Thursday, November 26, 2020

Advaita sadhana - Deivathin kunal - part 6 - Periyavaa

*தெய்வத்தின் குரல்- ஆறாம் பகுதி*
*அத்வைதம்*
*அத்வைத ஸாதனை*

ஆத்மா உயிர் மயமானது; தத்வப் பொருள் மட்டுமன்று : தெய்வத்தின் குரல் 
(ஆறாம் பகுதி ்)
நேற்று தொடங்கிய இந்த பாகத்தின் மேல் உரை

இது ச்லோகத்தின் முன் பாதி. பின் பாதியில் பக்தி என்பதென்ன என்று டெஃபனிஷன் கொடுத்திருக்கிறார்:

ஸ்வஸ்வரூபாநுஸந்தாநம் பக்திரித்யபிதீயதே

'தன்னுடைய ஸ்வரூபத்தையே, அதாவது உண்மையில், இயற்கையாக நாம் யாரோ அந்த ஆத்மாவையே எப்போதும் இடைவிடாமல் சேர்ந்திருப்பதுதான் பக்தி என்று சொல்லப்படுகிறது' என்று அர்த்தம்.

'பக்தி: இதி அபிதீயதே' என்றால் 'பக்தி எனப் பெயரிடப்பட்டிருப்பது'.

ஸ்வஸ்வரூபத்தை 'அநுஸந்தானம்' பண்ணனுமென்று சொல்கிறார். அதென்ன அநுஸந்தானம்? 'ஸந்தானம்' என்றால் ஒன்றோடு போய்ச் சேர்ந்து ஒட்டிக் கொண்டிருப்பது. 'சந்திப்பு' என்று சொல்கிறோமே, அது! விடாமல் தொடர்ந்து அப்படிச் சேர்ந்திருப்பது 'அநுஸந்தானம்'.

ஆத்மாவில் அப்படி சேர்ந்திருப்பதென்றால், ஆத்மா ஒன்று, அதில் சேர்த்து இழைந்துகொண்டிருக்கிற ஜீவாத்மா ஒன்று என்று இரண்டா? இல்லை. ஆத்மாவுடன் சேர்கிறது, இழைகிறது என்றெல்லாங்கூட எதுவும் பண்ண முடியாது. இந்த மாதிரி அல்ப ஸ்வல்ப த்வைதத்திற்குக்கூட அது இடம் கொடுக்காது. சேர விரும்புகிற, தாபத்தில் ப்ரேமையோடு தவிக்கிற ஜீவனை – அதாவது அந்தஃகரணத்தை; குறிப்பாக அஹங்காரத்தை – அது அப்படியே முழுங்கி விட்டு தானாக நிற்குமே தவிர, சேர்ந்து இழைத்து குழைந்து இருப்பதெல்லாங்கூட இங்கே நடக்காது. ஆகவே வாஸ்தவமாகவே ஸ்வஸ்வரூபமான அந்த ஆத்மாவை அநுஸந்தானம் பண்ணாமல், அதைப் பற்றிய நினைப்பிலேயே இடைவிடாமல் உள்ளத்தைச் சேர்த்து, இழைத்து, குழைத்துக் கொண்டிருப்பதைத்தான் 'அநுஸந்தானம்' என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளவேண்டும். புத்தியை சுத்த ப்ரஹ்மத்திலே ஸ்தாபித்து ஸமாதானப்படுத்த வேண்டும் என்று வந்த இடத்தில், சுத்த ப்ரஹ்மத்தின் கிட்டேயே புத்தி போக முடியாதாகையால் அதைக் குறித்த விஷயங்களில், உபதேசங்களில், ஆத்ம வித்யா சாஸ்திரங்களிலேயே புத்தியைச் செலுத்தணும் என்றுதானே அர்த்தம் பண்ணிக்கொண்டோம்? அதேபோல இங்கேயும் ஆத்ம ஸ்வரூபத்தையே இடைவிடாமல் சேர்ந்திருக்கும் அநுஸந்தானத்தைப் பண்ணவேண்டும் என்பதற்கு அதைப் பற்றிய நம்முடைய நினைப்பிலேயே அநுஸந்தானம் என்று அர்த்தம் பண்ணிக்கணும்.
ஸந்நியாஸத்திற்கு முந்தியே ஆரம்பிக்கும் இந்த அநுஸந்தானம் ஸந்நியாஸத்திற்கு அப்புறம்தான் மேலும் மேலும் பலப்பட்டு, ஆழப்பட்டு முடிவாக ஸாதனை பண்ணுபவன் தன்னையே பூர்ணமாகக் கொடுத்து அழித்துக்கொண்டு, ஆத்மா பிரகாசிப்பதாகப் பூர்த்தியாகும்.

இடைவிடாமல் இழைந்து குழைவது என்றால் அது தானே ப்ரேம பக்தி?

ஜீவபாவத்தை பரப்ரம்மம் முழுங்கி ஆத்மாவாக நிற்கிறது என்னும்போது ஒன்று சொல்லவேண்டும். ஒரே முழுங்காக அது முழுங்கித் தீர்த்துவிடுவதில்லை. முழுங்கும்; மறுபடி கக்கும்; மறுபடி முழுங்கும். ஸமாதியிலிருப்பது, கலைந்து எழுந்திருப்பது என்கிறவை இப்படி முழுங்கப்பட்ட, கக்கப்பட்ட நிலைகள்தான். ஒவ்வொரு தடவை முழுங்கப்பட்டு வெளிவருகிறபோதும் ஜீவபாவம் முன்னைவிட மெலிந்து கரைந்துபோயிருக்கும். ஆனாலும் இருக்கும். அப்போதெல்லாம் இன்னும் கரையணும் என்ற பக்தியநுஸந்தானத்தைத் தொடர வேண்டும்.

முமுக்ஷுதையைச் சொல்லும்போது "ஸ்வஸ்வரூப அவபோத"த்தைச் சொன்னார். இப்போது பக்தியைச் சொல்கிற இடத்தில் "ஸ்வஸ்வரூப அநுஸந்தானம்" என்கிறார். 'அவபோதம்' என்பது 'விழிப்பு'. ஆத்ம விழிப்புக்காகவே விடுதலை பெறவேண்டும் என்று இச்சைப்படுவதுதான் முமுக்ஷுதை என்றார். அப்படிச் சொல்லும்போது [ச்லோக] ஆரம்பத்திலேயே இத்தனை நாழி நான் சொல்லி வந்த 'அஹங்கார'த்தைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். தனி ஜீவனுக்குப் பிள்ளையார் சுழியான, பரம ஸூக்ஷ்மமான அஹங்காரத்திலிருந்து ஆரம்பித்து நல்ல ஸ்தூலமான தேஹம் வரையிலான மாயா கல்பித பந்தத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்; வெறுமே அதிலிருந்து விடுபட்டால் போதாது; "ஸ்வஸ்வரூப அவபோதத்திற்காக, அதாவது ஆத்மாவில் விழிப்புறுவதற்காகவே அப்படி விடுபட விரும்ப வேண்டும்" எனறார். இப்படி, விழிப்புறுவதற்காக ["அவபோதாய"] விடுதலைக்கு ஆசைப்பட்டுத் தவித்தால், கடைசியில் அந்த விழிப்பு ஏற்பட்டு அதனாலேயே ["அவபோதேன"] விடுபட்டு நிற்கலாம் என்று முடிவாக அர்த்தம் பண்ணிக் கொண்டோம் – ச்லோகத்தில் "அவபோதேன" என்று இருப்பது முடிவு நிலையில் என்றும், "அவபோதாய"வாக ஆரம்பிப்பதே அப்படி முடியும் என்றும் பார்த்தோம்.

அஹங்கார பந்தத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற முமுக்ஷுதைக்கு அப்புறம், பந்தப்படுத்துவதில் அஹங்காரத்திற்குள்ள பலத்தைப் போக்கி இளைக்க வைக்கும் பக்தியை logical sequence-ஆக வைத்திருக்கிறார். அந்தஃகரணத்தில் அடங்கும் மனோ-புத்தி-அஹங்காரங்களில் மனஸை சம தமாதிகளினால் அடக்கி, புத்தியை ச்ரத்தையாலும் ஸமாதானத்தாலும் அடக்கி, அப்புறம் அஹங்காரத்தை முமுக்ஷுதையால் அடக்கி, பக்தியால் நன்றாக மெல்லிசு பண்ணுவதாக sequence போகிறது.

வாஸ்தவத்தில் ஆத்மா விழித்துக்கொள்ளும்போது – அதாவது, எப்போதுமே அது விழிப்புடன் இருப்பதுதானென்றாலும் இப்போது நமக்குத் தெரியாமலிருப்பதால் தெரிகிற நிலையை விழித்துக்கொள்வதாகச் சொல்வது; அப்படி அது ஆகிறபோது – ஆஸாமியே [தனி ஜீவனாக இருக்கும் ஸாதகனே] காலிதான்! ஆனால் வாஸ்தவத்தில் இல்லாமல், 'இப்படி ஸ்வப்ரகாசமான ஆத்மா மாயையின் இருட்டால் நமக்குத் தூங்கினாற்போலாகி விட்டதே! அது விழித்துக்கொள்ள வேண்டும்' என்று நாம் நினைக்கிறபோது நாமும் இருப்போம்; ஆத்மா விழித்துக் கொண்டதாக ஒரு பாவனை, கல்பனை – இன்னவென்று வர்ணிக்க முடியாமல் – அப்படி ஒரு எண்ணமும் இருந்து கொண்டிருக்கும். அது வர்ணனாதீதந்தான். ஆனாலும் ஆத்மா, ப்ரம்மம் என்கிறபோது அகண்டமாக ஏதோ ஒன்று, பரம சுத்தமாக ஒன்று, ஸச்சிதானந்த மயமாக ஒன்று என்று ஒரு நினைப்பு இருக்கவே செய்யும். அகண்டம், ஸச்-சித் எதுவும் இன்னவென்று வரையறுத்து 'கன்ஸீவ்' பண்ண முடியா விட்டாலும் அவற்றைப் பற்றிய ஏதோ ஒரு அபிப்ராயம் இருந்துகொண்டிருக்கும். அந்தஃகரணம் அடியோடு அடிபட்டுப் போகிற வரையில் ஏதாவது எண்ணம் இருந்து தான் தீரும் என்பதில், இப்படி ஆத்மாவைப் பற்றியும் பாவமோ, பாவனையோ எதுவோ ஒன்று இருக்கத்தான் செய்யும். இப்படி ஆத்மா விழித்துக்கொண்டதாக பாவிக்கும்போது அதைத் தத்வமாக மாத்திரம் நினைக்காமல் உயிராக, உயிருள்ள தத்வமாக நினைக்க வேண்டும். அப்புறம் நம்முடைய சிற்றுயிரை அதற்கு அர்ப்பணித்துவிடும் பாவத்தைப் பெற்று இடைவிடாமல் அப்படி ஈடுபட்டிருப்பதுதான் பக்தி. அவபோதத்திற்கு அப்புறம் அநுஸந்தானம். தூக்கத்திலிருந்து முழிக்கப் பண்ணுவது முதலில்; முழித்துக்கொண்டுவிட்டு அதனிடம் உறவு கொண்டாடுவது அடுத்தாற்போல! உறவும் போய் ஒன்றே ஆகிவிட வேண்டும் என்பதை லக்ஷ்யமாகக் கொண்டு உறவு கொண்டாடுவது!

" [ஆத்மாவைப் பற்றி] இப்படி அப்படி என்று ஒன்றும் நீ 'கன்ஸீவ்' பண்ணாமல் அது வாஸ்தவத்தில் எப்படியிருக்கிறதோ அப்படித் தெரியட்டும், ஆட்கொள்ளட்டும் என்று வெறுமே பார்த்துக்கொண்டிரு. ஸத்-சித், அகண்டம் என்றெல்லாம் அடைமொழி எதுவுங்கூட கொடுக்காதே! 'எப்படியோ அப்படி' என்று விட்டுவிட்டு இரு" என்று சொல்வதுண்டு. அப்படிப் பண்ணுவது கஷ்டந்தான் என்றாலும் அட்வான்ஸ்ட் நிலையில் முடியாததில்லை. அடைமொழி கொடுத்து பாவித்துக்கொண்டே போகும் போது, தானாகவேகூட ஒரு ஸ்டேஜில் 'இதெல்லாம் என்ன ஜோடிப்பு?' என்று விட்டு விட்டு, 'உள்ளபடி பார்ப்போமே!' என்று தோன்றும். அப்படி எந்த பாவனையுமில்லாமல் வெறுமே பார்க்கிறபோது [ஆத்ம] தத்வம் ஒரு வெறுமையாக, பாழாக, சூன்யமாகத் தோன்றக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஆகையினாலே [ஆத்மாவைக் குறித்து] வேறே ஒரு கன்ஸெப்ஷனும் இல்லாவிட்டாலுங்கூட, அது வெறும் பாழில்லை, உயிர் என்ற அடிப்படையை மட்டும் விட்டு விடக்கூடாது. உயிர் என்றவுடனேயே நாமும் அடிப்படையில் உயிரேயாகையால், தானாக உறவு ஏற்பட்டு விடும். உறவு ஏற்படுகிறதென்றால் அன்பு வந்துவிட்டதென்று அர்த்தம். நிஜ அன்பாக அதை ஆக்கிக் கொள்ள வேண்டும் – சிற்றுயிருக்கு அந்தப் பேருயிரிலிருந்து எதையும் பெற்றுச் சேர்த்துக் கொள்கிற தப்பான அன்பாக இல்லாமல், இதை அதில் சேர்த்து, அது இதை அப்படியே உட்கொள்ள வேண்டும் என்று தவிக்கும் உண்மை அன்பாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த உறவு, உயிர் தெரிவதற்காகத்தான் 'ஸ்வ-ஸ்வரூப அவபோதம்', 'ஸ்வ-ஸ்வரூப அநுஸந்தானம்' என்று இரண்டு இடத்திலேயும் 'ஸ்வரூபம்' என்று போட்டிருக்கிறார். 'ஸ்வ-ஸ்வரூப' என்பதில் இரண்டு 'ஸ்வ' வருகிறது. முதல் 'ஸ்வ'வுக்குத் 'தன்னுடைய' என்று அர்த்தம். இரண்டாவது 'ஸ்வ'வுக்கு 'இயற்கையான என்று அர்த்தம். 'ஸ்வ-ஸ்வரூபம்' என்பது தன்னுடைய இயற்கையான ரூபம் — இப்போது மாயை கலந்து செயற்கை ரூபத்திலிருக்கும் ஜீவனின் இயற்கையான, உண்மையான, மாயைக் கலப்பில்லாத ரூபமான ஆத்மா.
(இந்த பகுதியின் உரை மேலும் நாளை தொடரும்)
*மஹா பெரியவா திருவடிகள் சரணம்*

****************************************************

"Deivathin Kural*
 (Vol.6) in Tamil 
*ADVAITA-SAADHANAA*
(Kanchi Maha-Swamigal's Discourses)
(English rendering : V. Krishnamurthy)

Atman full of life, Not just an Abstraction*
( Continuing from yesterday)

That was the first half of the shloka. In the second half he gives the 
definition of Bhakti: 
 
*sva-svarUpAnu-sandhAnaM bhakti-rity-abhidhIyate*
Bhakti is said to be the unbroken union with one's own natural Self – the 
Atman. *bhaktiH iti abhidhIyate* means 'it has been named bhakti'. 
Do 'anusandhAnaM' of one's own natural state, says he. What is 
'anusandhAnaM'? *sandhAnaM* means a unification or joining with 
something. A meeting'! If that union stays continuously, it is 
'anusandhAnaM'. 
Does unification with the Atman mean that Atman is one thing, and the 
JivAtman that fuses with it is another? No. No union or joining with the 
Atman is possible. Even this kind of little or minute duality is not 
permitted there. The merging, the fusing, the union -- all these are out of 
place here. What happens is, having 'swallowed' /'consumed' the JIva
that pines to unite, pines with love and anguish – in other words, having 
swallowed the antaH-karaNa (inner organ), It stands alone. So it is not a 
question of 'anusandhAnaM' of the Atman which is the Real Nature. It 
has to be immersed in the constant memory of the Atman and the filling 
up of the chittam with that – this is what we should understand by 
'anusandhAnaM'. In the case of the intellect also this is what we did. It 
was said that the intellect should be established and rested in shuddha-
brahman; but intellect cannot approach anywhere near shuddha-
brahman and so we understood it to mean that the intellect should 
dwell on matters or teachings or the Shastras pertaining to Brahman. In 
the same way here also, to say that one should do 'anusandhAnaM' on 
the Nature of the Atman, is only to mean that the 'anusandhAnaM' (being 
in continuous union with the Atman) is of the thoughts about the Atman.
This anusandhanaM begins well before sannyAsa. But it is further 
strengthened and deepened after sannyAsa and in due course the 
sAdhaka gives himself up totally, and the Atman alone shines thereafter. 
Continuous fusion or merging is certainly the Bhakti out of Love. 
One thing should be said about the para-brahman consuming the JIva-
bhAva snd Atman alone remaining. It is not that the consumption is 
done in one go. It consumes but then it also regurgitates. Again it 
swallows; again it regurgitates. The state of being in samAdhi, and then 
coming down from samAdhi – these are both the swallowed and 
regurgitated states. Everytime the JIva-bhAva is consumed and later spit 
out it comes more emasculated and dissolved. But it still is. And those 
are the times when the anusandhAnaM with bhakti has to continue with 
the hope of further dissolution. 
When he talked about *mumukShutA* (in shloka 27) he mentioned *sva-
svarUpa avabodhaM*. Now when he is talking about bhakti, he says 
*sva-svarUpa anusandhAnaM*. 'avabodhaM' means an awakening.
MumukShutA was said to be to desire that one should get Release for the 
sake of the awakening to the Atman. In the beginning of the shloka (27) 
itself his reference is to the 'ahamkAra' that I have been talking about all 
along. The subtle ahamkAra is the 'alphA' of the JIva. 
Starting from that and ending with the physical body, everything is a 
bondage, which is an imagination because of mAyA; it is from this 
bondage we have to get Release. Just a Release is not enough; "That 
Release is to be obtained for the purpose of awakening to the Real Nature 
of one's Self (for *sva-svarUpa avabodha*). If one pines in anguish 'for 
this awakening' (*avabodhAya*), then one gets that awakening and by 
that itself (*avabodhena*) one may get his Release – that is how we 
understood it. In fact in shloka 27: 
*ahaMkArAdi dehAntAn bandhAn-ajnAna-kalpitAN / 
sva-svarUpAva-bodhena moktum icchA mumukShutA *// 
the word *avabodhena* is to be in the context of the end stage, whereas 
what begins with *avabodhAya* (for the awakening) ends with the 
awakening. 
Thus mumukShutA is the desire for relief from the bondage of the ego; 
after the mumukShutA he places bhakti in the logical sequence. This 
bhakti emasculates the power of the ego. Among the mind and intellect 
and the ego (which together make up the antaHkaraNa), the mind is 
tamed by shama, dama, etc., the intellect by shraddhA and samAdhAna, 
and then the ego is controlled by mumukShutA and tamed (reduced) by 
bhakti – so goes the logical sequence. 
Actually When the Atman-awakening takes place – the Atman is certainly 
awake all the time; but since we don't know it, we name the time when 
we know it as the time of Atman-awakening – at that time, the individual 
sAdhaka vanishes!. But it is not true to say we vanish. "Even the self-
luminous Atman appears to sleep for us who are overcome by MAyA; Let 
us wake up" – if and when this thought is there, then we are there. A 
vague sense of the Atman-awakening, it is only an imagined perception, 
that cannot be described as this or that – such a thought also persists. 
In fact it is beyond all description. But a thought persists about the 
Atman-Brahman, as a something which is Infinite, something that is 
perfect and pure, something that is Existence-Knowledge-Bliss. In fact 
the conception of either the Infiniteness or the sat or the cit may not be 
precise or well-defined; however there will be an idea of them all. Until 
the antaHkaraNaM totally vanishes, some thought or other will continue; 
and certainly the opinion or bhAvanA about the Atman will also continue 
to exist. When such an Atman-awakening is imagined, one should not think of it as just an abstraction, but conceive it as a living principle. 
And then lay down this little soul to That; having got to this state, 
thereafter the continuance of that same bhAva is bhakti. This is the 
*anusandhAnaM* after the *avabodhaM*. It is like waking up after sleep; 
after the awakening, next comes the setting up of a relationship! Even 
the relating should go and give place to the relationship which keeps the 
goal of an identification! 
Do not have any notion (of the Atman) this way or that way. Whatever it 
is in reality let it show, let it take over. Keep only a watch. Don't give 
attributes to it like sat, cit or infinite. Leave it 'As is'. Yes, it is difficult to 
leave it like that and be quiet. But it is not impossible at this advanced 
stage. When one keeps on conceiving it in terms of this or that attribute, 
involuntarily one may come to the stage of thinking: "Why all this build-
up? Let us see it as it is". When one sees it without any preconceived 
notion, there is the danger of it appearing as dry and void nothing. So 
even though you may not have any other conception (of the Atman) you 
should not leave off the basic truth that the Atman is not a void, it has 
life. The word 'life' reminds us that since we are also living, at the base 
we are also life and so there is an automatic relationship. And 
relationship means there is scope for love. We must make it true love. It 
should not be a wrong love that expects something for this little soul 
from that universal soul. Instead 'this' should go and unite with 'that' 
and 'that' should consume 'this'. This anguish should become a true 
love. 
In order for that relationship and that life to show itself, the Acharya has 
used the word 'svarUpa' in both places by saying 'sva-svarUpa 
avabodhaM' and 'sva-svarUpa-anusandhAnaM'. There is a double 
occurrence of 'sva' in 'sva-svarUpa'. The first 'sva' means "one's own". 
The second 'sva' means "natural". So 'sva-svarUpa' means one's own 
natural form (rUpaM). It is the natural, true, Atman, the form which is 
unmixed with MAyA, of the JIva that has an artificial form mixed with 
MAyA. 
 (This chapter will continue tomorrow also)
*Maha Periyava thiruvadigal charanam*

No comments:

Post a Comment