Today's "amruta bindu" from Sri Chandrasekaramrutham - 30.10.20 (Ayppasi Revati):
* நம்மைப் போல பந்த நிலையில் இல்லாமல் விடுபட்டு ஸ்வதந்த்ர புருஷராக இருக்கற "குருவே" தான் நம்மை ஒரு ஒழுங்கிலே கட்டுப்படுத்துவதற்காக தாமும் அந்த ஒழுக்கத்தில் கட்டுப்பட்டு வாழ்ந்து காட்டி நமக்கு போதனை செய்கிற "ஆசார்யா்" ஆக இருக்கிறார் என்று நாம்தான் புரிந்துகொண்டு நம்முடைய ஆசார்ய புருஷர்களிடம் பக்தி செலுத்த வேண்டும்.
* "ஈஸ்வரன்" தானேதான் இப்படி குரு, ஆசார்யர் என்ற ரூபத்தில் வந்து நமக்கு ஞான அனுகிரஹம் பண்ணுகிறான் என்று கருதி பக்தி பண்ணினால் பலன் சீக்கிரத்தில் கிடைக்கும்.
* ஈஸ்வரன்தானே எல்லாமும் ஆகி இருப்பது? இப்படிப் பார்த்தால், நாம் மட்டும் அவனிலாமல் யார் என்ற கேள்வி வருகிறது அல்லவா? நாமே ஈஸ்வரன் எனும்போது இன்னொருத்தனை எதற்காக ஈஸ்வரனாக உபாசிக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி.
* எல்லாமும் அவன் தான் என்றாலும் ஒன்றுக்கும் தன்னுடைய "ஈஸ்வரத்வம்" தெரியவில்லையே! தெரிந்திருந்தால் நமக்கு இத்தனை ஆசை, கோபம், பயம், அழுகை, பொய், பாபம் இருக்குமா?
* அதனால் எல்லாம் "அவன்" என்றாலும், பூர்ணமான அவனாகத் தன்னைத் தெரிந்து கொள்ளாமல் அந்த "அவனே" போட்டுக்கொண்ட வேஷங்களாகத்தான் இவை இருக்கின்றன.
* ஆனால், ஆசார்யர் என்பவர் இத்தனை கோணா-மாணா வேஷமாக இல்லாமல், அவரிடம் "ஆஸாமி"யை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.
* நம்மிடமே தெரிந்து கொள்ளமுடியாத "தெய்வத் தன்மையை" அவரிடம் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.
* இப்படி பல தினுஸாக வேஷம் போடுகிற ஒரே "ஈஸ்வரன்"தான், ரொம்ப "அசட்டு" வேஷமான நம்மை சமர்த்தாக்குவதற்கே, ஸ்பெஷலாக "ஆசார்ய" வேஷத்தில் வந்திருக்கிறான் என்று உணர்ந்து நாம் பக்தி பண்ணினோமானால், அப்புறம் அங்கே வேஷத்தை முழுசாகவே கலைத்துவிட்டுத் தன்னையே தெரியப்படுத்திக் கொண்டு விடுவான்.
* அப்புறம், "அப்புறம்" தான் - நம் வேஷத்தின் அசட்டுத்தனங்களையும் போக்கி, இந்த வேஷத்தையும் கலைத்து, "நாமும் அவனே தான்" என்று அறிந்து அனுபவிக்குமாறு அருள் செய்துவிடுவான்.
* முடிந்த முடிவான "அந்த நிலைக்குப்" போக இப்போ நாம் செய்ய வேண்டியது - ஆசார்யரை ஈஸ்வரனாக நினைத்து அவர் உபதேசிக்கிறபடி நடப்பது தான்.
श्री गुरवे आचार्याय च नमो नमः।
प्रदोष शङ्कर प्रत्यक्ष शङ्कर।
🙏🙏🙏🙏
No comments:
Post a Comment