**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
*தஸாவதாரம்*
*ஸ்ரீநரசிம்மாவதாரம்*
*பகுதி 07*
*மேல்கோட்டை திருநாரயணபுரம்*
புராணங்களில் மேல் கோட்டையை பத்ம கூடா, புஷ்கரா, புத்ம சேகரா, அனந்த மாயா, யாதவ கிரி, நாராயணாத்ரி, வேதாத்ரி, வித்யா (ஞான) மண்டல், தட்சிண பத்ரி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. யதுகிரி பர்வதத்தில் அமைந்துள்ள இத்தலம் ஒரு மலை வாசஸ்தலம். இத்தலத்தில் இரண்டு முக்கிய கோயில்கள். பல மடங்கள், புனித தீர்த்தங்கள், மற்றும் பல தர்ம சாலைகளும் உள்ளன பெருமாள் தம் கருணையினால் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருட் பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன அவையாவன.
தெற்கு திசை ஸ்ரீரங்கம் - (தமிழ்நாடு) ஸ்ரீ ரங்கநாதன்.
கிழக்கு திசை - காஞ்சீபுரம், ஸ்ரீ வரதராஜன்.
வட திசை - திருப்பதி (ஆந்திரா) திருவேங்கடவவன்.
மேற்கு திசை - மேல் கோட்டை- திருநாராயணபுரம்.
இவ்வளவு சிறப்புப் பெற்ற இந்த திவ்யஸ்தலம் திருநாராயணபுரம் நான்கு யுகங்களிலும் ப்ரஸித்தி பெற்றது. க்ருத யுகத்தில் ஸநத்குமாரரால் நாராயணாத்ரி என்றும், த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும் த்வாபர யுகத்தில் ஸ்ரீபலராமன் கிருஷ்ணரால் யாதவாத்ரி என்றும் வழங்கப்பட்டது. இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும் வழங்கப்படுகிறது. மேலும், ஸ்ரீரங்கத்தை - போக மண்டபமென்றும், திருமலையை புஷ்ப மண்டபமென்றும் பெருமாள் கோயிலை - தியாக மண்டபமென்றும் திருநாராயணபுரத்தை - ஞான மண்டபமென்றும் பெரியோர்கள் கூறுவர். இந்த ராமாநுஜரின் அபிமான ஸ்தலத்தில் இரண்டு திருக்கோயில்கள் மலை மேல், கோட்டையில் அமைந்துள்ளன அவை நரசிம்மர் ஆலயம், இங்குள்ள கல்யாணி தீர்த்தத்திலிருந்து 400 படிகள் ஏறினால் மலைக்கோட்டை யோகநரசிம்மரைத் தரிசிக்கலாம். இவரது சன்னதிக்குச் செல்ல ஒன்பது படிக்கட்டுகள் உள்ளன. யோகநரசிம்மரின் கட்டளைப்படி நவக்கிரகங்கள் இங்குப் படிகளாக இருப்பதாக ஐதீகம். நரசிம்மரைத் தரிசித்தவர்க்கு கிரகதோஷம் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். மலையில் இராமானுசரின் பாதம் உள்ளது. இங்குள்ள கல்யாணி தீர்த்தம், வராக அவதாரத்தின் போது உருவானது. மாசிமாதத்தில் கங்கை இந்தத் தீர்த்தத்துக்கு வருவதாக ஐதீகம். தீர்த்தக்கரையில் பிந்துமாதவன், நாராயணன், இலட்சுமிநரசிம்மர், மாருதி சன்னதிகள் உள்ளன.
*பிரஹலாதர் குகை*
இங்குள்ள நரசிம்மரின் விக்ரஹம் மாமன்னர் பிரஹலாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதை நாரதீய புராணத்தின்படி அர்ச்சகர் ஒருவர் எங்களுக்கு விளக்கினார். இவ்விடத்தில் தவம் புரிந்து வந்த விஷ்ணு சித்தன் என்ற துறவியைக் காணவந்த பிரஹலாதர் நரசிம்மரை இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார். பிரஹலாதர் தியானம் செய்த குகை நுழைவாயில் குறுகலான படிகளைக் கொண்டது பிரஹலாதர் தியானம் செய்த இடம் மூலவர் அமைந்துள்ள இடத்திற்கு நேராக அடியில் அமைந்துள்ளது.
இரண்டாவது நாராயணர் ஆலயம். நாராயணர் ஆலயத்தில் *மூலவர் :-* திருநாராயணன், சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம், சரணங்களில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்) சரணங்களில் வணங்கிய முடி. *உத்ஸவர் :* சம்பத் குமாரர், இதர பெயர்கள் - ராமப் பிரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன்.தாயார் - யதுகிரி நாச்சியார், மேலும் பூமி தேவி, வரநந்தினி நாச்சியார்.
*தீர்த்தம்* - கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரணி, தனுஷ் கோடி தீர்த்தம் முதலிய 8 தீர்த்தங்கள்.
*விமானம்* - ஆனந்தமய விமானம்
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இதர மூர்த்திகள்: வண்புகழ் நாரணன் :- ஸ்நபனபேரர், (நாராயண பகவான் பக்கத்தில்) நித்ய திருமஞ்சனம் கண்டருளுகிறார். வாழ் புகழ் நாரணன், பலி செல்வர், செல்வப் பிள்ளை சந்நதியில் சேவை சாதிக்கிறார். நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் செல்வ நாரணன், திருநாரணன். வண்புகழ் நாரணன், வாழ்புகழ் நாரணன் என்று நான்கு திருநாமங்களையும் அனுபவிக்கலாம். வைரமுடி சேவை நாளில் கருடன் கொணர்ந்த வைரத்தாலான கிரீடம் செல்லப் பிள்ளைக்கு சாற்றப்பட்டு, தங்கத்தாலான கருடன் மீது மாட வீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளச் செய்யப்படுகிறது. வைரமுடியை பகலில் காண இயலாது என்ற நம்பிக்கையின் கண் இந்த வைரமுடி சேவை இப்போதும் இரவுப் பொழுதிலே தொடங்கி விடியும் முன் முடிக்கப்பட்டு விடுகின்றது. மேலும், வைர முடி சாற்றும் போதும் பிரதான அர்ச்சகர் தன் கண்களை மெல்லிய துணியால் கட்டிய பின்னரே வைர முடியை அதற்குண்டான பெட்டியிலிருந்து வெளியில் எடுக்கிறார். கருடனுக்கு வைநதேயன் என்ற பெயரும் உண்டு. எனவே கருடனால் கொணரப்பட்டது "வைநதேய முடி" என்றழைக்கப்பட்டு, "வைநமுடி" என சுருங்கி பின்னர் "வைரமுடி" என மருவியுள்ளது.இந்த புஷ்கரணி சகல பாபங்களையும் நீக்க வலிமையுள்ளது. அதனால் அதன் நீரை தலையில் சிறிது தெளித்துக்கொண்டு அதை சுற்றியுள்ள மணடபங்களையும் அதில் காணப்படும் சிற்பங்களையும் பார்த்து ரசித்துவிட்டு அங்கு அந்த குன்றின் மேல் உள்ள யோக நரசிம்மர் கோயிலுக்கு செல்லலாம்..
கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான். இதனால் கூரத்தாழ்வாரின் ஆலோசனைப்படி ராமானுஜர் வெள்ளை சாத்தி, தமிழ்நாட்டைவிட்டு கர்நாடக தேசத்துக்கு வந்தார்.
அப்போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் இந்த இடத்தை ஆண்டு வந்தான். அவனது மகளுக்கு சித்தபிரமை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, ராமானுஜர் உதவியால் அது நீங்கியது. இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, ஸ்ரீவைஷ்ணவன் ஆனான். ராமானுஜர் அவனுக்கு விஷ்ணுவர்தனன் என்ற பெயரைச் சூட்டினார். இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்துள்ளான். உதயகிரி மலையில் திருக்கோயிலைக் கட்டியவன் இவனே.மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் ஏரி ராமானுஜர் ஏற்படுத்தியது. அவர் தொண்டனூரில் வசித்து வந்த போது அவரது நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட, அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு செல்லும் வழியைச் சொல்லி அங்கு ஒரு புற்றில் இருக்கிறேன் என்றும் தன்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.
ராமானுஜர் திருநாராயணபுரத்துக்கு அங்கு வேதபுஷ்கரணியில் குளித்துவிட்டு திருமண் அணிந்துக்கொண்டு, கல்யாணி குளத்துக்கு பக்கத்தில் இருந்த எறும்புப் புற்றை, ஊர் மக்கள் உதவியுடன் பால், மற்றும் தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார். திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார். ராமானுஜருக்கு இங்கே திருமண் கிடைத்தால் இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது. ஒருமுறை உற்சவ மூர்த்தியான செல்லப்பிள்ளையை தில்லி முகலாய மன்னனிடமிருந்து ஸ்ரீ இராமானுஜர் மீட்டுக் கொண்டுவரும் வழியில் எதிர்ப்பட்ட கள்ளர் கூட்டத்திடமிருந்து இப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி உற்சவ மூர்த்தியையும் ஸ்ரீராமானுஜரையும் காத்தனர். இதற்கு நன்றி நவிலும் வண்ணம் ராமானுஜரின் ஆணைக்கு இணங்க, இன்றும் தேர்த் திருவிழாவின் அடுத்த நாளிலிருந்து மூன்று நாட்கள் "திருக்குலத்தார் உற்சவம்" மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இங்கிருக்கும் கல்யாணி தீர்த்தம் எனும் அழகிய குளம் பழமையான மண்டபங்கள் சூழ அழகுடன் காட்சித் தருகிறது. திருத்தொண்டனூர், ஸ்ரீரங்கப்பட்டினம் போன்றவை அருகிலிருக்கும் வைணவத் தலங்களாகும். பெருமாள் கோயிலில் பேரருளாளனுக்கு சமர்ப்பிக்கப்படும் ''குடை" மிகப் பெரியது. திருநாராயணனுக்கே "முடி" (கிரீடம்) உரிய அழகுப் பொருத்தமாக விளங்குகிறது. இத்தல புளியோதரை பிரசாதம் புகழ் பெற்றது.
கர்நாடக மாநிலம் மாண்டியா அல்லது பாண்டவபுராவிலிருந்து பஸ்வசதி உள்ளது.
*ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
*வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீநரசிம்மாவதாரம் தொடரும் ....
🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
**ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ...* 🙏🙏🙏
*தஸாவதாரம்*
*ஸ்ரீநரசிம்மாவதாரம்*
*பகுதி 08*
*கதிரி ஸ்ரீலட்சுமி நரசிம்மஸ்வாமி, கதிரி ஆந்திரா:*
கதிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் இந்தியாவின் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
கதிரியில் உள்ள நரசிம்ம பகவான் காத்ரி மரத்தின் வேர்களில் இருந்து வெளிவரும் சுயம்பு. ஹிரண்யகசிபுவைக் கிழித்து அஷ்ட பஹு நரசிம்மராக (எட்டு கைகளைக் கொண்டவர்) அவர் இங்கே தோன்றுகிறார். மடிந்த கைகளால் பிரஹ்லதா அவருடன் நிற்பதை நாம் காணலாம். ஆச்சரியப்படும் விதமாக, தினசரி அபிஷேகம் செய்யப்பட்டபின், இறைவனின் மூர்த்தி இங்குள்ள அர்ச்சகர்களால் மீண்டும் மீண்டும் துடைக்கப்பட்ட பின்னரும் வியர்வையைத் துடைக்கிறார்.
கதிரியில் உள்ள நரசிம்ம பகவான் "கத்ரி" மரத்தின் வேர்களில் இருந்து சுயமாக வெளிப்படுவதாக (ஸ்வயம்பு) நம்பப்படுகிறார். மூலவர் (மூலவிரத்) அஷ்டபாஹு ஸ்ரீ நரசிம்ஹா (எட்டு கைகளைக் கொண்டவர்) ஹிரண்யகசிபுவைத் துடைத்து, பக்த பிரஹ்லதா அவருக்கு அருகில் நின்று, மடிந்த கைகளால், வணக்கங்களை செலுத்தி, மேலும் பாதுகாக்கும் நபராக மாறுகிறார். தினசரி அபிஷேகம் நிகழ்த்தப்பட்ட பிறகு, அர்ச்சகர்களால் பலமுறை துடைத்தாலும், வியர்வை நிற்பதில்லை.
இந்த கோயில் நகரத்தின் மத்தியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது, மேலும் ஆண்டு முழுவதும் ஏராளமான இந்து யாத்ரீகர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர். இக்கோவிலைப் பற்றி பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பதி மற்றும் அனந்தப்பூரிலிருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.
காலை: 6.30- 12.45
மாலை: 4.30- 8.30
*ஸ்ரீஉக்ர நரசிம்மசுவாமி, உம்மடிவரம், பிரகாசம்*
மாவட்டம், ஆந்திரா.
பரத்வாஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நரசிம்மர் நாற்கரங்கள். இம்மலையில் பெருமாள் இருப்பதைக் கண்டு முதியவர் தினமும் அபிஷேகம் ஆராதனை செய்து வந்தார். சுவாமியின் கருணையால் அவரே பூமிக்கு வந்து தங்கிவிட்டதாக வரலாறு. உக்ர நரசிம்ம சுவாமி சங்கு, சக்கர அபய வரத ஹஸ்தத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். அருகில் ஸ்ரீதேவி பூதேவி உள்ளனர். ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் புல்லலசெருவு வட்டத்திலுள்ள உம்மடிவரம் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
*வனஜாக்ஷி லட்சுமி உடனுறை நரசிம்மர், கெஞ்சனூர் - ஈரோடு*
இத்தல நரசிம்மர் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். இவ்வாலயத்தில் உள்ள ஆஞ்சநேயர் 800 ஆண்டுகளுக்கு முன் வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவ்வாலயத்தில் மேகலேஸ்வரி உடனுறை மேகலேஸ்வரரும் உள்ளார். சைவமும் வைணவமும் இணைந்துள்ள இத்தலத்தில் நரசிம்மர் சாந்த மூர்த்தியாக உள்ளார். காரிய சித்தி கிட்டும் இத்தலத்தில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் திருப்பணி நடைபெற்றுள்ளது.
ராமானுஜர் கூரத்தாழ்வாருடன் மேல்கோட்டை அடைந்தபோது இத்தலத்துப் பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்க வேண்டும். இந்தப் பாதையில்தான் அவர் கர்நாடக எல்லையினை அடைந்துள்ளார். நரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்குத் திருமுக வீற்றிருக்க, மகாலட்சுமி அவரது மடியில் அமர்ந்த வண்ணம் உள்ளார். நாற்கரங்களுடன் வனஜாக்ஷி லட்சுமி உள்ளார்.
சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள கெஞ்சனூரில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது.
*கதிர் நரசிங்கப்பெருமாள், கொத்தப்புள்ளி - திண்டுக்கல்*
இக்கோயில் திண்டுக்கல் நவ நரசிம்ம க்ஷேத்திரங்களில் ஒன்று. கர்ப்பக்கிரகத்தில் சுயம்பு மூர்த்தியான சிவன் விஷ்ணுவுடன் சேவை சாதிக்கும் தலம். இத்தலத்துப் பெருமாள் ஜன்மாஷ்டமி அன்று இங்கு எழுந்தருள்கிறார். கதிர் நரசிம்மர் என்பது சூரியக் கதிர்களைக் குறிக்கிறது. சூரியனின் உபாதைகளில் இருந்து நிவர்த்தி தரும் தலம் என்பது ஐதீகம். இத்தலத்து சக்கரத்தாழ்வார் தனி சந்நதியில் தீ ஜுவாலைகள் போன்ற கிரீட அமைப்புக்கொண்டவர்.
16 கரங்களில் காயத்திரி மந்திரம் பொறிக்கப் பெற்றுள்ளார். பின்புறம் வழக்கம்போல் யோக நரசிம்மரும் உள்ளார். திண்டுக்கல்லிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ரெட்டியார் சத்திரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கதிர் நரசிங்கப் பெருமாள் சாந்த மூர்த்தியாக சிம்ம முகம் இல்லாமல் கமலவல்லித் தாயாருடன் உள்ளார்.
*கல்யாண நரசிம்மர், அரியக்குடி, காரைக்குடி.*
ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் தலம். தென் திருவேங்கடமுடையான் தலம். நகரத்தார் கோயில்களான 9 கோயில்களில் உள்ள வைணவத்தலம். சிறந்த பிரார்த்தனைத்தலம். இந்தத் தலத்திற்கு நேர் எதிரே இந்த லட்சுமி நரசிம்மப்பெருமாள் மகாலட்சுமியுடன் சேவை சாதிக்கிறார். பெருமாள் கோயிலுக்கு நிகரான தொன்மை சிறப்பு மிக்கது இந்த நரசிம்மர் கோயில். பிரசித்திபெற்ற அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் அவதாரத் தலம்.
காரைக்குடியிலிருந்து கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ள அரியக்குடியில் இக்கோயில் அமைந்துள்ளது. மகாலட்சுமியினை ஆலிங்கனம் செய்த வண்ணம் தென் திருவேங்கடமுடையான் நின்ற திருக்கோலத்தில் அருட் பாலிக்கிறார். கிழக்கு திருமுகமாக ஸ்ரீதேவி பூமி தேவி நாச்சியார் உள்ளனர்.
12.லட்சுமி நரசிம்மர், திருநெல்வேலி
நெல்லையப்பர் உயரமும் இத்ததலத்து நரசிம்மரின் உயரமும் கர்ப்பக் கிரகத்தில் ஒரே மட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 2 ஆலயங்களுக்கிடையே சுரங்கப்பாதை இருந்துள்ளது. கூரத்தாழ்வாரின் கனவில் தோன்றி தான் மண்ணுக்குள் புதைந்துள்ளதாகக் கூறினார். பெரிய ஆக்ரோஷத்துடன் தனது பக்தனைப் பார்த்ததும் ஆனந்தத்தில் வெளியில் வந்துள்ளார். பேரருளாளன் மற்றும் திருமங்கை மன்னனால் இக்கோயில் பிற்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
லட்சுமி நரசிம்மர் இடது தொடை மீது கை வைத்துள்ளார். தாயாரின் கண்கள் பெருமானைப் பார்த்த வண்ணம் உள்ளன. நெல்லையப்பர் கோயில் மேல மாட வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
*ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி, ரிஷி நாரத மங்கலம், பாலக்காடு, கேரளா*
நரசிம்மாவதாரம் நிகழ்ந்தபோது சாந்த மூர்த்தியாக நின்ற திருக்கோலத்தில் நாரதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே கோயில். இந்தக்கோயில். இத்தலத்து தீர்த்தக் கிணறில் நீராடினால் விசேஷம். சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இத்தலம் உள்ள ஊர்தான் ரிஷி நாரத மங்கலம். பாலக்காடு - திருச்சூர் இரண்டு பகுதியினையும் இணைக்கும் ஊர் இது. இத்தலத்தில் பலா மற்றும் மாங்காய் அறுவடையினைக் குறிக்கும் மிகப்பெரிய விழா நடக்கிறது. அப்போது வாளும் சிலம்பும் ஏழு நல்லாத்து என்னும் சிறப்பம்சமும் வாண வேடிக்கையும் பிரமாதமாக இருக்கும்.
இந்த விழா, திருச்சூர் பூரம் விழாவிற்கு இணையாக யானைகளோடு நடத்துகிறது. நரசிம்மரின் இடக்கரத்தில் கதை இல்லை. சங்கு, சக்கரம் உண்டு. நின்ற கோலத்தில் கிழக்குத் திருமுகமாக அருட்பாலிக்கிறார். இக்கோயில் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திலுள்ள ரிஷி நாரத மங்கலத்தில் அமைந்துள்ளது.
*ஸ்ரீபால நரசிம்மர், ராம மங்கலம்,* எர்ணாகுளம், கேரளா
இக்கோயில் பஞ்ச மகா க்ஷேத்திரத்தில் ஒன்று 800 - 1124 கி.பி. வரை பிரசித்திமாகத் திகழ்ந்த தலம். நரசிம்மர் மற்றும் உன்னிபூதம் சந்நதிகள் உள்ளன. விஷு விளக்கு உற்சவம் என்று சித்திரை மாதத்தில் முக்கியமான வைபவம் நடைபெறுகிறது. அனுஷ்டானப் பிரதானம் அமைந்த கோயில். அதாவது சாஸ்த்ரோர்த்தமாக பூஜைகள் மற்றும் யாகங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் இது. அவர் நிர்மாணித்த 64 கிராமங்களில் வேத மகா கிராமத்தின்கீழ் அமைந்த தலம். ஸ்ரீபால நரசிம்மர் அபூர்வ சாந்த சீலராய் அனுக்கிரக மூர்த்தி நாயகனாய் உருவம் கொண்டிருக்கிறார். கோயில் தூணில் உள்ள இரணியன் உருவம் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோளஞ்சேரி பிறவோம் பகுதியிலிருந்து மூவாட்டுப்புழாவிற்கு இடையே உள்ள ஊர் ராமமங்கலம். காளியாறும், தொடுபுழா ஆறும், கோதையாறும் சங்கமிப்பதால் அப்பகுதி மூவாட்டுப்புழா என அழைக்கப்படுகிறது. பெருமான் சேரப் பேரரசுவின் இரண்டாம் சேரமான் பெருமானால் திருப்பணி செய்யப்பட்ட கோயில்.
*ஸ்ரீலட்சுமி நரசிம்மர், திருநெல்வேலி*
நெல்லையப்பர் உயரமும் இத்ததலத்து நரசிம்மரின் உயரமும் கர்ப்பக் கிரகத்தில் ஒரே மட்டமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 2 ஆலயங்களுக்கிடையே சுரங்கப்பாதை இருந்துள்ளது. கூரத்தாழ்வாரின் கனவில் தோன்றி தான் மண்ணுக்குள் புதைந்துள்ளதாகக் கூறினார். பெரிய ஆக்ரோஷத்துடன் தனது பக்தனைப் பார்த்ததும் ஆனந்தத்தில் வெளியில் வந்துள்ளார். பேரருளாளன் மற்றும் திருமங்கை மன்னனால் இக்கோயில் பிற்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
லட்சுமி நரசிம்மர் இடது தொடை மீது கை வைத்துள்ளார். தாயாரின் கண்கள் பெருமானைப் பார்த்த வண்ணம் உள்ளன. நெல்லையப்பர் கோயில் மேல மாட வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது.
*ஸ்ரீஎடையூரப்பன், மலப்புரம், கேரளா.*
எடையூர் நரசிம்மம் எனப் பொதுவழக்கில் கூறினாலும் வெண்காடி என்ற இடத்தில் தான் மகாவிஷ்ணு கோயில் உள்ளது. இத்தலத்து பெருமாளே எடையூரப்பன் என்று அழைக்கப்படுகிறார். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் வலஞ்சேரியிலிருந்து நிலம்பூர் செல்லும் சாலையில் வெண்காடு என்கிற தலத்தில் இக்கோயில் உள்ளது. இது பெரிந்தால் மன்னவலஞ்சேரி பாதையாகும். குட்டிப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பெரிந்தால் மன்ன வலஞ்சேரி பாதையில் 18 கி.மீ. வந்தால் வலப்புறம் சாலையோரத்தில் இக்கோயில் உள்ளது.
*ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி, ரிஷி நாரத மங்கலம், பாலக்காடு, கேரளா*
நரசிம்மாவதாரம் நிகழ்ந்தபோது சாந்த மூர்த்தியாக நின்ற திருக்கோலத்தில் நாரதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே கோயில். இந்தக்கோயில். இத்தலத்து தீர்த்தக் கிணறில் நீராடினால் விசேஷம். சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இத்தலம் உள்ள ஊர்தான் ரிஷி நாரத மங்கலம். பாலக்காடு - திருச்சூர் இரண்டு பகுதியினையும் இணைக்கும் ஊர் இது. இத்தலத்தில் பலா மற்றும் மாங்காய் அறுவடையினைக் குறிக்கும் மிகப்பெரிய விழா நடக்கிறது. அப்போது வாளும் சிலம்பும் ஏழு நல்லாத்து என்னும் சிறப்பம்சமும் வாண வேடிக்கையும் பிரமாதமாக இருக்கும்.
இந்த விழா, திருச்சூர் பூரம் விழாவிற்கு இணையாக யானைகளோடு நடத்துகிறது. நரசிம்மரின் இடக்கரத்தில் கதை இல்லை. சங்கு, சக்கரம் உண்டு. நின்ற கோலத்தில் கிழக்குத் திருமுகமாக அருட்பாலிக்கிறார். இக்கோயில் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திலுள்ள ரிஷி நாரத மங்கலத்தில் அமைந்துள்ளது.
*ஸ்ரீபால நரசிம்மர், ராம மங்கலம், எர்ணாகுளம், கேரளா*
இக்கோயில் பஞ்ச மகா க்ஷேத்திரத்தில் ஒன்று 800 - 1124 கி.பி. வரை பிரசித்திமாகத் திகழ்ந்த தலம். நரசிம்மர் மற்றும் உன்னிபூதம் சந்நதிகள் உள்ளன. விஷு விளக்கு உற்சவம் என்று சித்திரை மாதத்தில் முக்கியமான வைபவம் நடைபெறுகிறது. அனுஷ்டானப் பிரதானம் அமைந்த கோயில். அதாவது சாஸ்த்ரோர்த்தமாக பூஜைகள் மற்றும் யாகங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் இது. அவர் நிர்மாணித்த 64 கிராமங்களில் வேத மகா கிராமத்தின்கீழ் அமைந்த தலம். ஸ்ரீபால நரசிம்மர் அபூர்வ சாந்த சீலராய் அனுக்கிரக மூர்த்தி நாயகனாய் உருவம் கொண்டிருக்கிறார். கோயில் தூணில் உள்ள இரணியன் உருவம் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோளஞ்சேரி பிறவோம் பகுதியிலிருந்து மூவாட்டுப்புழாவிற்கு இடையே உள்ள ஊர் ராமமங்கலம். காளியாறும், தொடுபுழா ஆறும், கோதையாறும் சங்கமிப்பதால் அப்பகுதி மூவாட்டுப்புழா என அழைக்கப்படுகிறது. பெருமான் சேரப் பேரரசுவின் இரண்டாம் சேரமான் பெருமானால் திருப்பணி செய்யப்பட்ட கோயில்.
*ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
*வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம்* 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீநரசிம்மாவதாரம் தொடரும் ....
🙏 *சர்வம் கிருஷ்ணார்ப்பனம்* 🙏*
No comments:
Post a Comment