கீதாஞ்சலி 54. J K SIVAN தாகூர்
54. ''இந்தா தாகம் தீர குடி ''
54. I asked nothing from thee; I uttered not my name to thine ear. When thou took'st thy leave I stood silent. I was alone by the well where the shadow of the tree fell aslant, and the women had gone home with their brown earthen pitchers full to the brim. They called me and shouted, 'Come with us, the morning is wearing on to noon.' But I languidly lingered awhile lost in the midst of vague musings. I heard not thy steps as thou camest. Thine eyes were sad when they fell on me; thy voice was tired as thou spokest low—'Ah, I am a thirsty traveller.' I started up from my day-dreams and poured water from my jar on thy joined palms. The leaves rustled overhead; the cuckoo sang from the unseen dark, and perfume of babla flowers came from the bend of the road. I stood speechless with shame when my name thou didst ask. Indeed, what had I done for thee to keep me in remembrance? But the memory that I could give water to thee to allay thy thirst will cling to my heart and enfold it in sweetness. The morning hour is late, the bird sings in weary notes, neem leaves rustle overhead and I sit and think and think.
தாகூர் ப்ரம்ம சமாஜ் வாதி. விக்ரஹ ஆராதனை கிடையாது. ஆனால் இறை நம்பிக்கை உண்டு. அவர் கவிதைகளில் நான் கிருஷ்ணனை முகர்ந்து அவன் பெயரை நடு நடுவே என் திருப்திக்காக நுழைத்திருக்கிறேன். கண்ணன் இல்லாமல் கீதையோ அதற்கு அஞ்சலியோ ஏது என்பதால் இப்படி கிருஷ்ணன் பெயரோடு படிக்கும்போது ஒரு புதுப் பொலிவு.
''நான் எப்போது உன்னிடமிருந்து எதைக் கேட்டேன்? உன் காதருகே வந்து இதோ நான் வந்திருக்கிறேன் என்று என்றாவது என் பெயரை சொன்னதுண்டா?
நீ என்னிடமிருந்து நகரும்போது ''போகாதே, இன்னும் இங்கேயே இரு என்று எப்போதாவது கையைப் பிடித்து இழுத்தேனா? ஒரு வார்த்தையும் பேசாமல் பார்த்துக்கொண்டு தானே நின்றேன். கிணற்றருகே சுவற்றைப் பிடித்துக்கொண்டு உன்னை பார்த்துக்கொண்டே தானே நின்றேன். அதற்கு சாட்சி அந்த கோணல் தென்னை மரத்தின் நிழல், அதுவும் கோணலாக கருப்பாக தரையில் உனக்கும் எனக்கும் இடையே விழுந்ததே.
அதோ பார், வழக்கமாக ஆற்றில் குளித்துவிட்டு இடுப்பில், தலையில், பானைகளில் நீர் நிரப்பிக்கொண்டு ஊர் வம்பு பேசிக்கொண்டு வீடு திரும்புகிறார்கள்.
'' என்னடி நிற்கிறாய், வா எங்களோடு, நேரம் ஆகி வெயில் உச்சியைத் தொடப்போகிறது சீக்கிரம்'' -- என்னை கூப்பிடுகிறார்கள். நான் எங்கோ மனது சுற்றுகிறது. அவர்கள் பேச்சை காதில் வாங்கவில்லை.கிருஷ்ணா நீ என் அருகில் வந்த சப்தமே கேட்கவில்லையே. ஏன் உன் பார்வையில், கண்ணில் ஏதோ ஒரு சோகம்?குரல் தழு தழுக்கிறது. மெல்லிய குரலில் ' எனக்கு தாகமாக இருக்கிறது. ரொம்பதூரம் போகவேண்டும்''
ஆஹா உனக்கு தாகமா? என் பகல் கனவிலிருந்து மீண்டேன். என் குடத்திலிருந்து குனிந்து நீட்டிய உன் கரங்களில் குடத்தை சாய்த்து நீரை விடுகிறேன். குடிக்கிறாய். மேலே மரங்களில் இலைகளின் சலசலப்பு. வாய் ஓயாமல் குருவிகள், கிளிகள், சத்தம். எங்கோ கண்ணுக்கு படாமல் ஒரு கருங்குயில் இலைகளுக்கு இடையே மறைந்து அற்புதமாக இசைக்கிறது. மகிழ மரம் எங்கோ சந்து ஓரமாக இருந்தாலும் காற்றில் மகிழம்பூ மணம் ''கம்'' மென்று வீசுகிறதே.
''உன் பேர் என்னடி?'' கிருஷ்ணா, நீ கேட்கும்போது என்னை வெட்கம் பிடுங்கி தின்றது. நான் என்ன பெரிதாக செய்துவிட்டேன் என் பேர் உனக்கு தெரிவதற்கு? என்னை ஞாபகம் வைத்துக்கொள்வதற்கு?'' பேச்சு மூச்சு இல்லாமல் நின்றுவிட்டேன்.
ஆனால் கிருஷ்ணா இந்த ஒரு நிகழ்வு என்றும் பசுமரத்தாணி என் மனதில். ''என் கிருஷ்ணன் தாகத்தோடு என்னிடம் தண்ணீர் கேட்டு நான் கொடுத்தேன்........''நினைக்கும்போதே இனிக்கிறது.
நேரம் ஓடுகிறது.. காலை உச்சி வேளையாகி , மாலையாகப்போகிறது. என் தலைக்கு மேலே வேப்ப மரம் கிளைகளை அசைத்து என்னை கனவிலிருந்து எழுப்புகிறது....நான் இன்னும் உட்கார்ந்து கொண்டு யோசிக்கிறேன் யோசிக்கிறேன் யோசித்துக்கொண்டே தானே இருக்கிறேன்....... உன்னைப் பற்றி...
கீதாஞ்சலி 58 J K SIVAN
தாகூர்
58. ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
58. Let all the strains of joy mingle in my last song--
-the joy that makes the earth flow over in the riotous excess of the grass,
the joy that sets the twin brothers, life and death, dancing over the wide world,
the joy that sweeps in with the tempest, shaking and waking all life with laughter,
the joy that sits still with its tears on the open red lotus of pain,
and the joy that throws everything it has upon the dust, and knows not a word.
இது தான் என்னுடைய கடைசி கீதம் என்றால் அதில் நான் ஆனந்தம் பெற அனுபவித்த துன்பங்கள் கலக்கட்டும், கண்ணுக்கெட்டிய பச்சைப் பசேலென வளர்ந்த புல்வெளியைத்தாண்டி அதை தாங்கி நிற்குமபூமியின் ஆனந்தமாக, ஜனனம் மரணம் என்ற இரு துருவங்களை இணைக்கும் ஆனந்தமாக,இந்த பரந்த உலகின் மேல் நடனமாடும் ஆனந்தமாக, சீறும் புயலிலும் கம்பீர அழகென மிளிரும் ஆனந்தமாக, உலகின் ஒவ்வொரு உயிரையும் அசைத்து பார்க்கும், எழுப்பி இயக்கும் ஆனந்த சிரிப்பாக, தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் மண்ணில் விட்டெறிந்து பற்றற்ற நிலை தரும் ஆனந்தமாக எல்லாவற்றையும் விட வார்த்தையற்ற மௌனம் தரும் ஆனந்தமாக இந்த கடைசி கீதம் நிகழட்டும்.
கீதாஞ்சலி 56 J K SIVAN
தாகூர்
56. நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா?
56 .Thus it is that thy joy in me is so full. Thus it is that thou hast come down to me. O thou lord of all heavens, where would be thy love if I were not?
Thou hast taken me as thy partner of all this wealth. In my heart is the endless play of thy delight. In my life thy will is ever taking shape.
And for this, thou who art the King of kings hast decked thyself in beauty to captivate my heart. And for this thy love loses itself in the love of thy lover, and there art thou seen in the perfect union of two.
எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா கிருஷ்ணா. உனக்கு என்னை பிடித்தி ருக்கிறது. என்னுள்ளே நீ களிக்கிறாய் என்று நான் உணரும்போது நான் பறக்கிறேன். விண்ணில் உன்னைப்போல் கருடனில்லா மலேயே, நான் தனியாகப் பறக்கிறேன். நீ எங்கோ இருந்தவன், இருப்பவன் அல்ல. என்னுள்ளே இருப்பதற்கு வந்துவிட்டாய் என்று நான் அறிந்து மகிழ்கிறேன். உன்னை ஒரு கேள்வி கேட்கட்டுமா? என் போன்றார் இதயம் உனக்கு கிடைக்காவிட்டால் எங்கே உன் கருணையை, அன்பை நிரப்புவாய்?உன்னிடமிருந்து பெருகும் அன்புச் செல்வத் தில் எனக்கும் பங்குண்டு. நானும் ஒரு பங்காளி. இந்த இதயத்தில்,கண்ணா, நீ உன் ஆனந்தமான எல்லையற்ற விளையாட் டை ரசிக்கிறேன்.
இந்த என்னுடைய மானுட வாழ்க்கையை நான் வாழ்கிறேன் என்று சொன்னால் பெரிய தப்பு. நீ விரும்பியபடி நடக்கிறது என்றால் சரி. நீ ராஜாதி ராஜனடா கண்ணா, எவ்வளவு நேர்த்தியாக அழகுடன் என் இதயத்தை கொள்ளை கொண்ட வன். நான் உன் காதலி. உன்மேல் நான் கொண்ட அளவற்ற காதலில் உன் காதல் எங்கோ எப்படியோ கரைந்து விட்டதடா. நீயும் நானும் இருவரல்ல, தனித்தனி அல்ல, உனக்கு அடையா ளம் கிடையாது.
நீ என்னில் கலந்து, கரைந்து, மறைந்து நானாகிவிட்டாய். இல்லை நான் நீயாகி விட்டேனா ?
No comments:
Post a Comment