Tuesday, January 19, 2021

Bhagavad Gita adhyaya 1 sloka 40 to 47 in tamil

Courtesy : Smt.Dr.Saroja Ramnujam

கீதாம்ருதம் - முதல் அத்தியாயம் தொடர்ச்சி

40.. குலக்ஷயே ப்ரணச்யந்தி குலதர்மா: ஸனாதனா:

தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்னம் அதர்மோ அபிபவத்யுத

குலக்ஷயே-குலக்ஷயத்தினால் , ஸனாதனா: குலதர்மா: - சனாதனதர்மங்கள், ப்ரணச்யந்தி- அழிகின்றன.தர்மே நஷ்டே – தர்மம் அழிந்தால் , அதர்ம:- அதர்மம், குலம் க்ருத்ஸ்னம்- குலம் முழுவதையும் , அபிபவத்யுத – ஆக்ரமிக்கிறது.

41.அதர்மாபிபவத் கிருஷ்ண ப்ரதுஷ்யந்தி குல ஸ்த்ரிய:

ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜெயதே வர்ண ஸங்கர:

கிருஷ்ணா, அதர்மாபிபவத்- அதர்மம் மேலோங்கும்போது ,குலஸ்த்ரிய: - குலஸ்திரீகள் ப்ரதுஷ்யந்தி – கெடுகிறார்கள். ஸ்த்ரீஷு துஷ்டாஸு- பெண்கள் அவ்வாறு கெடும்போது, வார்ஷ்ணேய , வ்ருஷ்ணிகுலத்தவனே, வர்ண ஸங்கர: - வர்ணங்களின் கலப்படம் ஜெயதே- ஏற்படுகிறது.

42, ஸங்கரோ நரகாய ஏவ குலக்னானாம் குலஸ்ய ச

பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்த்பிண்டோதகக்ரியா:

வர்ணாஸ்ரம தர்மங்கள் கெடும்போது குலக்னானாம்- குலத்தை அழித்தவருக்கும் குலத்துக்கும், நரகாய ச – நரகத்திற்கு வழி வகுக்கிறது. ஏஷாம்- அவர்களுடைய , பிதர: - பித்ருக்கள் , லுப்தபிண்டோதகக்ரியா- நீர்க்கடன் , ஸ்ராத்தம் இவற்றை இழந்து , பதந்தி- வீழ்ச்சி அடைகிறார்கள்

43.தோஷை: : ஏதை: குலக்நானாம் வர்ணஸங்கரகாரகை:

உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மா: ச சாஸ்வதா:

வர்ண ஸங்கர காரகை: - வர்ணங்களை கலப்படம் செய்து : குலக்நானாம் – குலநாசம் செய்பவருடைய , ஏதை: தோஷை: - இந்த குற்றங்களால் , ஜாதித்ர்மா: குல தர்மா: ச : - வர்ணாச்ரம தர்மம், குலதர்மம் இவை , உத்ஸாத்யந்தே – அழிந்துவிடுகின்றன.

44.உத்ஸன்னகுலதர்மாணாம் மனுஷ்யாணாம் ஜனார்தன

நரகே நியதம் வாஸ: பவதி இதி அனுசுஸ்ரும

ஜனார்தன-ஜனார்தனா, உத்ஸன்னகுலதர்மாணாம் மனுஷ்யாணாம்- குலதர்மம் அழிந்த மனிதர்களுக்கு , நரகே – நரகத்தில் , நித்யம் வாஸ: - நிரந்தரமான வாசம், பவதி- ஏற்படுகிறது , இதி - என்று , அனுசுஸ்ரும- கேள்வியுற்றிருக்கிறோம்.

45.அஹோ பத மஹத் பாபம் கர்த்தும் வ்யவஸிதா வயம்

ய: ராஜ்யஸுகலோபேன ஸ்வஜனம் ஹன்தும் உத்யதா:

அஹோ பத - கஷ்டம்!வயம் – நாம் , ராஜ்யஸுகலோபேன – ராஜ்ஜியசுகம் பெறும் பேராசையால் , ஸ்வஜனம் ஹன்தும் – பந்துக்களைக் கொல்ல, உதயதா: - முற்பட்டு, மஹத் பாபம் கர்த்தும்- பெரிய பாவம் செய்ய , வ்யவஸிதா: :- முனைந்திருக்கிறோம்.

46.யதி மாம் அப்ரதீகாரம் அசஸ்த்ரம் சஸ்திரபாணய:

தார்த்தராஷ்டிரா: ரணே ஹன்யு: தத் மே க்ஷேமகரம் பவேத்

சஸ்திரபாணய: தார்த்தராஷ்டிரா- ஆயுதம் தாங்கிய இந்த த்ருத்ராஷ்ட்ர குமாரர்கள் , அப்ரதீகாரம்- எதிர்ப்பின்றி , அசஸ்த்ரம்- நிராயுதபாணியான , மாம் – என்னை, யதி ஹன்யு: - கொல்வார்களேயானால் , தத் – அது மே – எனக்கு , க்ஷேமகரம் பவேத்- நன்மையாகவே இருக்கும்.

இவ்வாறு எவர் 'பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்

தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே ,' ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, என்று பின்னர் கூறப்போகிறாரோ அவருக்கே தர்ம உபதேசம் செய்கிறான்.

சஞ்சயன் கூறினான்

47.ஏவம் உக்த்வா அர்ஜுன: ஸங்க்யே ரதோபஸ்த: உபாவிசத்

விஸ்ருஜ்ய ஸசரம் சாபம் சோகஸம்விக்னமானஸ:

அர்ஜுன: - அர்ஜுனன் , ஸங்க்யே- யுத்தபூமியில் , ஏவம் உக்த்வா- இவ்வாறு கூறி, ஸசரம் சாபம்- அம்புகளுடன் வில்லையும், விஸ்ருஜ்ய – போட்டுவிட்டு , சோகஸம்விக்னமானஸ:- சோகத்தினால் கலங்கிய மனதுடன், ரதோபஸ்த:- தேர்த்தட்டில் , உபாவிசத் – உட்கார்ந்துவிட்டான்,

முதல் அத்தியாயம் முற்றிற்று.

அர்ஜுனனின் மனக்கலக்கத்தை வியாஜமாகக் கொண்டு அடுத்த அத்தியாயத்தில் இருந்து பகவான் மனித குலம் உய்ய கீதையை கூறப்போகிறார்.

No comments:

Post a Comment