Friday, May 7, 2021

When to change janya ( poonool)?

பூணூலை எப்பொழுதெல்லாம் மாற்ற வேண்டும் ? 

1. மாதம் ஒரு முறையாவது மாற்றிக்கொள்ள வேண்டும் . அமாவாசை தர்ப்பணத்தின் போது பூணூல் மாற்றிக்கொண்டு தர்ப்பணம் பண்ணலாம் . நாம் சொன்னால் வாத்தியார் மாற்றி விடுவார் .                           

2. தீட்டு உள்ள இடங்களுக்குச் சென்று வந்தால் பூணூல் மாற்ற வேண்டும் .10 நாட்களுக்குள் துக்கம் விசாரிக்க ச் சென்று வந்தால் பூணூல் மாற்ற வேண்டியது அவசியம் . மயானத்திற்கு சென்று வந்தால் கண்டிப்பாக பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டும் .    
                        
3. பிரசவம் ஆன வீடுகளுக்கு , புண்யாகவசனத்திற்கு முன் போய் வந்தால் மாற்றிக்கொள்ள வேண்டும் . பொதுவாக 10 நாட்கள் வரை பிரசவத்தீட்டு . இது அவரவர்கள் வீடுகளிலும் உண்டு . 11 வது நாள் புண்யாகவசனம் ஆனால்தான் தீட்டு போகும் . அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறக்கும் சில வீடுகளில் , தாயின் உடல் நலம் கருதி 21 ம் நாள் புண்யாகவசனம் செய்வதும் உண்டு . அது வரை தீட்டுத்தான் . புண்யாகவசனம் என்று நடக்கிறதோ அன்றைக்குத்தான் தீட்டுப் போகும் . அன்றைய தினம் பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டும் .   
                                   
4. இது தவிர , உறவினர்கள் இறந்தால் , பங்காளிகளுக்கு 10 நாள் தீட்டு . அதற்கு மறு நாள் பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டும் . இந்த தீட்டுக்கள் விஷயத்தில் பலருக்கு அடிக்கடி சந்தேகம் வரும் . யார் இறந்தால் யாருக்கு.. எத்தனை நாட்கள் தீட்டு .. ? தீட்டு என்றால் என்ன .. ? யார் யார் தீட்டு அனுசரிக்க வேண்டும்.. ? தீட்டு என்பது பேய் பிசாசு என்பது போல ஒன்றா .. ? தீட்டு என்று சொன்னால் பலர் பயப்படுவதற்கு என்ன காரணம் .. ? இவைகளை தனியாக பார்க்கலாம்    
                         
 5. Hospitals போய் விட்டு வந்தால் பூணூல் மாற்ற வேண்டும் .           
                              
6. அந்தக்காலத்தில் பஸ் , ரயிலில் பயணம் செய்து விட்டு வந்தாலே பூணூல் மாற்றி கொள்வர் .    
                                                 
 7. ஸ்ராத்த தினத்தன்று வேறு பூணூல் மாற்றிக்கொண்டுதான் ஸ்ராத்தம் ஆரம்பிக்க வேண்டும் . இன்று பொது இடங்களில் , மடங்களில் ஸ்ராத்தம் பண்ணினால் பல வாத்தியார்கள் கண்டு கொள்ளாமல் ஸ்ராத்தம் பண்ணி வைத்து விட்டுப் போய் விடுகிறார்கள் . பூணூல் மாற்றி விடுங்கள் என்று சொல்ல வேண்டும் . முதல் நாள் ஆவணி அவிட்டம் என்றாலும் , அடுத்த நாள் ஸ்ராத்தம் வந்தால் , அன்றைக்கு ப் புதிய பூணூல் போட்டுக்கொண்டுதான் ஸ்ராத்தம் பண்ண வேண்டும் .    
                                               
8. இது தவிர , வீட்டில் நடக்கும் எந்தவொரு வைதீக காரியம் என்றாலும் புதிய பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் .    
                                   
9. சட்டை , பனியன் கழட்டும் பொழுது சில சமயங்களில் பனியனுடன் பூணூலும் சேர்ந்து கழண்டு விடும் . அப்பொழுது அதை உடனடியாக மாட்டிக்கொண்டு , மீண்டும் முறைப்படி மந்திரம் சொல்லி வேறு பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டும் .     
                                                                 
10. பூணூல் என்பது கர்ணனின் கவச குண்டலங்கள் போன்றது . அதை அணிந்திருப்பவனை தீய சக்திகள் மற்றும் பேராபத்துக்களிலிருந்து காக்கும் சக்தி வாய்ந்தது . அதில் உள்ள முடிச்சுக்கு பிரம்ம முடிச்சு என்று பெயர் . 

11.பூணூலில் காயத்ரி மந்திரத்தை ச்சொல்லி சக்தி ஏற்றி வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் . அப்படி வைத்திருந்தால் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றும் . எனவே அதற்கு உரிய மரியாதை கொடுத்து பராமரிக்க வேண்டும் . 

சாதாரண நூல்தானே என்று அலட்சியமாக , அதை முதுகு அரிப்பை அகற்ற உபயோகிக்கக் கூடாது .

No comments:

Post a Comment