Thursday, September 24, 2020

Smritis - musiri anna upanyasam

21/07/2020 முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் விளக்கத்தை மேலும் தொடர்கிறார்.

நாம் தினமும் சிறிது சிறிதாக தினமும் செய்ய வேண்டிய கர்மாக்களைச் தர்மசாஸ்திரம் மூலம் பார்த்துக்கொண்டு வருகிறோம்.

*இதை நாம் பார்த்துக் கொண்டு வருவதன் உடைய நோக்கம் நாம் செய்யவேண்டிய தான அனுஷ்டானங்களின்  பெருமைகளையும் மேலும் நமக்கு கிடைக்கக்கூடிய தான பலன்களையும் அதற்காக உள்ள சரித்திரத்தையும் பார்க்கவேண்டும் என்ற நோக்கோடு தான் பார்த்துக்கொண்டு வருகிறோம்.*

உலகத்தில் நடப்பது எல்லாம் சரியா தவறா அல்லது உலகத்தில் நடப்பது சரியில்லை என்று சொல்வதற்காக, இந்த தர்ம சாஸ்திரத்தை நாம் பார்க்கவில்லை.

*ஏனென்று சொன்னால் இப்போது சமீப காலமாக கேட்கக்கூடிய கேள்விகள் பார்க்கும் பொழுது, நீங்கள் சொல்வதற்கும் மற்றுமொருவர் சொல்வதற்கும் வித்தியாசங்கள் வருகின்றதே அப்போது எது சரி, என்று கேட்கிறார்கள்.*

இதில் எது சரி தப்பு என்று நம்மால் தீர்மானிக்க முடியாது. ஒன்றை செய்ய வேண்டும் மற்றொன்று செய்யக்கூடாது இந்த முறையில் தான் செய்ய வேண்டும் இந்த முறையில் செய்யக்கூடாது, *என்று சொல்வதற்கு நம்முடைய சாஸ்திரம் தான் பிரமாணம். சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதைத்தான் நாம் பார்த்துக்கொண்டு வருகிறோமே தவிர,* மற்றவர்கள் சொல்வது சரியா என்பதற்காக இந்த தர்ம சாஸ்திரத்தை நாம் பார்க்கவில்லை.

மற்றவர்கள் சொல்வது சரியா என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தங்கமா சாஸ்திரத்தில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் இதை நாம் பார்த்து வருகிறோம்.

*ரிஷிகள் இதை சொல்லும் பொழுது, அதாவது ஒவ்வொரு கர்மாவையும் வேதம் செய் என்று உத்தரவு பிறப்பிக்கிறது. அதை செய்ய வேண்டியது ஆன முறையையும் வேதம் காண்பிக்கிறது.* உத்தரவு பிறப்பித்தது அதை செய்ய வேண்டும் என்பதை வேதம் காண்பிப்பதை விரிவாக காண்பதுதான் தர்மசாஸ்திரம். அதாவது ஸ்மிருதிகள் என்று பெயர். இந்த வேதம் ஸ்மிருதிகள் இரண்டையும், வைத்து நமக்கு புராணங்கள் எதை எதையெல்லாம் பிரமாணமாக, எதை எப்படி செய்ய வேண்டும், இதை நம் முன்னோர்கள் எப்படி செய்தார்கள், என்று காண்பிக்கின்றது புராணங்கள்.

இந்த மூன்றையும் கொண்டு நம்முடைய ரிஷிகள் திடமாக நமக்கு காண்பித்து இருந்தால், அதை நாம் செய்ய வேண்டும்.

*நாம் நம்முடைய வசதிக்கு தகுந்தாற்போல் இந்த 2020இல் எப்படி செய்யலாம் என்று மாற்றக்கூடாது*

நம்முடைய  புத்தி சக்தியை வைத்துக்கொண்டு அந்த கர்மாக்களை மாற்றுவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. இதை ரிஷிகள் நமக்கு காண்பித்திருக்கிறார்கள்

சில இடங்களில் அதை மாற்றி செய்வதற்கும் *ரிஷிகளே காண்பித்திருக்கிறார்கள் அதற்குத்தான் யுக தர்மம்* என்று ஒரு பாகம் இருக்கிறது. அரை விரிவாக நாம் பார்க்க இருக்கிறோம்.

*அதாவது ஒவ்வொரு யுகத்திலும், ஒரு சில மாற்றங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதிலே இந்த கலியுகத்தில் எந்தெந்த கர்மாக்களை எவ்வாறு செய்ய வேண்டும், மாற்றி செய்ய வேண்டுமென்பதை ரிஷிகளை காண்பித்திருக்கிறார்கள்* அதை நாம் அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.

எந்த கர்மாவை எப்படி செய்ய வேண்டும் என்று அந்த ரிஷிகள் காண்பித்து இருக்கிறார்களோ அதை அப்படியே செய்ய வேண்டும்.

*எவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தாலும் நம்முடைய புத்தி சக்தியை வைத்துக்கொண்டு ரிஷிகள் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள் என்று மாற்றக்கூடாது.*

இந்தக் கர்மாக்களை எல்லாம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்ற பார்த்தால் *அதற்கு ரிஷிகள் கல்ப சூத்திரம்* என்ற ஒன்றை செய்திருக்கிறார்கள்.

இப்பொழுது ஆபஸ்தம்பர் ஐ நாம் எடுத்துக் கொண்டோமேயானால் 32 பிரஸ்னங்களை காண்பித்திருக்கிறார்.

*முதலில் ஸ்ரௌத சூத்திரம் என்று 24 பிரஸ்னங்களை காண்பித்துபிறகு தர்ம சூத்திரம் என்று 2*
பிரஸ்னங்கள்  கிர்கிய சூத்திரம் என்று 2
பிரஸ்னங்கள்    சில்ப சூக்தம் என்று 2 பிரஸ்னங்கள் கடைசியில்  பிதூர்மேத சூத்திரம் என்று 2 
பிரஸ்னங்கள். *இப்படியாக இந்த 32 சூத்திரங்களுக்கும் தான் கல்ப சூத்திரம்* என்று பெயர். நாம் ஆசமனம் முதற்கொண்டு எந்த காரியத்தை நாம் செய்வதாலும் இந்த 32 பிரஸ்னங்கள் தான் ஆதாரம்.

*ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அனைவருக்கும் இது சமமான தர்மம் தான்.* அதேபோல அக்னிஹோத்திரம்/ஹௌபாசனம் செய்பவர்களுக்கும், பிரம்மசாரியாக இருந்து சமிதாதானம் செய்பவர்களுக்கும், அனைவருக்கும் பொது தான் இந்த 32 
பிரஸ்னங்கள்.

ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் விசேஷங்களை காண்பித்திருக்கிறார்கள்
அது தானே தவிர மற்ற விஷயங்கள் எல்லாம் அனைவருக்கும் சமம் தான்.

இப்படி ஒவ்வொரு மகரிஷிகளும் காண்பித்திருக்கிறார்கள்
ஆபஸ்தம்பர் எப்படி கல்ப சூத்திரம் காண்பித்திருக்கிறார் அதேபோல் போதாயனரும் காண்பித்திருக்கிறார். ஆஸ்வலாயனர் என்ற மகரிஷியும் காண்பித்திருக்கிறார். இப்படி அனைத்து மகரிஷிகளும் ஏன் நமக்கு இந்த கல்ப சூத்திரம் என்பதை அனுகிரகம் செய்திருக்கிறார்கள்.

*இந்த ரிஷிகள் எப்படி சொல்லி இருக்கிறார்களோ அதை அப்படியே செய்ய வேண்டும்.*

அதாவது ஒரு மகரிஷி சொல்பமாக தான் சொல்லியிருக்கிறார் என்றாலும்கூட, அவர் சொல்வது தான் நமக்கு பிரமாணம். அவர் எந்த அளவுக்கு குறைவாக சொல்லியிருந்தாலும் அந்த அளவுக்கு நாம் செய்தால் போதும். அதுவே முழுமையாக செய்ததாகக் கருதப்படும்.

சில மகரிஷிகள் விரிவாக காண்பித்திருக்கிறார்கள் என்றால் அது அப்படியே செய்யவேண்டும். அவர் எப்படி சொல்லி இருக்கிறாரோ அதே போல் நாம் செய்தால் அதனுடைய முழுமையான பலனை நாம் அடையலாம். இதைத்தான் தர்மசாஸ்திரம் காண்பித்து இருக்கிறது.

ஒவ்வொரு மகரிஷியும் ஒவ்வொரு தர்மங்கள் ஆக செய்து நம்முடைய தர்மங்கள் கடமைகள் பிரித்து காண்பித்திருக்கிறார்கள் அதன்படி நாம் செய்ய வேண்டும். அதைத்தான் நாம் கோத்திர பிரவரங்கள் சொல்கிறோம். 

*ஒரு கோத்திரத்தைச் சொல்லி அபிவாதனம் செய்கிறோம். ஒவ்வொரு சூத்திரம் சொல்லி அபிவாதனம் செய்கிறோம். ஆபஸ்தம்ப சூத்திரஹா போதாயன சூத்திரஹா என்று சொல்கிறோம். எந்த சூத்திரத்தை நாம் அபிவாதயே சொல்கிறோமோ அந்த சூத்திரப்படி தான் நாம் கர்மாக்களை செய்ய வேண்டும்.*

அந்த சூத்திரம் முழுமையாக இல்லை என்றால் அவரே காண்பித்து இருப்பார் இன்னொரு இடத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அதன்படி நாம் அதை எடுத்துக்கொண்டு செய்ய வேண்டும். *இது எல்லாம் நம் வீட்டிற்கு செய்து வைக்கக் கூடிய வாத்தியாருக்கு தெரியும். அவர்களிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். நாம் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த தர்ம சாஸ்திரங்களை பார்த்துக்கொண்டு வருகிறோம்.*

மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.

No comments:

Post a Comment