Friday, October 9, 2020

On Apara karyam-Musiri deekshitar

*09/07/2020* முசிறி அண்ணா தர்ம சாஸ்திரம் தலைப்பில்  மேலும் தொடர்கிறார்.

நாம் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் அபர காரியத்தை எவ்வாறு செய்து முடிக்கலாம் என்பதைப் பற்றி தர்ம சாஸ்திரம் எப்படி காண்பிக்கின்றது அதை பார்த்துக்கொண்டு வருகிறோம்.

*கட்டாயம் ஒவ்வொரு ஜீவனுக்கும் காலம் ஆனவுடன் செய்ய வேண்டியது இந்த அபர கர்மா. அந்த ஜீவன் கிளம்புகின்ற பொழுது நம்முடைய உபநிஷத்துகள், கருட புராணம் என்ன சொல்கிறது என்றால்,  சூக்ஷ்ம சரீரத்தோடு ஒவ்வொரு ஜீவனும் கிளம்புகிறது என்று காண்பிக்கிறது. முதல் தான் படித்த படிப்பு, புண்ணிய பாவங்கள், நினைவு இந்த மூன்றையும், எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஜீவனும் இந்த தேகத்தை விட்டு கிளம்புகின்றனர். நம்முடைய கட்டை விரல் அளவு தான் அந்த ஜீவனுடைய உருவம் இருக்கின்றது. அந்த ஜீவன் அந்த சரீரத்தின் மேலேயே அமர்ந்திருக்கிறது கர்மாக்கள் ஆரம்பிக்கின்ற வரையிலும்.*

முதலில் மந்திரங்கள் எல்லாம் சொல்லி *தேகசுத்தி செய்து, புண்ணியாகவாசனம் என்பதை செய்து, வெளி தேகத்தை சுத்தம் செய்து சர்வ பிராயச்சித்தம் செய்து மனது உள்பட அந்த தேகத்தின் உள்ளும் சுத்தம் செய்கிறோம். இந்த கர்மாவை ஆரம்பித்த நாம் செய்கிறோம். இதை யார் செய்ய வேண்டுமென்றால் பையன் அருகில் இருந்தால் செய்ய வேண்டும் இல்லை என்றால் வேறு யாராவது பொறுப்பு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.*

இது விஷயமாக நம்முடைய தர்ம சாஸ்திரம் சொல்லும் பொழுது, *ஒருவரும் பக்கத்தில் இல்லை என்றால் வயதில் மூத்தவர் சொந்தங்களில் யார் பக்கத்தில் இருக்கிறாரோ அவர் செய்ய வேண்டும், இரண்டு விஷயங்களிலேயே அப்படி சொல்லப்பட்டிருக்கிறது. முதலில் காசி யாத்திரை. உடம்பு தேக ஆரோக்கியம் இல்லை ஒருவரால் காசி யாத்திரையை மேற்கொள்ள முடியவில்லை என்றால், அவருக்காக ஒரு ஒரு பொறுப்பு எடுத்துக் கொண்டு காசியாத்திரை போய்விட்டு வரலாம். அதேபோல் இந்த அபர கர்மா. ஒரு ஜீவன் காலமாகிவிட்டால், அவர் புத்திரனோ அல்லது சொந்தங்களை சேர்த்து செய்ய வேண்டிய கர்மாக்களை, இன்னொருவர் பொறுப்பு எடுத்துக் கொண்டு செய்யலாம் என்று இந்த இரண்டு விஷயங்களில் காண்பிக்கப்பட்டு இருக்கிறது. கட்டாயம் இதை செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.* தூரத்து சொந்தம் என்று யாராவது பொறுப்பு எடுத்துக்கொண்டு இந்த கர்மாவை செய்ய வேண்டும் *அப்படி செய்யாமல் விட்டால், ஒருவரும் பொறுப்பு எடுத்துக்கொள்ளவில்லை கோவிந்தா என்று சொல்லி வைத்து விடுவார்கள் ஆனால், பெரிய பாவமானது ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்றது. ஆயுஸ் ஆனது பாதியாக குறைகின்றது. நம்முடைய ஆயுட்காலம் எவ்வளவு இருக்கிறதோ அதில் பாதியாக குறைகிறது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. மேலும் யார் இந்த விஷயத்தை பொறுப்பு எடுத்துக்கொண்டு செய்கின்றானோ, எல்லோராலும் கைவிடப்பட்ட பிராமணனாக இருந்தாலும் சத்திரியன் ஆக இருந்தாலும் வைசியன் ஆக இருந்தாலும் சரி யாராவது ஒருவர் பொறுப்பு எடுத்துக்கொண்டு செய்வதினால், கோடிக்கணக்கில் செலவு செய்து யாகம் செய்தால் என்ன பலன் உண்டோ, அவ்வளவு பெரிய பலன்கள் இந்த ஒரு ஜீவனை கரையேற்றுவதினால் கிடைக்கின்றது என்று அந்த அளவுக்கு பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.*

_பழைய நாட்களில் கிராமங்களில் அதற்கென்றே இருப்பார்கள். அதாவது சந்ததிகள் பிறக்காமல் இருக்கும், குடும்பங்களில் துக்கம் ஜாஸ்தியாக இருக்கும், வியாதியினால் துக்கம் பிடிக்கப்பட்டு இருக்கும்,_ *அதுபோல குடும்பத்தார்கள் இந்த மாதிரியான ஜீவன்களுக்கு கர்மாக்களை செய்வார்கள். இந்த ஜீவனை உத்தேசித்து அந்த கர்மாவை செய்வதினால், இந்த ஜீவனின் அனுக்கிரகத்தினால் அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும், வியாதிகள் நிவர்த்தியாகும். அந்த ஜீவனை உத்தேசித்து செய்கின்ற பொழுது பலிகள் எல்லாம் வழி வழியில் போடப்படுகின்றன. மூன்று இடங்களில் வழியில் போடுவார்கள். பஷ்க்ஷி பலி என்று பெயர். இது எதற்காக போடப்படுகின்றது என்றால், குடும்பத்திலே வியாதியினால் நம்மை துக்கப் படுத்திகொண்டு இருக்கின்ற பூதங்களுக்கும், இதுபோல் குடும்பத்தின் உடைய மேன்மைக்கு இடைஞ்சலாக இருந்த ஜீவன்களுக்கும் உத்தேசித்து போடுகின்ற, ஒன்று தான் பஷ்க்ஷி பலி என்று பெயர்.*

*_அவர்கள் இந்த ஜீவன் போகக்கூடிய பாதையிலும் பாழடைந்த வீடுகளிலும், கைவிடப்பட்ட மனைகளிலும் வாசம் பண்ண கூடியதான ஜீவன்கள். அவர்களை உத்தேசித்து தான் இந்த பலிகள் போடப்படுகின்றன._*

இதை போடுவது நாளே நம் குடும்பத்தில் உள்ள வியாதிகள் சுத்தமாகும். குடும்பம் மேன்மை அடையும். அந்தக் குடும்பம் மாத்திரம் வாழையடி வாழையாக வந்து கொண்டிருப்பார்கள், சௌக்கியமாக இருப்பதைப் பார்க்கலாம். காரணம் இது போல் அனாதையாக விடப்பட்ட ஜீவன்களுக்கு கர்மாக்களை செய்வதினால், அவர்களுக்கு பெரிய பெரிய யாகங்கள் செய்த பலன் கள் தானாகவே கிடைக்கின்றது. அப்படி பொறுப்பு எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

*அனைவருக்கும் அந்த தோஷமானது பாதிக்கப்படும் பொறுப்பு எடுத்துக்கொண்டு செய்யாவிடில். புத்திரன் இடத்திலே சொல்லிவிட்டு நான் இதே மாதிரி செய்கிறேன் என்று ஆரம்பித்து செய்ய வேண்டும். அரசாங்கம் சொல்லக்கூடிய தான கட்டுப்பாட்டுடன் அந்த கர்மாவை செய்ய வேண்டும். எப்பொழுது வருவான் என்று கேட்கவேண்டும் முதல் இரண்டு நாள் செய்து முடிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்குள் பையன் வந்து விடுவான் என்றால் அந்த அஸ்தியை எடுத்து வைக்கவேண்டும். அந்த அஸ்தியை பூமியில் வைக்காமல் எங்காவது ஒரு மரத்தில் கட்டி தொங்க விட வேண்டும். மூன்று நாட்களுக்குள் அவரால் வர முடியவில்லை என்றால் அஸ்தி சஞ்சயனமும் செய்துவிட வேண்டும்.*  அவன் எப்போது வருவான் என்று தெரியவில்லை என்றால் நித்திய வதியும் ஆரம்பித்துவிட வேண்டும். *யார் பொறுப்பு எடுத்துக் கொண்டு இருக்கின்றாரோ அவரே அதையும் செய்ய வேண்டும். அவருக்கு என்ன சொந்தமோ அந்த சொந்தத்தை சொல்லிக்கொண்டு கர்மாவை செய்ய வேண்டும். அதை செய்பவர் பங்காளி/ஞாதியாக இருந்தால், அவருக்கு பத்து நாட்கள் தீட்டு உண்டு அந்த தீட்டுடன், கர்மாவை செய்துகொண்டு வரவேண்டும்.* 

அல்லது 3 அல்லது 1 நாள் தீட்டு காரராக/சொந்தமாக இருக்கிறார் என்றால் *அவர் கர்மாவை ஆரம்பத்திலிருந்து பத்து நாளைக்கு தீட்டு வரும். அவர் தூரத்து சொந்தம் தீட்டு காக்கவேண்டிய சொந்தமில்லை, அதுபோல் உள்ளவருக்கு முதல் இரண்டு நாள் காரியத்தை மட்டும் செய்து நிறுத்தினால் அவருக்கு 3 நாள் தீட்டு உண்டு. அல்லது தொடர்ந்து 10 நாள் செய்தால் அந்த கரும் அவனுடைய அங்கமாக பத்து நாளும் அவருக்கு தீட்டு உண்டு. அப்படி பத்து நாட்கள் தீட்டு காத்து அந்த கர்மாவை செய்து கொண்டே வர வேண்டும். புத்திரன் வரும் வரையிலும் பொறுப்பு எடுத்துக் கொண்டு அந்த கர்மாவை செய்து கொண்டு வரவேண்டும்*
 மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.

No comments:

Post a Comment