Sri Chandrasekaramrutham:
* நாம் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது எறும்பு மேலே ஊர்ந்தால், அதை அப்படியே தேய்த்து விடுகிறோம்; கொஞ்சம் குளிர்காற்று வீசினால் நாமாகவே போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறோம்; தூக்கம் நன்றாக வரப் பக்கம் மாறிப் படுக்கிறோம். இந்த விஷயங்கள் பூர்ணமாக நம் பிரக்ஞைக்கு எட்டாமலே இப்படி பண்ணியிருப்போம். ஆனாலும், அந்த தூக்க நிலையிலும் கூட நம் சரீரத்தின் மீது உள்ள அபிமானம் போகாததால் தான் இப்படிப் பண்ணியிருப்போம்.
* எந்த காரியமானாலும் அதை மூளையின் டைரக்ஷனின் கீழே நரம்பு மண்டலம் தான் பண்ணுகிறது. அது உள்ளே இத்தனை சரீர அபிமானம் ஊறியதாய் உள்ளது. நம் இச்சையின் பேரில் "வாலண்டரி"யாக இல்லாமல், தன்பாட்டுக்கு நரம்புகள் பல காரியங்களைப் பண்ணுகின்றன. கழுத்து, இடுப்பு பக்கங்களில் எதாவது நிமின்டுகிற மாதிரி பட்டால், "குறுகுறு" என்று உணர்வு ஏற்பட்டு சிரிப்பு வருகிறது; பயம் வந்தால் உடல் வியர்க்கிறது; பெரிய கஷ்டம் வந்தால் வயிற்றைக் கலக்குகிறது; ஒருத்தன் கொட்டாவி விட்டால், மற்றவரும் கொட்டாவி விடுகிறோம். இவை அனைத்தும் நரம்புகளின் "இன்வாலண்டரி" காரியங்கள்.
* ஆனால், "நிஜ மௌனத்தில்" எப்படி இருக்கும் தெரியுமா? உடம்பின் மேல் மலைப்பாம்பு ஊர்ந்தாலும் தெரியாது. ஒரு விதமான reflexம் இருக்காது. குளிரோ, வெயிலோ எதுவானாலும் தெரியாமல், அடித்த சிலையாக நிஷ்டையில் இருப்பான்; "தேஹாத்ம புத்தி" அடியோடு போய்விடும். அதனால் தேகத்தைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற அபிமானமும் போய்விடும். அது "இன்வாலன்டரி"யாகக் கூட இல்லாமல் போய், அவனுடைய நரம்பு சலிக்கவே சலிக்காது.
* உணர்ச்சிகளை ஜெயிக்கும் இந்த நிலை ரொம்ப உன்னதமானது. இப்படி எல்லாப் புலன்களையும் அடக்கி வெற்றி கொண்டவன் தான் "ஜிதேந்திரியன்".

No comments:
Post a Comment