Tuesday, June 15, 2021

How to do Dharma pracharam?

    2
                                                                       ஸ்ரீ ராம ஜயம் 

                                                         குரு பக்தியும் குரு சேவையும்-2
எந்த ஒரு குருவும் எந்த நிலையிலும் யாரிடமிருந்தும், எந்த விதமான சேவையையும் எக்காலத்திலும் எதிர்பார்த்ததே இல்லை. குரு சந்நியாசியாக இருப்பதால்,பூஜை நேரம் தவிர எப்பொழுதும், பிரும்மத்திலேயே சஞ்சரித்துக்கொண்டிருப்பார். வரும் சேவார்த்திகளுக்கும்,அதே சமயம் அனுகிரஹித்துக்கொண்டும் இருப்பார். எல்லாசமயங்களிலும் தர்மத்தை எப்படி விருத்தி பண்ணுவது என்ற சிந்தனையிலேயே ஈடுபட்டிருப்பார். இந்தநிலையில் எந்த ஓரு சிஷ்யனும் செய்ய வேண்டியது தன்னுடைய குருவின் சிந்தனைக்கு ஏறாற்போல்,தர்மத்தை பிரசாரம் செய்யவேண்டும். எப்படி?
1. இரண்டு,இரண்டு பேராக ஒவ்வொரு கிருஹஸ்தனையும் அணுகி,அவருடைய வீட்டில் மத்தியான்னம் 3 மணி முதல் தேவையான நேரம் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணமோ அல்லது மூல வாலமீகி ராமாயணமோ பாராயணம் செய்து வரலாம் ,(பிரதி வாரம் மூன்று அல்லது நான்கு நாட்கள்.-இலவசமாக. இந்தமாதிரியான தர்மப்பிரசாரத்திற்கு தோதானவர்கள்--ரிட்டையரான (சுமார் 60-75 வயதுக்கு உள்ளானவர்கள்தாம். அவர்கள் சுய கவுரவம் பாராது இந்த தர்மத்தை செய்ய முன் வரவேண்டும்.
2. இரண்டாவது வகை: ஸ்ரீ பெரியவர்களுடைய முன் அனுமதி பெற்று, சுமார் 10 பேர்கள் (ஹோமம் செய்ய 6 பேர்கள், மூல ராமாயணமோ அல்லது மூல ஸ்ரீமத் பாகவாதமோ இருவர், சமையல் செய்ய இருவர் --அவர்கள் சதி பதிகளாக இருக்கும் பக்ஷத்தில் நலமெ ,இந்த குரூப்பின்பிரயாணத்தையும்,, அவர்களுக்கான எல்லா அடிப்படை வசதிகளையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்யவும் ஒருவர் --இவ்வாறாக 10/11 பேர்கள்) இந்தகுரூப் கள் சுமார் ஐந்து அல்லது தேவைப்படும்.(தென்னாட்டிற்கு, வட நாட்டிற்குமாக )
இந்த குரூப்புகள் எல்லாம் ஸ்ரீ பெரியவர்களின் அருளாணைப்படி தத்தம் சொந்த செலவில்,செயல் படும். (இதில் நமது தர்மத்தைப்பற்றியும், என் ஐந்து வருடங்களின் அனுபவத்தை கீழே கூறுகிறேன். நாங்கள் போகும் இடங்களிலெல்லாம் எங்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பான மரியாதை கிடைத்தது.. அதற்கும் மேலாக பணமும் நிறையக்கிடைத்தது..) ஹோமத்தின் இடையில் விராம காலத்தில் நம் தர்மத்தைப்பற்றியும், நமது ஸ்ரீ மடத்தைப்பற்றியும், சுருக்கமான முறையில் கூறுவதால், அங்கு கூடியிருக்கும் மக்களுக்கு நம் தர்மத்தைப்பற்றியும் ,ஸ்ரீ மடத்தைப்பற்றியும், சரியான தகவல் கிடைக்கிறது.
அதற்குத்தோதாக, நமது தர்மத்தைப்பற்யம், அன்று அங்கு நடக்கவிருக்கும் ஹோமத்தைப்பற்றிய விளக்க யடங்கிய, சிறிய கையேடு களை அவர்கட்கு விநியோகிப்பதால், அப்பொழுது அங்கு செய்யபடும் ஹோமத்தினால் என்னவிதமான நன்மைகள் அவர்களுக்கு ஏற்படவுள்ளன என்பதை அவர்கள் அறிய முடியும். நம்முடைய தர்மங்கள் எல்லாம் நமது மேன்மைக்கே என்பதையும் அவர்கள் எல்லாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
(உதாஹரணமாக, 
மஹாபாரதத்தில் வரும் ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம். ( மஹாபாரதத்தில் கூறப்படாத நீதியில்லை. பாரதப்போரில்செய்யப்படாத அநீதியில்லை. அவ்வாறான அநீதிகளுக்குக்காரணம் வேறு. அது நம்முடைய இந்தக்கட்டுரை சம்பந்தப்படாதது. ஆதலால் அதை இங்கு விட்டுவிடுவோம்.) குருக்ஷேத்ரப்போர் முடிந்த பிறகு, யுத்த பூமியிலேயெ பாண்டவர் கூடாரத்தில் ஒரு இரவு ,பஞ்ச பாண்டவர்களின் புத்திரர்களான ஐந்து 'உப பாண்டவர்களை' ,துரோணரின் புத்திரனான அஸ்வத்தாமா, வெட்டிக்கொன்றான். அதற்கு அவன் சொல்லிய காரணம் : " என்பிதாவான துரோணர் வஞ்சகமாக யுத்த பூமியில் பாண்டவர்களால் கொல்லப்பட்டார்..அதற்கு பதிலாகவே நான் இவர்களை க்கொன்றேன்.", என்றான். அதுகேட்டு பாண்டவர்கள் அவனையுடனேயே கொல்ல முயன்றனர். கண்ணன் அவ்ர்களைத்தடுத்து அர்ஜுனனின் தேர் தட்டில், அவனைக்கட்டி தர்மபுத்திரரும் ,திரௌபதியும் இருக்கும் இடத்துக்குக்கொண்டு சென்றனர்..பாண்டவர்களில் நால்வரும் அஸ்வத்தாமாவை உடஹெயே கொன்றாகவேண்டும் என்று ஒரே பிடிவாதமாகவே இருந்தனர். ஆனால் திரௌபதி மட்டும் மாறாக ச்சொன்னாள் ," நான் இப்பொழுது என்னுடைய ஐந்து குழந்தைகளை இழந்து தவிப்பது போதும். என்னுடைய சகோதரியாகிய க்ருபி க்கு எந்த துக்கமும் வர வேண்டாம் .அவள் ஏற்கனவே தன்னுடைய பதியான துரோணரை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு எந்த விதமான புத்திர சோகமும் ஏற்பட நாம் காரணமாகஇருக்கக்கூடாது..மேலும் அஸ்வத்தாமா நம்முடைய குருவான துரோணரின் புத்திரர். குருவின் புத்திரர் குருவாக மதிக்கப்பட வேண்டியவர்.குருவின் புத்திரரான அவர் குருவாக மதிக்கப்பட்டு, நம்முடைய நமஸ்காரத்திற்கு உரியவர். தண்டனைக்கு உரியவர் அல்லர் . .அவரைநாமெல்லோரும் நமஸ்கரிக்க வேண்டும். என்று சொல்லி அஸ்வத்தாவை நமஸ்கரித்தாள் .ஆனாலும் அவர் செய்தது பஞ்ச மஹா பாபங்களில் சேரும். ஆகையால் அவருக்கு தக்க தண்டனை கொடுக்கப்பட வேண்டுமே என்று அங்கிருந்தவர் எல்லோரும் திகைத்து நிற்க ,அப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லலுற்றார். அவனுக்கு உரிய தண்டனை கொடுப்பது ஞாயமே ,அனால் திரௌபதி சொன்ன தர்மத்தால் அவனுடைய உயி ர் போக க்கூடாது .ஆதலால் அவனுடைய சிகையை எடுத்து விட்டால், அவனுக்கும் உயிர் போகாது, அவனுக்குரிய தண்டனையும் கொடுத்ததாகவும் ஆகும். ஆதலால் அவனுடைய சிகையை நீக்கி அவனுடன் கூடப்பிறந்த அவனுடைய சிகாமணியை எடுத்து விடுங்கள்.என்கிறார். அவ்வாறே அவனுடைய சிகை எடுக்கப்பட்டு,அவன் எல்லோர் மத்தியிலும் அவமானப்பட்டு நின்றான்.)
இந்த சம்பவத்தில் பல தர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன. 1.குரு தக்கவாறு மதிக்கப்பட்டு துதிக்கப்படவேண்டியவர். 2.குருவின் புத்திரன் குருவேயாதலால் அவனும் குரூ போன்றே சகல மதிப்புக்கும் உரியவனாதலால் தண்டனை என்ற பெயரில் அவனுக்கு ஒருபோதும் மரணம் தண்டனையாகக்கொடுக்கக்கூடாது. இந்த இரு தர்மங்களை நமக்கு திரௌபதி வாயிலாக மஹா பாரதம் கொடுக்கிறது.
இம்மாதிரியான துரூஹமான (ஊகிப்பதற்கு கஷ்டமான ) பல தர்மங்களை ஸ்ரீ மகாபாரதத்திலும் ,பலபுராணங்களிலும், ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் நாம் காணலாம். இதிகாசம் என்பதின் அர்த்தம் --இதி -ஹ -ஆஸ --இவ்வாறுதான் இருந்தது, நடந்தது என்பதே . ஆக இதிகாசம் என்பது சரித்திரமாக நடந்தது என்று ஊஹிக்கப்படுகிறது. மாறாக புராணம் என்பது வேத பாகத்தை உள்ளவாறு கதை மூலம் அறிந்து கொள்ள எழுதப்பட்ட வேத பாகம் .)
இவ்வாறு ஹோமங்களை செய்வதன் மூலம் நாம் நம்முடைய தர்மப்பிரசாரங்கலாய் நன்றாகவே செய்ய முடியும்.
3. மூன்றாவது வகை 
விவாஹம் நடக்க ஏற்பாடு செய்திருக்கும் (முடிந்தவரை)வீடுகளுக்கு முகூர்த்தத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாகச்சென்று , அங்குள்ளவர்களில் வரன், வது மற்றும் அவர்களதுபெற்றோர்கள் அவர்களை நேரில் சந்தித்து விவாஹத்தின் நோக்கங்கள், விவாஹம் சம்பந்தமாக செய்யப்படும் காரியங்கள் அவற்றின் நோக்கங்கள் என்பதையும் அவைகளின் அர்த்தங்களையும் அவர்கட்கு புரியம் வகையில் எடுத்துச்சொல்ல ஏற்பாடு செய்தல், இந்தவகைக்கு இரண்டு அல்லது நான்கு வேதார்த்தமும் விவாஹ முறையும் நன்கு தெரிந்த பண்டிதர்கலாய் ஏற்பாடு செய்தல் ,இவற்றை கவனிக்க வேண்டும். இதுவும் தர்ம சேவைதான்.   
5.ஐந்தாவது வகை :
அபரகார்யங்களுக்கும் இம்மாதிரி உதவுதல் .
6. ஆறாவது வகை :
ஸ்ராத்தத்திற்கு ,வாத்தியாயரும் இரண்டு பிராமணர்களும் (விச்வே தேவர்கள் பிரதிநிதியாக ஒருவர் , மற்றவர் பித்ருக்களின் பிரதிநிதியாக ) இம்மூவரும் சிகை பஞ்சகச்சத்துடன் இருப்பது மிக அவசியம் . சிராத்த கர்த்தா சிராத்த திதிக்கு முன்னால் ஒரு பக்ஷம் (15 நாட்கள் ) க்ஷவரம் செய்து கொள்ள வேண்டாம். பித்ரு பிரதிநிதியாகிய பிராமணர் ஒரு வீட்டில் ஸ்ராத்த போஜனம் செய்த பிறகு , குறைந்த பக்ஷம் ஆறு மாதத்திற்கானும் வேறொரு வீட்டில், ஸ்ராத்த போஜனம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஸ்ராத்த கர்த்தா ஸ்ராத்த தினத்தன்று கூடியமட்டும் மௌனம் காத்தல் நலம். சிராத்தம் நடக்கும் பொழுதும், ( அதாவது அன்றைய ' குதப ' காலை 11 1/2 முதல் மத்தியானம் 1 1/2 மணி வரை,) மௌனம் காக்கவேண்டும். ஸ்ராத்தவிஷயங்களைத்தவிர வேறு விஷயம் எதையும் நேரிலோ அல்லது போன் மூலமோ, பேச வேண்டாம். ஸ்ராத்த காலத்தில் பிராமணர்கள் போஜனம் செய்கையில், ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்ட ' கஜேந்திர மோக்ஷம் பகுதியில் வரும் ,கஜேந்திர ஸ்துதியை படிப்பது பித்ருக்களுக்கு ப்ரீதி தரும் விஷயம். அதே மாதிரி ராமாயணத்தில் வரும், 'கங்காவதரணம்' பகுதியும் பித்ருக்களுக்கு பிடிக்கும் .இவைகளை பித்ருக்கள் போஜனம்செய்கையில் பாராயணம் செய்ய நலம் பெருகும்.
இவைகளையெல்லாம் நமது தர்மப்பிரசாரகர்கள் கருத்தில் கொண்டு கிருஹஸ்தர்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களுக்கு நலம் சேர்க்க வேண்டும்.
 7. ஏழாவது வகை:
இந்த வகையில் தர்மம் பிரசாரம் செய்ய சுமார் 10 பேர்கள் அடங்கிய ஒரு ஒரு குரூப் தேவைப்படும்.மேற்படி குரூப் இரண்டு,இரண்டு பேர்கள் அடங்கிய ஐந்து பிரிவுகளாக செயல் படவேண்டியிருக்கும் .ஒவ்வொரு பிரிவும் ஒரு யாத்திரை ஸ்தலத்துக்குச்சென்று ,அங்குள்ள தனிகர்களை நேரில் சந்தித்து, அவர்கள் மூலம் ,ஒருயாத்திரை ஸ்தலத்துக்கு ஒரு அன்னதான சத்திரம் கட்டி அவற்றை சரிவரப்பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். .
8.எட்டாவது வகை 
ஒரு ஊருக்கு இரண்டு பேர்கள் வீதம் பத்து ஊர்களில் 'ஸ்மசான பராமரிப்பு ' செய்ய ஆவன செய்ய வேண்டும் . அதே மாதிரி 'அபர க்ரியா ' மண்டபங்களைக்கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.
9. ஒன்பதாவது வகை 
பஜனை மடங்கள் கட்டி அங்கு பிரதி சனிக்கிழமை,ஏகாதசி தோறும் பஜனையும், 'அச்சித்ர அஸ்வமேத பிரகரண' பாராயணமும் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் .
10.பத்தாவது வகை 
மேலே சொல்லப்பட்ட ஒன்பது வகை தர்மங்களையும் ,நிரந்தரமாகச்செயல் பட ஆவன   
செய்ய வேண்டும்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தர்ம பிரசாரமோ அல்லது தர்மம் ஸ்தாபனமோ ஒருவர் செய்யக்கூடியதல்ல. எளிதும் அல்ல .ஒரு குருவின் அருளால்தான் இது நட வாய்ப்புண்டு .ஆனால் அது குரு மனது வைத்தால் நிச்சயமாக முடியும் .
சிஷ்யர்களும் ஆஸ்திகர்களுமாகிய நாமெல்லோரும் தர்மப்பிரசாரத்தை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டு தர்மோத்தரணத்துக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டால் தான் இந்த பாவன காரியத்தை சரியாக நிறைவேற்ற முடியும். வயதான வேலையில்லா மனிதனாக வாழ்வதை விட ,இதுவே நாமெல்லருக்கும் உகந்தது, நமக்கு சிறப்பும் மன அமைதியையும் ஒரு சேரத் தருவதுமாகும். இதில் நமக்குப்பட்டவை இரண்டே தான். அவை தன்னலமற்ற தியாக மனம் மற்றும் ,பணிவு இவையே குரு பக்தி மூலம் கிடைக்கும் குருசேவையில் தன்னை தானாகவே முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளுதல்.ஆகியவையும் இதில் சேரும்.
ச.சிதம்பரேச ஐயர் 
5 .மார்ச் 2021m




--
S.Chidambaresa Iyer
Nagalakshmi- Sri Kamakoti,
R-Block , No35/12, 16th street.
Annanagar
Chennai-40
044- 26214105


No comments:

Post a Comment