Wednesday, October 14, 2020

Entry of Hanuman in Valmiki Ramayan

Courtesy: Sri.Balasubramaniam Vaidyanathan
வந்தார் ஹனுமான்
இன்றைக்கு நான் எழுதிக்கொண்டிருக்கும் இராமாயணத்தில் ஹனுமான் வந்தார்.
பம்பையைக் கடந்து ரிஷ்யமூக பர்வதத்தை நோக்கி இராமலக்ஷ்மணர்கள் வருகையில், ஸுக்ரீவன் அச்சமுற்று தன் கூட்டத்தினருடன் மலைகளைத்தாவி ஓடினான். மலயகிரியை அடைந்து தன் ஆலோசகர்களுடன் நிற்கையில்,
ततस्तं भयसंविग्नं वालिकिल्बिषशङ्कितम्।
उवाच हनुमान्वाक्यं सुग्रीवं वाक्यकोविदः|| 4.2.13
सम्भ्रमस्त्यज्यतामेष सर्वैर्वालिकृते महान्।
मलयोऽयं गिरिवरो भयं नेहास्ति वालिनः||4.2.14
यस्मादुद्विग्नचेतास्त्वं प्रद्रुतो हरिपुङ्गव।
तं क्रूरदर्शनं क्रूरं नेह पश्यामि वालिनम्|| 4.2.15
यस्मात्तव भयं सौम्य पूर्वजात्पापकर्मणः।
स नेह वाली दुष्टात्मा न ते पश्याम्यहं भयम्|| 4.2.16
अहो शाखामृगत्वं ते व्यक्तमेव प्लवङ्गम।
लघुचित्ततयाऽत्मानं न स्थापयसि यो मतौ|| 4.2.17
बुद्धिविज्ञानसम्पन्न इङ्गितैस्सर्वमाचर।
न ह्यबुद्धिं गतो राजा सर्वभूतानि शास्ति हि|| 4.2.18
(கிஷ்கிந்தா காண்டம், இரண்டாம் ஸர்கம்)
பயஸம்விக்னனாக, வாலியின் அநீதியை சந்தேகித்தவனாக உள்ள அந்த ஸுக்ரீவனிடம் வாக்யகோவிதனான (சொல்லின் செல்வன்) ஹனுமான் வாக்யத்தைக் கூறினான்
"எல்லாமுறையிலும் வாலியால் செய்யப்பட்டதென்ற இந்த மஹத்தான கலக்கத்தைத் துறக்கலாகும். மலயம் என்ற இந்தச்சிறந்த கிரியில், இங்கே வாலியுடைய பயம் கிடையாது. ஹரிபுங்கவா! (ஹரி - குரங்கு) நீ எவனிடமிருந்து விக்னம் எழுந்த மனத்தினனாக நீ ஓடுகிறாயோ, அந்தக் குரூரதர்ஷனனான குரூரனான வாலியை இங்கே காண்கிலேன். ஸௌம்யனே! பாவச்செயலினனான எந்த பூர்வஜனிடமிருந்து உன்னுடைய பயமோ, இங்கே அந்த வாலி இல்லை, (அதனால் வருவதான) உன் பயத்தையும் காண்கிலேன். ப்லவங்கமா! (தாவுபவன், குரங்கு) ஐயகோ! தெளிவாக இது குரங்குத்தன்மை. அவ்வாறானவன் சிற்றறிவால் எண்ணத்தில் தன்னை நிலை நிறுத்துவதில்லை. புத்தி, ஆராயந்தறிதல் கூடியவனாக இங்கிதத்துடன் அனைத்திலும் நடப்பாய். புத்தியில்லாதவற்றில் சென்றனனான ராஜா அனைத்துயிர்களையும் ஆள்வதில்லையே!"
இதுவே வால்மீகி இராமாயணத்தில் ஹனுமான் முதலில் வருமிடம் (பாலகாண்டத்தில் மற்ற வானரங்களுடன் ஹனுமானின் பிறப்பும் கூறப்படுவதின் பின்).
ஹனுமானின் நுழைவே, தைரியமூட்டுவதாகவே வால்மீகியால் கூறப்படுகிறது. இவ்விதமான கலக்கத்தைக் களைந்து தைர்யமூட்டும் அம்சமே பின் வரும் காண்டங்களில் சிறப்பிக்கப்படுகிறது. (ஸீதைக்கு தைரியம், ராமனுக்கு தைரியம், பரதனுக்கு தைரியம் போன்றவை).
ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வ ஆபத்ஹர மாருதிம்|
அபார கருணாமூர்த்திம் ஆஞ்சநேயம் நமாமி அஹம்||

No comments:

Post a Comment