Friday, February 26, 2021

Bhagavad Gita adhyaya 2 sloka 20,21 in tamil

Courtesy : Smt.Dr.Saroja Ramanujam

கீதாம்ருதம் அத்தியாயம் 2

20.ந ஜாயதே ம்ரியதே வா கதாசித் 
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜ: நித்ய: சாஸ்வதோ அயம் புராண: 
ந ஹன்யதே ஹன்யமானே சரீரே

அயம் –இந்த ஆத்மா , ந ஜாயதே – பிறப்பதும் இல்லை. ந ம்ரியதே வா- இறப்பதும் இல்லை. ந பூத்வா- இருந்து , பூய: - மறுபடியும், ந பவிதா வா- இருக்கப்போவதுமில்லை. ( அதாவது இறந்தகாலம் வருங்காலம் எதுவுமே ஆத்மாவுக்கு இல்லை)

ஏனென்றால் நித்ய: -அது என்றும் இருப்பதால், அஜ:-பிறவி இல்லாதது. புராண: - தொன்றுதொட்டு இருப்பது. சாஸ்வத: - அதனால் சாஸ்வதமானது. சரீரே ஹன்யமானே- சரீரம் கொள்ளப்படுவதால், ந ஹன்யதே – ஆத்மாகொல்லப்படுவதில்லை.

பிறவி எடுப்பது எல்லாம் ஆறு விதமான மாறுதல்களுக்கு உட்பட்டதே. அவை, பிறப்பது, இருப்பது, வளர்வது, மாறுவது, க்ஷீணம் அடைவது , இறப்பது என்பவை ஆகும். ஆத்மாவுக்கு. இவை ஆத்மாவுக்கு இல்லை சரீரத்திற்கு மட்டுமே. ஆத்மா கொல்லப்படுவதில்லை என்று கூறினார் . அது கொல்வதும் இல்லை என்பது அடுத்த ச்லோகத்தில் கூறப்படுகிறது.

21.வேத அவினாசினம் நித்யம் ய ஏனம் அஜம் அவ்யயம் 
கதம் ஸ புருஷ: பார்த்த கம் காதயதி ஹந்தி கம்

பார்த்த- அர்ஜுனா, ய:- எந்த மனிதன், ஏனம் – இந்த ஆத்மாவை , அவினாசினம்- அழிவில்லாதது, நித்யம்- நித்தியமானது, அஜம்- பிறப்பில்லாதது, அவ்யயம் – மாறுதல் அற்றது, வேத- என்று அறிகிறானோ, ஸ புருஷ: - அந்த மனிதன், கதம் – எவ்வாறு, கம் காதயாதி- யாரை கொல்லச் செய்கிறான் , கம் – யாரை, ஹந்தி- கொல்கிறான்.

அதாவது ஆத்மாவை அறிந்தவன் தனையும் பிறரையும் தேகமாக எண்ணுவதில்லை. ஆத்மாவாகவே காண்கிறான். அப்படிப்பட்ட ஞானியானவன் போர் செய்ய நேரிட்டாலும் அதைத்தான் செய்வதாகக் கருதுவதில்லை. ராகத்வேஷம் அற்றவனாக எல்லாமே இறைவனின் செயல் என்று எண்ணித் தன் கடமையை ஆற்றுகிறான்.

No comments:

Post a Comment