Sunday, April 25, 2021

Dakshina Murthy and Guru the Jupiter - know the difference

ரெண்டு பேரும் வேறே. -- நங்கநல்லூர் J K SIVAN --


தக்ஷிணாமூர்த்தி என்பவர் யார்? குரு என்பவர் யார்? குரு பகவான் என்பவர் வேறு தக்ஷிணாமூர்த்தி வேறு. இருவரும் ஒருவரல்ல. ஆனால் நம்மில் அநேகர் தக்ஷிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவரே என நினைத்துக்கொண்டு வழிபடுகிறோம். நானும் அவ்வாறு பலகாலம் நினைத்தவன். அப்புறம் தான் கொஞ்சம் புரிந்தது. தக்ஷிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் உள்ள வேறுபாJ டுகள் என்ன?
தக்ஷிணாமூர்த்தி சிவஸ்வரூபம். குரு பகவான் என்பவர் நவகிரஹத்தில் ஒருவர். பெயர் பிரஹஸ்பதி. தக்ஷிணாமூர்த்தி முதலாளி. குரு அவருடைய ஒரு அதிகாரி. தக்ஷிணாமூர்த்தி சிவகுரு. தெற்கு நோக்கி உள்ளார். குரு தேவகுரு. வடக்கு நோக்கி உள்ளார். தக்ஷிணாமூர்த்தி கல்லாலமரத்தின் கீழ் அமர்ந்து நான்கு வேதங்களோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர்,சனாதனர்,சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுககு உபதேசிப்பவர். குரு பகவான் நவகிரஹங்களில் வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து, கொண்டு சேர்ப்பவர். தக்ஷிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர். குரு நவகிரஹங்களில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர். சிவன் தோன்றுதல் மறைதல் என்கின்ற தன்மைகள் இல்லாதவர். குருவோ உதயம் அஸ்தமனம் என்கின்ற தன்மைகள் உடையவர்.

இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இரு பகவான்களை ''குரு'' என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர்.இவர்தான் அவர் என்று வாதிடுவது சரிஇல்லை அல்லவா?

தக்ஷிணாமூர்த்தியை (சிவகுருவாக)வழிபடவேண்டும். சில ஆலயங்களில் தக்ஷிணாமூர்த்தியை குருபகவான் என்றே மாற்றிவிட்டார்கள். அவர் சனகாதி முனிவர்களுக்கு மௌன உபதேசம் செய்வதால் குரு என்று சொல்வது அஸ்திவாரத்தையே மாற்றிவிடுகிறது. போதாதற்கு சில சிவாலயங்களில் அனைத்து பரிகார பூஜைகளையும் தட்சிணாமூர்த்திக்கு செய்கிறார்கள். குருவிற்கு அணிவிக்க வேண்டிய மஞ்சள் துணியை தக்ஷிணாமூர்த்திக்கு அணிவிப்பதும் கடலை சாதம் போன்ற குரு கிரஹ நைவேத்திய பொருள்களை தக்ஷிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்வதும் நடக்கிறது. 
குருபெயர்ச்சியன்று தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள் சாந்தி பரிகாரங்கள் செய்கிறார்கள்.
இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள்சொல்கின்றார்கள் என்கின்றபோதும் தட்சிணாமூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.
பிரஹஸ்பதி எனும் குருபகவான் தேவகுரு மட்டும்தான் .தக்ஷிணாமூர்த்தி ப்ரஹஸ்பதிக்கும் குருவான பெரிய குரு. அதனால் குருவுக்கு செய்வதை இவருக்கு செய்வதில் தவறில்லை என்று வாதிடுகின்றார்கள். .
குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யாதி தேவதை பிரம்ம தேவன். இதற்கான ஆதாரங்கள் பல தொன்னூல்களில் உள்ளன.

No comments:

Post a Comment