Thursday, September 24, 2020

Thirumangai Azhwar Paasurams

திருமங்கை ஆழ்வார்
மின்னுருவாய் முன்னுருவாய் வேதம் நான்கில்
→விளங்கொளியாய் முளைத் தெழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
→பிறப்பிலியாய் இறப்பதற்கை எண்ணா(து) எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
→புனலுருவாய் அனலுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் சின்ற எந்தை
→தளிர் புரையும் திருவடி என் தலை மேலவ்வே

*அறு சீரடியினாலாகிய தாண்டகத்தினைக் குறுந்தாண்டகம் என்றும் எண் சீரடியால் அமைந்ததினை நெடுந்தாண்டகம் என்றும் பகரப்படுகிறது.

*பாடலின் ஒவ்வொரு அடியும் இடையிலே தாண்டுவதை இந்தப் பாடல்களில் காணலாம். பாடலின் அகத்தே தாண்டுவது தாண்டகம்.

14. முதல் திருவந்தாதி(100 பாசுரங்கள்)-பொய்கை ஆழ்வார்
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச்-செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று

*கடலினால் சூழ்ந்த இவ்வுலகை அகழியாக கொண்டு, கடலை நெய்யாகக் கொண்டு,கதிரவனை திரியாகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன்.

*பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் சம காலத்தவர்கள்.இவர்கள் மூவரும் முதலாழ்வார்கள் ஆவர்.

*முன்னொரு காலத்தில் ஒருநாள், திவ்யபிரபந்த விளைநிலம் என்று சொல்லப்படும் திருக்கோவலூரில், பலத்த மழை பெய்ய, பொய்கையாழ்வார் ஒரு குடிசையில் மழைக்காக ஒதுங்கினார்.

அவ்விடத்தில், ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம். சிறிது நேரம் கழித்தது, பூதத்தாழ்வார் நுழைந்தார். பின்னர், பேயாழ்வாரும் அங்கு வந்தார். இன்னும் சிறிது நேரம் கழித்து, அவர்கள் மூவரையும், நான்காவதாக ஒருவர் நெருக்குவதுப் போல் இருந்தது.

*நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், அவர்கள் பாசுரங்கள் மூலம் விளக்கேற்றினர்.பொய்கையார்,

15. இரண்டாம் திருவந்தாதி(100 பாசுரங்கள்) –பூதத் ஆழ்வார்
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்

*அன்பை விளக்காக்கி, ஆர்வத்தை நெய்யாக்கி, சிந்தனையை விளக்குத் திரியாக்கி ஒளிவிடுகின்ற ஞானச்சுடரை, ஞானத்தமிழ் கொண்டு ஏற்றுகின்றேன் எனத் தம் சொல் மாலையைத் தொடங்கியவர் பூதத்தாழ்வார்.

*ஐம்புலன்கள் ஆகி நின்றவனும், ஐம்பெரும் பூதங்களாகி உலகத்து உயிர்களை வாழ வைப்பவனும் உலகளந்த பிரான் எனத் தம்முள் பெருமாளைக் காணும் ஆழ்வார், தம் மனம் திருமாலைத் தேடி ஓடுகின்றது என்று தம் நிலையை வெளிப்படுத்துகின்றார்.

16. மூன்றாம் திருவந்தாதி(100 பாசுரங்கள்)-பேயாழ்வார்
திருக்கண்டேன் பொன் மேனிகண்டேன், திகழும்
அருக்கண் அணி நிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன், புரிசங்கம் கைகண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று

*இவர்கள் ஏற்றிய விளக்கில், மூன்றாவது ஆழ்வார் (பேயாழ்வார்), பரம்பொருளாகிய திருமாலின் பொன் மேனியை,  ஆழி என்னும் சக்ரம், மற்றும் புரிசங்கத்துடன் கண்டார் .நெருக்கத்தின் காரணம், திருமாலே என்று உணர்தனர்.

17. நான்முகன் திருவந்தாதி (96 பாசுரங்கள்)-திருமழிசை ஆழ்வார்
நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்
தான் முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான்-யான் முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து

*நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய் சங்கரனை படைத்தான் யான் முகமாய் அந்தாதி மேல்இட்டு அறிவித்தேன் அழ்பொருளை சிந்தாமல் கொண்மினீர்

18. திருவிருத்தம் (100 பாசுரங்கள்)-நம்மாழ்வார்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே

*மனிதனிடம் பொய் நிறைந்த ஞானம் உள்ளது. பொல்லாத ஒழுக்கம் உள்ளது. நல்லொழுக்கம் அவனிடம் இல்லை. அழுக்கேறிய உடல்தான் உள்ளது. சுத்தமான உடல் இல்லை. – இப்படிப்பட்ட மனிதப் பிறவியை வைத்துக்கொண்டு கடவுளைக் காண இயலவில்லை. எனவே அவன் "கடவுள் இல்லை' என்று சொல்வது எவ்வளவு அபத்தம்.

*வானவர்களின் தலைவனே! இறைவனே! உலகினைக் காத்து அருளும் நீ, பல வகைப் பிறப்புகளை எடுக்கிறாய். நாங்களோ பொய்யே நிலைபெற்ற அறிவும் , தீய நடத்தையும், அழுக்குப் பதிந்த உடம்பும் கொண்ட மனிதப் பிறவியில் உழல்கிறோம். இப்படிப்பட்ட பிறவி அமையாதபடி நீதான் அருள வேண்டும்"

19. திருவாசிரியம் (7 பாசுரங்கள்)-நம்மாழ்வார்
செக்கர் மாமுகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடி, அஞ்சுடர் மதியம் பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ் பசுஞ் சோதி மரகதக் குன்றம்
கடலோன் கைமிசைக் கண் வளர்வது போல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து, சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப, மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சு வினைக் கவர்தலை அரவினமளி யேறி
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவனிய னிந்திரன் இவர் முதலனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே.

*பவழங்களாலே சிவந்த இடங்களையுடையதும் பசுமையான நிறத்தையுடையதுமான ஒரு பச்சை மாமலையானது சிவந்த மேகத்தை அரையில் உடுத்தி, சூரியனையும் சந்திரனையும் , நக்ஷத்திரங்களையும் அணிந்து கடலரசனுடைய கைமேலே பீதாம்பரம், திருவபிஷேகம் கண்டிகை முதலான பல திருவாபரணங்களைச் சாத்திக்கொண்டு படுத்துக்கொண்டிருப்பதுபோல அழகிய வாயும் கண்களும் சிவந்திருக்கப்பெற்று பசுமையான திவ்யமங்கள விக்ரஹத்தின் நிறமானது மற்ற ஒளிகளெல்லாவற்றிற் காட்டிலும் மேலோங்கி விளங்கப்பெற்று அலையெறிகின்ற கடலினிடையே விஷத் தொழிலையும் கப்புவிட்டுக் கிளர்கின்ற(பல) தலைகளையுமுடைய திருவனந்தாழ்வானாகிற சயனத்தின் மீது ஏறி யோகநித்திரையில் அமர்ந்து சிவன் பிரமன் இந்திரன் முதலிய எல்லாத் தேவகள் சேவிக்கும்படியாக பள்ளிகொண்டிருக்கிற தாமரைப் பூவைத் திருநாபியிலே உடைய சர்வேஸ்வரனே மூன்று லோகங்களையும் அளந்த அழகியதிருவடிகளை யுடையவனே!

20. பெரிய திருவந்தாதி (87 பாசுரங்கள்)-நம்மாழ்வார்
முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,
இயற்றுவாய் எம்மொடுநீ கூடி-நயப்புடைய
நாவீன் தொடைக் கிளவியுள் பொதிவோம், நற்பூவைப்
பூவீன்ற வண்ணன் புகழ்

*எம்பெருமானைப் பற்றிப் பேசுகையிலே முற்பட்டிருக்கிற மனமே நீ (தனிப்பட்டுப் போகாமல்) என்னோடு சேர்ந்து காரியத்தை நடத்த வேணும்; (நாம் இருவருஞ் சேர்ந்து நடத்த வேண்டிய காரியம் என்னவென்றால்) எம்பெருமானுடைய திருக்கல்யாணகுணங்களை அன்பு பொறுந்திய நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே அடக்குவோமாக

21. திருவெழுகூற்றிருக்கை(1-பாசுரம்;46 lines)-திருமங்கை ஆழ்வார்
ஒரு பேருந்தி யிருமலர்த் தவிசில்,
ஒரு முறை அயனை யீன்றனை….⇒121(A)
ஒரு முறை இரு சுடர் மீதினி லியங்கா, மும்மதிள்
இலங்கை யிருகால் வளைய, ஒரு சிலை…⇒12321(B)
ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில்
அட்டனை, மூவடி நானிலம் வேண்டி,
முப்புரிலொடு மானுரி யிலங்கும்.
மார்வினில், இரு பிறப் பொருமாணாகி,
ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை…⇒1234321(C)

*ஏழு படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாக ஏறி நின்று அப்படிக்கட்டில் உள்ள எண்களால் தொகையிட்டுப் பாடி ஏறுவதும், இறங்குவதுமாகப் பாடுவது ( A to N) எழுகூற்றிருக்கை.
முதலில்  121
அடுத்தது 12321
அடுத்தது 1234321
அடுத்தது 123454321
அடுத்தது 12345654321
அடுத்தது 1234567654321 இருமுறை (என கீழ்கண்டவாறு மொத்தம்-14 : A to N )

121
12321
1234321
123454321
12345654321
1234567654321
1234567654321

1234567654321
1234567654321
12345654321
123454321
1234321
12321
121

இந்த ப்ரபந்தம் ஒரு  தேர் போல் அமைந்திருப்பது.   இம்மாதிரி அமைப்பில் புனையப்பட்ட பெருமானைப்பற்றிய திவ்யப்ரபந்தமே திருஎழுகூற்றிருக்கை.

A) பிரம்ம சிருஷ்டி செய்தவன் (121)
B) லங்காபுரியை அழித்தவன் (12321)
C) வாமன அவதாரம் எடுத்தவன்(1234321)
D) கஜேந்த்ரனுக்கு அருள் புரிந்தவன்
E) மஹான்களாலே வணங்கப்படுபவன்
F) ருத்ரனால் அறியப்படாதவன்
G) வராஹாவதாரம் செய்தவன்
H) பாற்கடலில் யோக நித்திரை செய்பவன்
I) வர்ணாச்ரம தர்மத்துக்கு நிர்வாஹகன்
J) நப்பின்னைப் பிராட்டியை மணந்தவன்
K) பாஹ்ய மதஸ்தர்களால் அறியப்படாதவன்
L) பஞ்ச பூதங்களுக்கு பரிவர்த்தகன்
M) திருமார்பில் பிராட்டியை கொண்டவன்எங்கும் வியாபித்த
N) ஸர்வ நிர்வாஹகனன்

22. சிறிய திருமடல்(1-பாசுரம் ;77½ lines)-திருமங்கை ஆழ்வார்
காரார்வரை கொங்கை கண்ணர்
கடலுடுக்கை சீரர்சுடர் சுட்டி
செண்களுழிப்பெராற்று………….
………………………………………….

*திருமங்கையாழ்வார், தம்மை நாயகியாகவும், திருமாலை நாயகனாகவும் கொண்டு பாடுமிடத்தில்,  காதல் கைகூடப் பெறாமல் ஏங்குவதால் மடல் ஏறும் முயற்சியை நாயகி மேற்கொள்வதாக அமைத்து,

*சிறிய திருமடல், பெரிய திருமடல் என்று இரண்டு மடல் பாடல்களைப் பாடியுள்ளார்.

*பழைய தமிழ் இலக்கியங்களில், தலைவனே காதல் கைகூடப் பெறாமல் மடலேறும் மரபு உண்டு.ஊர் முழுவதற்கும் பறையறைந்து தலைவியின் படத்தை வரைந்து பனை ஓலைக் குருத்தில் குதிரை செய்து அதன்மீது ஏறி ஊர்வலம் வருவான் தலைவன்.

*ஆனால் நாயகியாகத் தன்னைப் பாவித்துப் பாடும் ஆழ்வார்,  மரபை மாற்றித் தலைவியே மடலேறுவதாகப் புதுமை செய்துள்ளார்.

**தமிழ் மரபில் தலைவனுக்கு மட்டுமே 'மடல் ஏறுதல்' கூறப்பட்டுள்ளது. ஆனால் இது தெய்வீகக் காதல் என்பதால் பெண்ணாகப் பாவித்துக் கொள்ளும் அடியவர் மடலேறுவது ஏற்புடையது எனலாம்.

23. பெரிய திருமடல்(1-பாசுரம்;148½ lines)-திருமங்கை ஆழ்வார்
மன்னிய பல் பொறிசேர் ஆயிர வாய்வாளரவின்,
சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்……….
…………………………………………………………………….
………………………………………………………………………

சிறிய-பெரிய திருமடலேரிய திருமங்கையாழ்வார்
   தமிழில் அகத்துறை நூல்களில் 'மடல்' ஒரு வகை. இதை பக்தி இலக்கியத்தில் முதலில் பயன்படுத்தியவர் திருமங்கையாழ்வார்.

     விரும்பிய பெண்ணை அடைய முடியாத நிலையில் மடலேறியாவது அவளைப் பெறுவேன் என்று பனை மடல்களால் ஆன குதிரை வடிவம் அமைத்து ஊர் நடுவே காதலன் பிடிவாதம் செய்து தன் காதலியை அடையும் முரட்டுக் காதல் வகை.

     அவன் மேல் இரக்கம் கொண்டு பெண்ணைப் பெற்றவர்கள் திருமணத்துக்கு சம்மதிப்பார்களாம்.

  இந்த வழக்கத்தை மாற்றிய பெருமை திருமங்கையாழ்வாருக்கு உ

No comments:

Post a Comment