Tuesday, September 22, 2020

Secrets of Atharva Veda

உலகம் அறிய வேண்டிய அதர்வண வேதத்தின் ரகசியங்களை தொகுத்து அனைவரும் அறிய இன்று சித்தர்களின் குரலில் விரிவாக பகிர்கிறேன். அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்..... இந்த எல்லா புகழும் எனக்கு முறையாக அதர்வண வேதத்தை  சிறு வயது முதல் முழுமையாக கற்று தந்த கேரளா சோட்டானிக்கரை பகவதி அம்மன் தேவஸ்தான குரு நாராயண நம்பூதிரிகளையே சாரும்.... இன்று நான் ஒரு மிக பெரிய வேத பண்டிதராக உலகம் போற்றும் வண்ணம் சித்தர்களின் குரல் சிவ சங்கராக உருவாக காரணமான இருந்த முக்கிய குருநாதர்களுள் ஒருவர் ஐயா அவர்கள். எங்கிருந்தாலும் அவரின் ஆத்மா உலகை ஆசிர்வதிக்கும்.... 

நம்முடைய கலாச்சாரத்தில் ஆதியில்  நான்கு வேதங்கள் உண்டு. ரிக், யஜூர், சாமம், அதர்வணம். 

இதில் வெள்ளைக்காரகள் கணக்குப்படி ரிக் வேதம் பழமையானது: சிலர் 6000 ஆண்டு பழமை என்பர்; இன்னும் சிலர் 3200 ஆண்டுகள் பழமை என்பர். அதர்வண வேதம் பிற்காலத்தியது என்பர். ஆனால் இந்துக்கள் இதை ஏற்பத்தில்லை. அவர்கள் கணக்குப்படி எல்லா வேதங்களும் கி.மு.3102 ஐ ஒட்டி வியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டவையே; அதாவது இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கும் முன்னரே 4 வேதங்களும் இருந்தன. 

சங்க காலம் முதல் தமிழர்கள் சொல்லுவது நான்மறை; அதாவது 4 வேதங்கள். ஆனால் மனு முதலானோர் சில இடங்களில் த்ரயீ வேத = மூன்று வேதம் என்பதால் வெள்ளையர்களுக்கு சிறு குழப்பம்; அவர்களுக்கு தமிழும் தெரியாது. ஆகையால் அதர்வண வேதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பர்; உண்மையில் அதர்வண வேதம் என்பது அன்றாடம் பயன்படும் மருத்துவம், தாயத்து, பேய் ஓட்டல், விஷங்களை இற க்கல், தாய் மொழி, தாய் நாடு, "பூமி என்னும் அன்னை", எதிரிகளை ஒழிப்பது எப்படி என்பது பற்றிப் பேசுவதால் அதைச் சமயச் சடங்குகள் பற்றிப் பேசும் மூன்று வேதங்களுடன் சேர்க்காமல் பேசினர். 

வேத விற்பன்னர்களின்  ஆயுதம் அதர்வண வேதம் என்று அகத்தியர் சொல்லுவார். கோபத பிராமணமோ எனில் நான்கு வேத புரோகிதர்களும் யாக யக்ஞங்களில் கலந்து கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஆகையால் வெளிநாட்டினர் சொல்வதை நம்ப வேண்டியதில்லை. 

அதர்வண வேதத்தில் 6000 மந்திரங்கள் 760 துதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சில அபூர்வ தாவரங்கள் அரிதானவை. அவைகளைத்தான் தாயத்துகளாக அணிந்து வந்தனர். 

அதர்வண வேதத்தை 20 காண்டங்களாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு காண்டத்திலும் எது சம்பந்தமான மந்திரங்கள் உள்ளன என்று சுருக்கமாக உங்களுக்கு புரியும் வண்ணம் இன்று சித்தர்களின் குரலில் பகிர்கிறேன்; இந்தப் பட்டியலைப் பார்த்தாலேயே நம் முன்னோர்களின் சிறந்த நாகரீகமும் உயர்ந்த சிந்தனையும் உடையவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும். 

1ம் காண்டம்: 
***************

முதல் காண்டத்தின் முதல் மந்திரமே வாசஸ்பதி என்னும் வாக் (பேச்சு) தேவனையும் வசோஸ்பதி என்னும் செல்வ தேவனையும் வணங்கும் மந்திரம் ஆகும். 

கல்விக்கான மந்திரங்கள் 

வெற்றிக்கான மந்திரங்கள் 

எதிரிகளை அழிப்பதற்கான மந்திரங்கள் 

நோயை அகற்றுவதற்கான மந்திரங்கள் 

தண்ணீர் தேவதை பற்றிய மந்திரங்கள் 

வரங்களைப் பெறும் மந்திரங்கள் 

தர்மம் தொடர்பான மந்திரங்கள் 

இதில் உள்ளன. ஒவ்வொன்றிலும் 4 மந்திரங்களைக் கொண்ட 

35 துதிகள் முதல் காண்டத்தில் காணப்படுகின்றன.

2 ஆம் காண்டம்: 
*******************

இதில் ஒவ்வொன்றிலும் 5 மந்திரங்களைக் கொண்ட 36 துதிகள் காணப்படுகின்றன. 

நோயைக் குணப்படுத்தும் மந்திரங்கள் 

ஜங்கிடா மணி என்னும் தாயத்து மந்திரங்கள் 

அக்னி, இந்திரன், பரப் பிரம்மம் பற்றிய துதிகள் 

இந்தக் காண்டத்தில் இருக்கின்றன. 

ஜங்கிடா மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது! 

3 ஆம் காண்டம்: 
*******************

ரிக் வேதத்தில் இடம்பெற்ற வசிஷ்ட மஹரிஷியின் முக்கிய மந்திரம், கொஞ்சம் மாறுதல்களுடன் இதில் உள்ளது. இது செல்வத்தை வேண்டும் மந்திரமாகும். 

எதிரிகளத் தோற்கடிப்பதற்காக்ன மந்திரம் 

தேச ஒற்றுமைக்கான மந்திரம் 

பட்டாபிஷேக மந்திரம் 

பர்ண மணி என்னும் அபூர்வ தாயத்து மந்திரம் — இந்தக் காண்டத்தில் இருக்கின்றன. 

பர்ண மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது! 

இதில் ஒவ்வொன்றிலும் 6 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன. 

4 ஆம் காண்டம்: 
*******************

இதில் ஒவ்வொன்றிலும் 7 மந்திரங்களைக் கொண்ட 40 துதிகள் காணப்படுகின்றன. 

ரிக் வேதத்தில் உள்ள யார்? என்னும் மந்திரம் இதில் இடம்பெறுகிறது. யார் என்றால் சம்ஸ்கிருதத்தில் க:– இது பிரம்மாவுக்கும் பெயர்! அதாவது ஓரெழுத்துச் சொல். இதை வைத்து யாரை வணங்குவது என்று மந்திரம் முழுதும் திரும்பத் திரும்ப வரும். 

இதில் அதிசய ஒற்றுமை என்ன வென்றால் தமிழ் "க" பிராமி லிபியிலிருந்து வந்தது. அந்த "க" பிராமியில் சிலுவை வடிவில் இருக்கும். அது எகிப்தில் கடவுளைக் குறிக்கும் சித்திர எழுத்து. ஆனால் வெறும் சிலுவையாக இல்லாமல் இரு புறமும் கைகளை உயரத் தூக்கிய மனிதன் போல மேல் நோக்கிய கோடுகளுடன் இருக்கும். 

விஷத்தை அகற்றும் மந்திரம் 

எதிரிகளை நாடு கடத்தும் மந்திரம் 

பலத்தை அதிகரிக்கும் மந்திரம் 

தூக்கமின்மையை அகற்றும் மந்திரம் 

சங்கு கிழிஞ்சல்களைக் கொண்டு தாயத்து செய்யும் மந்திரம் 

மரங்கள், மழையை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள் 

மூலிகைகள் பசுக்களை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள் 

பாவங்களைப் போக்கும் மந்திரங்கள் 

புழுக்களை அகற்றும் மந்திரங்கள் 

சக்தியை அதிகரிக்கும் மந்திரங்கள் 

5 ஆம் காண்டம்: 
*******************

இதில் ஒவ்வொன்றிலும் 12 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன. 

குஸ்ட, சிலாச்சி, லக்ஷா மணி என்னும் தாயத்து மந்திரங்கள் 

இவை என்ன தாவரம் என்பது பற்றி தகவல் கிடைக்கவில்லை. 

வெற்றிக்கான மந்திரங்கள் 

பிரம்மன் பற்றிய மந்திரங்கள் 

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள் 

பிராமணர்கள், பசுக்களைப் போற்றும் மந்திரங்கள் 

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள் 

ஆன்மீக பலத்தை உயர்த்தும் மந்திரங்கள் 

ஆயுளை அதிகரிக்கும் மந்திரங்கள் 

டாமாரங்களை அடித்து எதிரிகளை பயமுறுத்தும் மந்திரங்கள் 

ஒரு அபூர்வ பசுவை வைத்திருப்பது பற்றி அதர்வணுக்கும் வருணனுக்கும் இடையே நடக்கும் சுவையான சம்பாஷணை, 

பிராமணனின் மனைவி கடத்தல் பற்றிய செய்தி 

பிராமணர்களை ஒடுக்கும் கொடுமை 

ஆகியனவும் உள்ளன. 

போர் முரசுக்குச் சொல்வது போன்ற இரண்டு மந்திரங்கள். 

6- ஆம் காண்டம்: 
********************

இதில் ஒவ்வொன்றிலும் 3 மந்திரங்களைக் கொண்ட 142 துதிகள் காணப்படுகின்றன. 

அமைதிக்கான மந்திரங்கள் 

வளையல்கள் பற்றிய மந்திரங்கள் 

'ரேவதி' தாயத்து பற்றிய மந்திரங்கள் 

சவிதா, இந்திரன் போற்றும் மந்திரங்கள் 

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள் 

பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரங்கள் 

7 ஆம் காண்டம்: 
*******************

இதில் 118 துதிகள் காணப்படுகின்றன. 

நீண்ட ஆயுளைத்தரும் மந்திரங்கள் 

தாய் நாடு பற்றிய மந்திரங்கள் 

தாய் மொழி பற்றிய மந்திரங்கள் 

ஜனநாயக சட்டசபை பற்றிய மந்திரங்கள் 

ஆத்மா பற்றிய மந்திரங்கள் 

சரஸ்வதி மந்திரங்கள் 

கணவன்– மனைவி நல்லுறவு பற்றிய மந்திரங்கள் 

8 ஆம் காண்டம்: 
*******************

இதில் ஒவ்வொன்றிலும் 26 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன. 

பேயை ஓட்டும் மந்திரங்கள் 

ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள் 

விராஜ்- விராட் என்னும் தேவதை பற்றிய மந்திரங்கள் 

இறந்துகொண்டிருக்கும் மனிதனை எழுப்பும் குளிகை பற்றிய மந்திரங்கள் 

9 ஆம் காண்டம்: 
*******************

ஒன்பதாம் காண்டத்தில் பத்து துதிகள் இடம்பெறுகின்றன. 

இதில் விருந்தினரைப் போற்றும் நீண்ட மந்திரம் உளது. 

அஸ்வினி தேவர்களின் இனிமையான உதவி பற்றிய மந்திரமும் உளது. 

ரிக் வேதத்தில் முதல் மண்டலத்திலுள்ள தீர்கதமஸ் என்ற முனிவரின் மிகவும் புகழ்பெற்ற மந்திரம் இங்கே இடம்பெறுகிறது இதில்தான் "கடவுள் ஒருவரே; அறிஞர்கள் அவரை வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்" என்ற புகழ் பெற்ற வாசகம் வருகிறது. 

இது தவிர கிருஹப் ப்ரவேச மந்திரம் 

நோய்களைத் தடுக்கும் மந்திரம் 

பசுக்கள், காளைகளைப் பற்றிய மந்திரங்கள் 

ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன. 

10- ஆம் காண்டம்: 
*********************

இதில் ஒவ்வொன்றிலும் 25 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன. 

கேன (யாரால், எதனால்) என்ற கேள்வி மந்திரமும் 

பிரபஞ்சத்தைத் தாங்கும் ஸ்கம்ப (தூண்) என்ற மந்திரமும் 

பரப் பிரம்மம், பசுக்களைப் போற்றும் 

விஷத்தை அகற்றும் ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன

11 ஆம் காண்டம்
********************

பதினோராம் காண்டத்தில் 10 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 31 மந்திரங்கள் இருக்கும்.

மூன்றாவது துதி உரைநடையில் இருக்கிறது. பாலில் சோறு பொங்கும் விஷயம் இது. எட்டாவது துதி, பல கடவுளரின் தோற்றம் பற்றியும் மனிதனின் படைப்பு பற்றியும் பாடுகிறது.

எதிரிகளை அழிப்பதற்கான மந்திர உச்சாடனங்கள், கடைசி இரண்டு துதிகளில் இடம்பெறும்.

ருத்ரனைப் பற்றிய நீண்ட துதி இருக்கிறது.

பிரம்மசர்யத்தின் சிறப்பு

உணவு தானியம் பற்றிய பிரார்த்தனை

பிரம்மனைப் பற்றிய மந்திரங்கள்

இந்தக் காண்டத்தின் சிறப்பு

12 ஆம் காண்டம் :
*******************

தாய்நாடு பற்றிய அருமையான நீண்ட கவிதை

காச நோயைத் தடுக்கும் மந்திரம்- இந்தக் காண்டத்தின் சிறப்பு

பன்னிரெண்டாம் காண்டத்தில் 5 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 60 மந்திரங்கள் இருக்கும்

இரண்டாவது துதி அந்திம யாத்திரை பற்றியது. இதன் பாதிப் பகுதி ரிக்வேதத்தில் (10-18) இருந்து எடுக்கப்பட்டது. ஒரு பிராமணனிடமிருந்து பசுவைத் திருடினால் என்ன பாவம் வரும் என்பதை 4, 5 துதிகளில் காணலாம்.

13 ஆம் காண்டம் :
*********************

பதிமூன்றாம் காண்டத்தில் 4 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 47 மந்திரங்கள் இருக்கும்

சிவப்பு (ரோஹித) வர்ணத்தைப் போற்றும் துதிகள் இதில் அடங்கும். சிவப்பு வர்ணம் என்பது சூரியனையும் அக்னியையும் குறிக்கும்.

அந்திமக் கிரியை பற்றிய மந்திரங்களைக் கொண்ட காண்டம்

14 ஆம் காண்டம் :
*********************

இரண்டே துதிகள்; ஆனால் மொத்தம் 139 மந்திரங்கள். கல்யாணம், சாந்தி முகூர்த்தம் தொடர்பான விஷயங்கள் உள; ரிக் வேத துதி 10-85 சில மாறுதல்களுடன் காணப்படும்.

15 ஆம் காண்டம் :
*********************

இதில் 18 துதிகள் உள. உரைநடையில் உளது. புரியவில்லை என்று வெள்ளைக்காரர்கள் எழுதியுள்ளனர். இதில் விராத்தியர்கள் எனப்படும் நாடோடிப் பிராமணர்கள் பற்றி உளது. அவர்கள் யாக யக்ஞாதிகளைச் செய்யாதவர்கள்; சித்தர்கள் போல!

பரமாத்மனைப் போற்றும் மந்திரங்களும் உண்டு

16 ஆம் காண்டம் :
**********************

இதில் 9 துதிகள் உள. பெரும்பாலும் உரைநடை. தாயத்துகள், குளிகைகள் பற்றிய அதிசய விஷயங்கள் நிறைய உள்ளன.

17 ஆம் காண்டம் :
*********************

ஒரே துதி! ஆனால் 30 மந்திரங்கள். இந்திரனைக் குறித்த துதியில் விஷ்ணு, சூரியன் ஆகியோருடன் அவரை ஒப்பிடுவர். மனிதர்கள், மிருகங்கள் ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் நலன் வேண்டும் துதி!

வெற்றிக்கான பிராத்தனை மந்திரங்கள்.

18 ஆம் காண்டம் :
********************
 
நாலே துதிகள்; ஒவ்வொன்றிலும் சராசரி மந்திரங்கள் 70; அந்திமக் கிரியைகள், திதி முதலியன இதில் அடக்கம். பல துதிகள் ரிக் வேத துதிகள்- சில மாறுதல்களுடன்.

முதல் துதி யமா-யமி உரையாடல்.

19 ஆம் காண்டம் :
*********************

72 துதிகள்; ஒவ்வொன்றிலும் சராசரி மந்திரங்கள் 8. பல இடைச் செருகல் இருப்பதாக வெள்ளையர் கணிப்பர். தாயத்துகள், குளிகைகள் பற்றிய பகுதிகளும் உள. ரிக்வேத புருஷ சூக்தம் 10-90 கொஞ்சம் மாறுதல்களுடன் காணப்படும்.

நதிகள், தண்ணீர், பரமாத்மன் பற்றிய மந்திரங்கள்

28 நட்சத்திரங்கள் பற்றிய மந்திரங்கள்

அமைதி, சமாதான மந்திரங்கள்

இதன் சிறப்பு அம்சங்கள்

20 ஆம் காண்டம் :
*********************

இருபதாம் காண்டம்தான் கடைசி காண்டம்; இதில் 143 துதிகள் உண்டு. பெரும்பாலும் இந்திரனைப் பற்றிய ரிக் வேத துதிகள்; குண்டபா பிரிவு (127-136) மிகவும் வியப்பான மந்திரம்- வயிற்றைச் சுற்றியுள்ள 20 உறுப்புகள், நாளங்கள், சுரப்பிகள் பற்றீயன. பல பாடல்கள் விடுகதை போன்றவை. அசுரர்களை விடுகதை போட்டே தோற்கடித்தனர் கடவுளர்.

இது போன்ற சிந்தனைகள் இந்த வேதம்— அறிவாளிகளின் வேதம்— என்பதைக் காட்டும். முதல் துதி வாக் (பேச்சு) பற்றி துவங்கியது. இப்படிப்பட்ட அறிவு தொடர்பான செய்திகளை சுமேரிய, எகிப்திய துதிகளில் காணமுடியாது. விருந்தினரைப் போற்றும் உயரிய பண்புகள், சத்தியத்தைப் போற்றும் கொள்கைகள் இவைகள் வெளிநாட்டுச் துதிகளில் இல்லை. இவை எல்லாம் பாரத சிந்தனையின் முன்னேற்றமடைந்த நிலையைக்  காட்டும்.

       - சித்தர்களின் குரல் shiva shangar

No comments:

Post a Comment