Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
அத்யாத்ம ராமாயணம்- ஆரண்ய காண்டம் -அத்தியாயம் 2
விராதன் சுவர்க்கம் சென்றபின் ராமன் சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் சரபங்கரின் ஆஸ்ரமத்திற்குச் சென்றான். சரபங்கர் ராமனுக்காக காத்துக் கொண்டிருந்து அவருடைய புண்யபலனை எல்லாம் ராமனுக்கு அர்ப்பணித்து விட்டு ராமனையே த்யானித்தவராக பூதவுடலை விட்டு பிரம்ம லோகம் அடைந்தார்.
பிறகு தண்டகாரண்யத்தில் உள்ள ரிஷிகள் அங்கு வந்து ராக்ஷசர்கள் முனிவர்களைக் கொன்று வருவதாகக் கூறி அவர்களின் எலும்புக்கூடுகளைக் காண்பித்தனர்.அதைக்கண்டு வருந்திய ராமன் அவர்களுக்கு அபயம் அளித்தார். அவர்களுக்குப் பாதுகாப்பாக அங்கு சில வருடங்கள் வசித்தார்.
இப்படி இருக்கையில் ஒருநாள் சுதீக்ஷ்ணருடைய ஆஸ்ரமத்திற்குச் சென்றார். அகஸ்திய முனிவரின் சீடராகிய சுதீக்ஷ்ணர் சதா ராமநாமத்தையே ஜபித்துக் கொண்டு அவரையே ஆராதித்து வந்தவர்.அவர் ராமன் வருவதைக் கண்டு வேகமாக எதிர்கொண்டழைத்து பக்தியுடன் பூஜித்தார். பிறகு மனம் உருகி துதித்த அவரிடம் ராமன் வேறு சாதனைகள் இன்றி பரிசுத்த உள்ளத்துடன் தன்னையே ஆராதித்து வந்த அவரைக் காணும் பொருட்டே அங்கு வந்ததாகக் கூறி அவருடைய குருவான அகஸ்தியரிடம் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
பிறகு அவருடன் ராமன் சீதை லக்ஷ்மணன் மூவரும் அகஸ்தியர் ஆஸ்ரமம் நோக்கிப் புறப்பட்டனர்.
No comments:
Post a Comment