*08/09/2020* *முசிறி அண்ணா ஷண்ணவதி தர்ப்பணம் முறையை தர்ம சாஸ்திரத்தில் இருந்து விரிவாக பார்த்துக் கொண்டு வருகின்ற வரையிலே, தற்பொழுது நடந்து கொண்டிருக்கின்ற மஹாளய பக்ஷ விஷயமாக, தர்மங்களை பார்த்துக்கொண்டு வருகிறோம்.*
*இந்த மஹாளய பக்ஷத்தில் நம்முடைய பிதுருக்கள் இல்லாமல், காருணீக பிதுருக்களையும் சேர்த்து ஆராதிக்கிறோம். இந்த காருணீக்க பிதுருக்களை சேர்த்து ஆராதிப்பதை விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால், எந்த வருடம் வரக்கூடியது ஆன மஹாளய பக்ஷத்தில் ஒரு வித்தியாசம் இருக்கிறது.*
*_அதாவது நாம் இந்த மஹாளய பக்ஷத்தில், இரண்டு விதமான சிராத்தங்களை செய்கிறோம். வருடாவருடம் செய்துகொண்டு வருகிறோம். அதாவது பக்ஷ மஹாளயம் என்று ஒன்று உண்டு ஸகிருன் மஹாளயம் என்று ஒன்று. இப்படி இரண்டு விதமான சிராத்தங்களை இந்த மஹாளய பக்ஷத்தில் நாம் செய்து கொண்டு வருகிறோம். இந்த இரண்டு இருக்கும் முறைகள் தனித்தனியாக தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது._*
*_முதலில் இந்த பக்ஷ மஹாளயம் என்பது என்ன? மஹாளய பக்ஷம் ஆரம்பித்ததிலிருந்து, 16 நாட்களும் நாம் தர்ப்பணம் ஆக செய்கிறோம். அதற்குத்தான் பக்ஷ மஹாளயம் என்று பெயர். 16 நாட்களும் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. இதற்கு காலம் ஒரு முறையாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஸகிருன் மஹாளயம் ஸ்ராத்தத்திற்கு ஒரு மாதிரியான முறை சொல்லப்பட்டிருக்கிறது._*
*அந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்கலாம். முதலில் பக்ஷ மஹாளயம் என்பதற்கான காலம் பற்றி சொல்லும் பொழுது, அதாவது ஆஷாட பௌர்ணமி லிருந்து ஆரம்பித்து, எந்த ஒரு பட்சமானது ஐந்தாவதாக இருக்கிறதோ கிருஷ்ண பக்ஷம், அதற்கு மஹாளயஹா என்று அதற்குப் பெயர்.*
*அந்த மஹாளயத்திற்க்கு ஆஷாட பௌர்ணமி லிருந்து ஆரம்பித்து ஐந்தாவது பக்ஷமாக இருக்கவேண்டும். அதேசமயம் கன்னி ராசியில் சூரியன் இருக்க வேண்டும். இது இரண்டும் எப்பொழுது அமைகின்றதோ அதற்குத்தான் மஹாளயஹா என்று பெயர். அந்த மஹாளய பக்ஷத்தில் இந்தப் பதினாறு நாட்கள் மஹாளயத்தை நாம் செய்ய வேண்டும் அதற்குத்தான் பக்ஷ மஹாளயம் என்று பெயர்.*
*_16 நாட்கள் என்பதுதான் கணக்கு. அதிலே இந்த வருடம் எப்படி என்றால், ஆஷாட பௌர்ணமியில் இருந்து ஆரம்பித்து ஐந்தாவது பக்ஷம் ஆவணி மாதமே வந்துவிட்டது. இன்னும் கன்னியா மாசமே ஆரம்பிக்கவில்லை அதாவது புரட்டாசி மாசம் பிறக்கவில்லை. கன்னியா ராசியில் சூரியன் பிரவேசித்தால் அதற்குத்தான் கன்னியா மாசம் என்று பெயர். அதாவது புரட்டாசி என்று நாம் சொல்கிறோம்._*
*ஆனால் இந்த வருடம் அம்மாவாசை அன்று தான் சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். அப்படி இருக்கின்ற பொழுது இந்த வருட மஹாளயம் எவ்வாறு செய்வது என்று தர்மசாஸ்திரம் பார்க்கும்போது, அதாவது இந்த மஹாளய பக்ஷத்தில் முதலிலோ நடுவிலோ அல்லது கடைசியிலோ புரட்டாசி மாசத்து சம்பந்தம் இருந்தால் போதும், இந்தப் பதினாறு நாட்கள் தர்ப்பணத்தை செய்துவிடலாம் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*
*அதாவது இந்த 16 நாட்கள் செய்ய வேண்டிய தானே ஷோடச மாஹாளயத்திற்கு. அதை நாம் தர்ப்பணம் ஆக செய்துகொண்டு வருகிறோம். அதை அன்ன ரூபமாகவும் செய்யலாம். ஆனால் தினமும் அன்ன ரூபமாகவே செய்துகொண்டு வரவேண்டும். அப்படி செய்து கொண்டு வரும்பொழுது அன்றே சிராத்தம் முடிந்தவுடன் தர்ப்பணம் செய்ய வேண்டும்.*
*பக்ஷ மஹாளயம் என்று 16 நாட்களும் சிராத்தம் செய்யும் பொழுது, அன்றே சிராத்தாங்க தர்ப்பணம் செய்ய வேண்டும். அல்லது தில தர்ப்பண மூலமாகவும் செய்யலாம். அதை தான் நாம் இப்பொழுது செய்துகொண்டு வருகிறோம். 16 நாட்களும் தர்ப்பணம் ஆக செய்வர். இதற்கு பக்ஷ மஹாளயம் என்று பெயர்.*
*_இதை இந்த வருடம் இந்த மஹாளய பக்ஷத்திலேயே செய்துவிடலாம். ஆனால் ஸகிருன் மஹாளயம் என்று நடுவில் ஒரு நாள் நாம் ஹிரணியம் ஆக செய்கின்றோமே அதற்குத்தான் ஸகிருன் மஹாளயம் என்று பெயர்._*
*_ஸகிருன் மஹாளயத்தை இந்த மஹாளய பக்ஷத்தில் செய்யக்கூடாது இந்த வருடம் ஏனென்றால் ஸகிருன் மஹாளயத்திற்க்கு காலம் சொல்கின்ற பொழுது, ஆஷாட பௌர்ணமிலிருந்து, ஐந்தாவது பக்ஷமாக இருக்க வேண்டும்._* *_மேலும் கன்னியா ராசியில் சூரியனும் இருக்க வேண்டும். இந்த இரண்டும் எப்பொழுது அமைந்திருக்கிறதோ_*
அப்போதுதான் இந்த
ஸகிருன் மஹாளயம் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.
*_தர்ம சாஸ்திரத்தில் அனைத்து மகரிஷிகளின் உடைய வாக்கியங்களையும் நாம் பார்க்கின்ற பொழுது, இந்த ஸகிருன் மஹாளயத்திற்க்கு கன்னியில் சூரியன் இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம் என்று காண்பிக்கின்றனர்._*
*_கன்னியா ராசியில் சூரியன் இருப்பது மிகமிக முக்கியம் இந்த ஸகிருன் மஹாளயம் செய்வதற்கு என்பதினாலேயே, அம்மாவாசை அன்று தான் மாசமே பிறக்கிறது. புரட்டாசி மாத பிறப்பு வருகின்ற அமாவாசை அன்றுதான். அப்பொழுது இந்த 16 நாட்களும் செய்யவேண்டிய தர்ப்பணத்தை இந்த பக்ஷ மஹாளயத்தில் செய்துவிடலாம். ஆனால் இந்த ஸகிருன் மஹாளயம் என்பதை எப்போது செய்ய வேண்டும் என்றால், அது கொஞ்சம் தள்ளி தான் செய்யும்படியாக வருகிறது இந்த வருடம்._*
*ஏனென்றால் ஸகிருன் மஹாளயம் செய்வதற்கு கன்யா இராசியில் சூரியன் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம் என்பதை தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது என்பது ஒரு புரம், இரண்டாவதாக அமாவாசைக்குப் பிறகு மல மாதம் வருகிறது அதாவது, ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருமேயானால் அல்லது எந்த மாதத்தில் அம்மாவாசயே வரவில்லையோ அதற்கு மல மாதம் என்று பெயர்.*
*_இந்த வருடம், புரட்டாசி மாதம் பிறந்த உடனேயே ஒரு அமாவாசை வருகின்றது, கடைசியில் ஒரு அம்மாவாசை வருகிறது. ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதினால் அதற்கு மல மாசம் என்று பெயர். இந்த மலை மாசத்தில் சில காரியங்களை செய்யக்கூடாது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. அதாவது நாந்தீ சிராத்தம், ஸோம யாகங்கள், ஆதானம் இந்த மாஹாளய ஸ்ராத்தம், காமிய கர்மாக்கள் இவை யாவும் செய்யக்கூடாது என்று இருப்பதினால், இந்த மல மாசத்தில் மஹாளய சிராத்தத்தை நாம் செய்ய முடியாமல் இருக்கிறது. அப்படி என்றால் இந்த மஹாளய சிராத்தம் எப்போது செய்வது என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்._*
No comments:
Post a Comment