Tuesday, April 20, 2021

Srimaan venkata taniyan

श्रीमान् वेङ्कटनाथर्य: कवितार्किक केसरी |
वेदान्ताचार्य वर्यो मे सन्निधत्तां सदा हृदि ‖
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோமே ஸன்னிதத்தாம் ஸதா ஹ்ருதி ‖

கலி 4430 சுக்ல வருஷம் சித்திரை மாதம் புனர்வஸு நக்ஷத்ரம் கூடிய சுபதினத்தில் ஸ்ரீதேஶிகனின் திருக்குமாரரான ஸ்ரீவரதாசார்யர் ஸ்ரீதேஶிகனிடம் வேதாந்த காலக்ஷேபம் செய்ய ஆரம்பித்தார். அப்போது ஸ்ரீதேஶிகன் விஷயமாக "ஸ்ரீமான் வேங்கட" எனும் தனியனை விண்ணப்பித்தார். இதன் அர்த்த புஷ்டியை பார்த்து ஸ்ரீஶ்ருதப்ரகாஶிகாசார்யர் முதலானவர்கள் ஸ்ரீதேஶிகனின் ஸம்ஸ்க்ருத ஸ்ரீஸூக்திகளுக் கெல்லாம் இதைத் தனியனாக அனுஸந்திக்கும்படி நியமிக்க வேணுமாய் ஸ்ரீதேஶிகனிடம் ப்ரார்த்தித்தனர். ஸ்ரீதேஶிகனும் அப்படியே அப்யுகமம் செய்து அருளினார். இன்று சித்திரை புனர்வஸு (19.4.2021 திங்கட்கிழமை)  

அனைவரும் இத்தனியனை அனுஸந்தித்து ஸ்ரீதேஶிகனை ப்ரார்த்தித்து இன்புறுவோம்

No comments:

Post a Comment