Today's "amruta bindu" from Sri Chandrasekaramrutham (12.10.20):
* சகல பிரம்மாண்டமும் "சிவலிங்கம்" தான். ஸ்ரீ ருத்ரத்தில் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது.
* ஸர்வ பதார்த்தங்களும், நல்லது - கெட்டது எல்லாமும் சிவ ஸ்வரூபம் என்று ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது.
* லிங்கம் ஏன் வட்ட வடிவமாய் இருக்கிறது? வட்டமான ஸ்வரூபத்துக்குத் தான் அடி - முடி இல்லை! ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை. மற்றவற்றுக்கு உண்டு - முக்கோணத்துக்கு, சதுரத்துக்கு என்று.
* எனவே, ஆதியந்தம் இல்லாத வஸ்து "சிவம்" என்பதை "லிங்காகாரம்" உணர்த்துகிறது.
* சரியான வட்டமாய் இல்லாமல், லிங்கம் நீள் வட்டமாய் (ellipse) இருக்கிறது.
* "பிரபஞ்சமே இப்படி 'எல்லிப்டிக்'காகத் (elliptic) தான் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை (solar system) எடுத்துக் கொண்டாலும் கிரஹங்களின் அயனம் நீள்வட்டமாய் தான் இருக்கிறது" என்று நவீன விஞ்ஞாத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் "ஆவிஸ்புரத்" என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறது.
प्रदोष शङ्कर प्रत्यक्ष शङ्कर।
🙏🙏🙏🙏
No comments:
Post a Comment