Sunday, September 13, 2020

Indira Ekadashi

*இந்திரா ஏகாதஶி 13-10-20*

आश्विने कृष्णपक्षे तु इंदिरा नाम नामतः ।
तस्या व्रतप्रभावेन महापापं प्रणश्यति ।।

ஆஶ்விநே க்ருஷ்ணபக்ஷே து இந்திரா நாம நாமத: ।
தஸ்யா வ்ரதப்ரபாவேந மஹாபாபம் ப்ரணஶ்யதி ।।

க்ருத யுகத்தில் மாஹிஷ்மதி என்கின்ற நகரை கோவிந்த பக்தரான இந்த்ரஸேனன் என்கின்ற ராஜாவானவர் தார்மிக வழியில் ஆக்ஷி செய்து வந்தார் ஒருசமயம் மாஹிஷ்மதி நகருக்கு நாரத மஹரிஷி வருகை தந்தார்  மஹாராஜனும் நாரத மஹரிஷியை வரவேற்று வந்த கார்யத்தைப் பற்றி கேட்டறிந்தார் அதற்கு நாரத மஹரிஷியானவர் ஒரு முறை நான் பிரம்மலோகத்திலிருந்து யமராஜாவின் வசிப்பிடத்திற்குச் சென்றேன். அங்கு யமராஜாவின் சபையில் உன்னுடைய தர்மிஷ்டரான தந்தையைக் கண்டேன். ஒரு வ்ரதத்தை அனுஷ்டிக்க தவறியதால் அவர் அங்கு செல்ல நேரிட்டது‌.  மன்னா உனது தந்தையானவர் என்னிடம் நான் பூர்வ ஜென்மத்தில் செய்த சில பாப செயல்களால் இப்பொழுது நான் யமராஜாவின் வசிப்பிடத்தில் இருக்கிறேன். ஆகையால் என் புதல்வனை இந்திரா ஏகாதசியை அனுஷ்டித்து அதன் பலனை எனக்கு அர்ப்பணிக்குமாறு எனது மகனிடம் தெரிவியுங்கள் என்று என்னிடம்  சொன்னார். பிறகு நாரத மஹரிஷி இந்திரா ஏகாதஶி மஹிமையை இந்த்ரஸேனனுக்கு உபதேஶித்தார் அவன் ஏகாதஶி வ்ரதத்தை நல்லபடியாக அனுஷ்டித்து தன்னுடைய தந்தைக்கு அர்பணித்தான் அதன் பலனாக அவர் பரம ஸாயுஜ்யம் அடைந்தார் இந்த இந்திரா ஏகாதஶியை அனுஷ்டிப்பதாலும் வ்ரத மஹிமை கேட்பதாலும்  ஸகலபாபமும் அழிந்து நமது வம்ஶ பித்ருக்களுக்கு ஸுகதி கிட்டி வாஜபேய யாகம் செய்த பலனும் கிடைத்து பரம ஶ்ரேயஸ்ஸும் கிடைக்கும்.

ஸ்ரீ கிருஷ்ண ஶர்மா வேலூர் 9566649716

பாத்ம புராணம்

No comments:

Post a Comment