Thursday, September 17, 2020

When to do Tarpana?

*15/09/2020*

*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் மஹாளய ஸ்ராத்தம் என்கின்ற தலைப்பில் காருணீக பிதுருக்களோடு சேர்த்து நம் பிதுருக்களையும் ஆராதிக்க கூடியதான, இந்த மஹாளய சிராத்தம் முக்கியத்துவத்தை பார்த்துக்கொண்டு வருகிறோம்.*

*இதிலே இந்த மஹாளய சிராத்தம் செய்ய வேண்டிய காலம் என்ன என்பதை பார்க்கின்றபோது, பொதுவாகவே நாம் பித்ருக்களை உத்தேசித்து செய்யக்கூடிய பிதுர் கர்மாக்கள் அனைத்தும் அபரான்ன  காலம் தொட்டு செய்ய வேண்டும்.*

*அதாவது குதப காலத்தில் ஆரம்பித்து அபரான்ன  காலத்தில் முடிக்க வேண்டும். இதையே தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. குதப காலம் என்றால் குகூ என்றால் பூமி என்று அர்த்தம். கோபதிஹி என்றால் சூரியன் என்று அர்த்தம் பூமிக்கு நேராக சூரியன் எப்பொழுது ஆகாசத்திலே வருகிறாரோ,* *தன்னுடைய கிரணங்கள் நேராக பூமியிலே எப்பொழுது விழுகின்ற*
*மாதிரி வருகிறாரோ, அந்தக் காலத்திற்கு குதப காலம் என்று பெயர்.*

*அதாவது மத்தியானம் 11 மணியிலிருந்து 12 மணி வரை. இந்த நேரத்தில்தான் சூரியன் பூமிக்கு நேராக வருகிறார் ஆகாசத்தில்.*

*தத்ர தத்ர மகா பலம். அப்போது ஆரம்பித்து செய்தால் நமக்கு மிகப் பெரிய பலத்தை கொடுக்கிறது என்று தர்ம சாஸ்திரம் காட்டுகிறது.*

*அனைத்து விதமான ஸ்ராத்தங்களுக்கும் பொதுவாக சொல்லப்பட்ட ஒரு காலம் இது. இந்த மஹாளய சிராத்தம் என்று வரும்பொழுது, நாம் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான சிராத்தம் மூன்று விதமாக இருக்கிறது.*

*பார்வன ஆம ஹிரண்ய விதானம் என்று இந்த மூன்றும். பிராமணர்களை வரித்து ஹோமம் செய்து பிராமண போஜனம் செய்து பிண்ட பிரதானம் செய்து செய்யக்கூடியது ஆன ஸ்ராத்தத்திற்கு பார்வன விதானம் என்று பெயர்.*

*ஒரு பிராமணர் சாப்பிடக் கூடிய* *அளவிற்கு அரிசி*
*வெல்லம் பருப்புகள் வாழைக்காய் அதை இலையில் பரப்பி தத்தம் செய்து செய்யக்கூடிய தான சிராத்தம் ஆம சிராத்தம் என்று பெயர்.*

*பிராமணர்கள் சாப்பிடக்கூடிய அளவிற்கு என்ன செலவு ஆகுமோ அதை பணமாக கொடுத்து தத்தம் செய்து செய்யக்கூடியதான சிராத்தம்  ஹிரண்ய சிராத்தம் என்று பெயர்.*

*இப்படி மூன்று விதமாக இருக்கிறது நாம் தாயார் தகப்பனாருக்கு அல்லது நம் பங்காளிகளுக்கு, செய்யக்கூடிய தான சிராத்தத்தை பார் வனமாக தான் செய்ய வேண்டும்.*

*அதேபோல் பிரேதங்களை உத்தேசித்து நாம் செய்யக்கூடியதான சிராத்தம் ஆம சிராத்தம் ஆக தான் செய்யவேண்டும்.*

*அதாவது இறந்துபோன தினத்திலிருந்து 12 நாட்களுக்குள் ஒரு நூறு சிராத்நங்களை நாம் செய்கிறோம். இவை அனைத்தையும் நாம் ஆம ரூபமாக தான் செய்கிறோம்.*

*அதாவது அரிசி வாழைக்காய் பருப்பு வெல்லம் வைத்து தத்தம் செய்து செய்கிறோம். பிரேதங்களை உத்தேசித்து செய்யக்கூடிய தானே இந்த சிராத்தத்தை ஆம சிராத்தமாக தான் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காட்டுகிறது.*

*இந்த மஹாளய சிராத்தம் என்று வரும்பொழுது இரண்டு விதமாக நம்முடைய தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது.*

*பார்வண அல்லது ஹிரண்ய விதானமாக  செய்யலாம். ஆனால் ஆம ரூபமாக செய்யக்கூடாது இந்த மஹாளய சிராத்தத்தை. பார்வன விதானம் என்றால் நாம் வழக்கம்போல் ஸ்ராத்தத்திற்காக  சமைப்பது போல் சமைத்து பிராமணர்களை வரித்து பிராமண போஜனம் செய்து ஹோமம் செய்து பிண்ட பிரதானம் செய்து செய்யக்கூடியது ஆன சிராத்தம் பார்வன விதானம்.*

*அப்படி நாம் இந்த மஹாளய சிராத்தத்தை செய்தால் குதப  காலத்திலே ஆரம்பித்து செய்ய வேண்டும். 11 - 12 மணிக்குள் ஆரம்பித்து அபரான்ன  காலத்திற்குள் முடிக்க வேண்டும்.*

*இந்த மஹாளய சிராத்தத்தை ஹிரணிய ரூபமாக செய்தால் காலை வேளையிலேயே செய்து விடலாம். அதை தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*

*பிரேதங்களை உத்தேசித்து செய்யக்கூடிய ஆம சிராத்தமாக இருந்தால் மாத்தியான்னிக  காலத்திற்குள் முடித்து விடவேண்டும்.*

*ஹிரண்ய சிராத்தம் ஆக இருந்தால் காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு மதியம் 12 மணிக்குள் முடித்துவிட வேண்டும்.*

*பார்வன விதானம் சிராத்தம் செய்தால் அபரான்ன காலத்தில் முடிக்க வேண்டும். இப்படி மூன்று விதமாக செய்யலாம்.*

*நாம் ஹிரண்ய ரூபமாக செய்யக்கூடிய இந்த மஹாளய சிரார்த்ததை காலை வேளையிலேயே செய்கிறோம் என்றால் நாம் கொடுக்கக்கூடிய அந்தப் பொருள்கள் பணத்தை தத்தம் செய்து கொடுத்தவுடன் அவர் அதை வைத்துக்கொண்டு வாங்கி சமைத்து சாப்பிடுவதற்காக வைத்துக் கொண்டு நம்முடைய தர்ம சாஸ்திரம் கால நிர்ணயத்தை செய்திருக்கிறது.*

*அதாவது ஆம ஸ்ராத்தம்  மாத்தியான்ய காலத்திலேயே செய்துவிடலாம் ஹிரணிய சிராத்தத்தை நாம் செய்யும் பொழுது சங்கம காலம் பிறந்தவுடன் அதாவது எட்டேகால் மணிக்கு பிறகு மாத்தியான்னிகம் செய்துவிட்டு இந்த ஹிரண்ய சிராத்தம் முடித்து விடவேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*

*மேலும் இந்த மஹாளய சிராத்தத்திற்க்கு என்ன  விதமான சமையல் செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி. நாம் நம்முடைய தாயார் தகப்பனார் களுக்கு செய்யவேண்டிய வருடாந்திர சிராத்தத்தில் என்ன விதமான காய்கறிகளை செய்வோமோ அதையே இதற்கும் செய்ய வேண்டும்.*

*ஒவ்வொரு குடும்பத்தார்களும் தங்களுடைய வழக்கப்படி ஒரு சமையலை வைத்துக் கொண்டிருப்பார்கள். சில காய்கறிகளை சமைப்பது சில பட்சணங்களை அதிகப்படியாக சேர்த்துக் கொள்வது, என்று குடும்ப வழக்கம் இருக்கும். அதை என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டு அதன்படி செய்ய வேண்டும்.*

*பொதுவாகவே சிராத்தத்திற்கு என்று சேர்த்துக் கொள்ளக்கூடிய காய்கறிகள் சமைக்க வேண்டியதுதான முறை இதை தர்மசாஸ்திரத்தில் விரிவாக கண்டுபிடித்திருக்கிறார்கள். என்ன விதமான காய்கறி வாங்கி என்ன விதமாக சமைக்க வேண்டும்? இதை அடுத்த அடுத்த உபன்யாசங்களில் பார்ப்போம்.*

No comments:

Post a Comment