..வீடே அலங்காரமாய் ஜொலித்தது.. வாசல்ல இருந்து பூஜை ரூம் வரை ..குட்டி கிருஷ்ணன் பாதம் பார்க்கவே பரவசமாய் இருந்தது..
மெதுவாக வாசல் கதவை திறந்து உள்ளே வந்த வரதராஜனை பார்த்து . ''.ஹை ..தாத்தா வந்துட்டா .தாத்தா வந்துட்டா.இன்னிக்கு கதை உண்டு'' என்று பேர பிள்ளைகள் குதித்தார்கள்..

'' டேய்..தாத்தாவை கொஞ்ச நேரம் சும்மா விடுங்கடா ..டயர்டா இருப்பார்'' என்று தாத்தாவின் பிள்ளை மணி அவர்களை விரட்டினான்., தாத்தா குறுக்கிட்டார்.
''விடுடா அதுகளை..பாவம் ஏங்கி கிடக்கு..நான் போய் குளிச்சு சுவாமிக்கு பூஜை பண்ணிட்டு வரேன்.. ப்புறமா கதை சொல்லலாம் ''
''தாத்தா ..இன்னிக்கு என்ன கதை சொல்ல போற.'' .என்று கேட்ட சின்னப் பயலை மடியில் தூக்கி வைத்து கொண்ட மணி ..

''தாத்தா என்ன சொல்வார். எப்பவும் ஏதாவது ஒரு கிருஷ்ணர் கதை தான் சொல்லுவார் , என்றான் மணி.
''இல்லடா மணி, இல்ல இல்ல ..இன்னிக்கு ஒரு கிருஷ்ண பக்தரை பத்தி சொல்ல போறேன்'', என்றார் தாத்தா.
நான் போன வாரம் சில நண்பர்களோட ஒரு டூர் போன போது நடந்த ஒரு விஷயத்தை தான் கதையா சொல்ல போறேன்'' என்கிறார் தாத்தா. ..
''ஆமாம் , நீங்க யாரோ சிவன் என்று ஒரு மாமாவோட வாளாடி ன்னு ஒரு போனதயா சொல்றேள்'' ,என்றான் மணி..
''யாரு நீங்க நங்கநல்லூர் சிவன் மாமா பாத்தியா சொல்றேள் .? ஒரு நல்ல கிருஷ்ண பக்தர் ஆச்சே அவர், நெறைய கிருஷ்ணரை பத்தி எழுதுவாரே தினமும் நாலஞ்சுக்கு குறையாம ஒவ்வொருநாளும் ஏதாவது இன்டெரெஸ்டிங்கா இருக்குமே.. ..என்று சேர்த்துக்கொண்டாள் மருமகள், மணியின் மனைவி சாரதா
''அவரே தான் ..ஆனா அவரைக் கேட்டா . நோ நோ நோ பெரிய பக்தன் எல்லாம் பெரிய வார்த்தை..நா ஒரு சாதாரண மனுஷன் அப்படிம்பார்.. என்கிறார் வரதராஜன் தாத்தா.
ஓஹோ வாளாடிக்கு அவரும் வந்து இருந்தாரா. அப்போ ரொம்ப இன்டர்ஸ்டிங் இருந்து இருக்குமே'' - இது சாரதா . ..
''ஆமாம்மா ..வாளாடி ரொம்ப அருமையான சின்ன ஊரு... அழகான கோவில் கள் ...நல்ல மனுஷா....திரும்பி வரதுக்கு மனசே இல்லடா ..அதுவும் அங்க ஒரு விஷயம் நடந்தது பாரு ..அத நினைச்சா இப்ப கூட புல்லரிக்கறது ..''என ஆரம்பித்தார் தாத்தா.
''அட..என்னப்பா இப்படி மெதுவா சொல்றேளே ..கொஞ்சம் விலாவாரியா சீக்கிரமா சொல்லுங்கோ'' - மணியும் கதை கேட்க ஆர்வம் காட்டினான்.
''எங்களை அந்த ஊர் மனுஷா, முக்கியமா தத்தாத்ரேயன் எங்கிறவர் குடும்பம் ரொம்ப நன்னா கவனிச்சுண்டா..ராத்திரி படுக்கறதுக்கு முன்பக்கத்து சின்ன ரூமை எங்களுக்கே ஒழிச்சு கொடுத்துட்டார். நாங்க , அதான் சிவன் மாமா, நான், வீட்டுக்காரர் தத்தாத்ரேயன், மூணுபேரும் ராத்திரி பூரா பேசிண்டும் பாடிண்டும் பொழுதை கழிச்சோம்..சிவன் மாமா தான் நன்னா பாடுவாரே ..அதோட ஆழ்வார் பத்தின கதை எல்லாம் சொல்லிண்டு இருந்தார்... அப்போ திடீர்னு கரண்ட் போயிடுத்து...பயங்கர மழை , இடி , காத்து ..
அப்போ மாமா..இப்படி தான் ஓரு தடவை திருக்கோவிலூர்ல இந்த மாதிரி ஒரு ராத்திரில பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் , பேயாழ்வார் எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது. ரொம்ப சின்ன திண்ணை அதுல ஒருத்தர் படுக்கலாம். மொதல்ல பேயாழ்வார் வந்து படுத்துண்ட போது திடீர்னு பூதத் தாழ்வார், வந்து இடம் இருக்கானு கேட்க ..ஆஹா தாராளமா 2 பேர் உட்காரலாமேன்னு இடம் கொடுத்தார் .. ரெண்டு பேரும் உக்காந்து பேசிண்டு இருந்த போது அந்த பக்கம் வந்த பொய்கை ஆழ்வார் ..சுவாமி ரொம்ப குளிர் அடிக்கிறது ஒண்ட இடம் கிடைக்குமான்னு கேட்டார்..உடனே ரெண்டு ஆழ்வாரும்..ஆஹா..தாராளமா 3 பேரும் நிக்கலாமேனு சொல்லி நின்னுண்டு பேசிண்டு இருந்தா ....ஒரே கும்மிருட்டு .மூஞ்சி தெரியல..ஆனா திடீர்னு ரொம்ப இறுக்கமா ஆயிடுத்து..மேலும் ஒரு ஆள் கூட நிக்கற மாதிரி FEELING .
.
பொய்கை ஆழ்வார் உடனே..
வையம் தகளியாய் ..வார் கடலே நெய்யாக ..வெய்ய கதிரோன் விளக்காக ..செய்ய சுடர் ஆழியான் அடிக்கே
சூட்டினேன் சொல் மாலை ..இடர் ஆழி நீங்குகவே என்று ....என பாடினார்
உடனே.பூதத்தாழ்வார் ..
அன்பே தகளி யாய் ஆர்வமே நெய்யாக ..இன்புறு சிந்தை இடுதிரியா ..நன்புறுகி ..ஞான சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு ..ஞான தமிழ் புரிந்த நான் ...என பாடினார்
அப்போ யாரோ..ஆஹா..னு சொல்லி கைய தட்டற மாதிரி பேயாழ்வார்க்கு கேட்டுது .
.அவருக்கு உடனே புரிஞ்சுடுத்து யாருன்னு,,,,
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் ..
செரு கிளறும் பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன் ..
என் ஆழி வண்ணன் பால் இன்று ..
என பாடியதும் மூவரும் புரிந்து கொண்டார்கள் கூட இருந்தது அந்த கிருஷ்ணன் தான் என்று.
இந்த கதையை சிவன் மாமா சொல்லும் போது ..நிஜமாவே கூட நாலாவதா அந்த கிருஷ்ண பரமாத்மாவே
பக்கத்துல இருந்தாப்ல எனக்கு தோணித்து ..
அதை மாமாட்ட சொன்ன போது ..அவர் சிரிச்சுண்டே ..எனக்கு கூட எப்பவுமே அப்படி தான் தோணும்

..எப்போலாம் எழுதறேனோ அப்போல்லாம் கூடவே அவன் இருக்குற மாதிரியே எனக்கு தோணும் . இப்படி எழுதுடா, அது இல்லடா, இப்படி சொல்லு அப்படி வேண்டாம்னு எழுத சொல்லித்தர மாதிரி இருக்கும்னு அவர் சொன்ன போது எனக்கு நெஜமாவே கண்ணுல தண்ணி வந்துடுத்து..
இருட்டுல போற அத்தனை பேருக்கும் அவன் என்னிக்குமே காரொளி வண்ணனாவே எப்பவும் கூடவே இருப்பான் ..

No comments:
Post a Comment